Monday, March 14, 2011

Videos we watched

சுனாமி வந்த நாளிலிருந்து, ‘ஏன் சுனாமி வந்துச்சு, சுனாமி வந்தப்போ அங்க சில்ரன்ஸும் ஆன்ட்டியும் இருந்தாங்களா, அவங்க என்ன பண்ணாங்க, குழந்தைங்க பத்திரமா இருப்பாங்களா, வானத்து வரைக்கும் சுனாமி வருமா, எப்படி எர்த்க்வாக் வரும், ஜப்பான்ல வந்தா ஏசியாக்கு வருமா.நம்பல்லாம் எங்க போவோம்,மூன் எப்படி எர்த் பக்கத்துல வரும்’....என்ற கேள்விகளின் தேடல் உலகவரைபட புத்தகத்தில் தொடங்கி கடைசியில் யூ டியூப்பில் வந்து நின்றது. நான்காவது வீடியோவைத் தவிர, மீதியை திறந்த வாய் மூடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். மறந்துவிடாமலிருக்க இங்கு சேமிக்கின்றேன்.

Friday, March 11, 2011

பப்பு த ரைட்டர் ..மீ த டைப்ரைட்டர்!

பப்புவுக்கு கதை எழுதும் ஆசை வந்தது. பள்ளியின் ‘கதை சொல்லும் நேரம்’ காரணமாக இருக்கக்கூடும். அருகில் அவளது டிராயிங் நோட்தான் இருந்தது. அதிலேயே எழுது பப்பு என்றதும் எழுதினாள். கையெழுத்து கோணலாகச் சென்றது அவளுக்குத் திருப்திகரமாக இல்லை. "கீழே போகுது, எப்படி எழுதறது, போப்பா,நான் எழுதலை" என்று மிகவும் சலித்துக்கொண்டாள்.
"சரி, நீ சொல்லு நான் எழுதறேன்" என்றேன்.one day one lion is there. one day another fox come.then that fox tell, the tank is another lion is there. that lion also come. fall down in the water. That's all.

(அவ்வ்வ்வ்...தெரிஞ்ச கதைக்கு இவ்ளோ பில்டப்பா...)"இதுதான் நமக்கு தெரியும் இல்ல, இப்போ நீயே ஒரு கதை சொல்லு, நான் எழுதறேன்"


One day one tree is there. The tree is tall tree. And one day one man come. broke the tree. And another tree biggest is coming. Another time he is broking. He goes to another. He broke that tree also. No tree is there.

One day one man come in the school. He is playing in the school. He is playing in the home also.
And Night time. He is not sleeping. Very very no time he is sleeping. (அப்டின்னா, எவ்ளோ நேரம் ஆகியும் தூங்கலையாம்....!) Morning only he is sleeping. (ஓ...இது சுயசரிதையா அப்போ!!) getting up night and playing. Another morning go to school. go to prayer.do activities. Another morning going to school. Writing home works. Come to home. And sleep.
That's all. (பாவந்தான் இல்ல...)


One day one fox come to the one home. That day tiger come to his home. One day both is friends.That fox called to his horse. Tiger come to the fox's house.Fox give lunch for tiger. Lunch eat it and tiger called fox his house. He called deers and rabbits. Then both that lunch -- eating deers and rabbits. (ஆ...பெரிய சூழ்ச்சியால்ல இருக்கு!) Both are friends to any house. That's all.

Monday, March 07, 2011

சப்-கோர்ட்டும் கோயிலும்

தோழியுடன் கோர்ட்டுக்குச் சென்றிருந்தேன். குடும்பநல நீதிமன்றம். எப்போதும்போல ஒரு குர்தியும், ஜீன்ஸும் அணிந்திருந்தேன். ஒவ்வொரு எண்ணாக அழைத்துக்கொண்டிருந்தார்கள். தோழி அவளது எண்ணுக்காக
முன்னால் நின்றிருந்தாள்.அவளது எண்ணை அழைக்கும்போது நீதிபதிக்கு முன்னால் வருகையை காண்பிக்க வேண்டும் என்பதற்காக.

எனக்குப் பின்னால் இரு பெண்கள் வந்தனர். அப்போதுதான் வந்திருக்க வேண்டும் அவர்கள். ஒருவர் நடுத்தர வயதுள்ளவர். மற்றொருவர் இளம்பெண். நடுத்தர வயதுள்ளவர் என் தோளைத்தட்டி அழைத்தார். திரும்பியதும், ‘முடிய கட்டுங்க’ ஒரு ரப்பர் பேண்டாவது போடுங்க’என்றார். அவருக்கு மறைக்கிறது போல, தொந்திரவாக இருக்கிறது அவருக்கு என்று எண்ணி, கைப்பையில் வைத்திருந்த கிளிப்பை எடுத்தேன். அதற்குள் அவர், “முடிய இப்படி விரிச்சி வுடக்கூடாதும்மா, கோர்ட்டுக்கு இப்படி வரக்கூடாது, வெளில எழுதியிருப்பாங்களே, பார்க்கல” என்று லேசாக அதிர்ச்சியைக் கொடுத்தார்.

’எங்கே எழுதியிருக்காங்க, அப்படில்லாம் இருக்கா என்ன? பழங்காலத்து படத்துல இந்த கனம் கோர்ட்டார் அவர்களேல்ல்லாம் வரும்போது ஜட்ஜூங்களே அழகழகா சுருட்டை முடியில்லே வச்சிருப்பாங்க! ஏன் இந்தம்மா இப்படி சொல்றாங்க? இவ வேற என்கிட்டே சொல்லவேயில்லையே’ என்று தோழியையும் மனதுக்குள் வைதேன்! சரி, அவரிடமே கேட்கலாமென்றால் அந்த அம்மாவை காணோம். அதற்குள் எங்கோ மாயமாக மறைந்துவிட்டார்.

அவரிருந்த இடத்துக்கு அந்த இளம்பெண் வந்தார். அவரும், “முடிய கட்டுங்க, இல்லன்னா தப்பா எடை போடுவாங்க” என்றார். என்ன தப்பா எடை போடுவாங்க என்று கேட்க ஆசையாக இருந்தாலும் தோழியை நினைத்து அமைதி காத்தேன். தொடர்ந்து அவர் “நீங்க இந்துவா” என்றார். நான் ’இல்லை’யென்று தலையசைத்தேன். “கிறிஸ்டியனா?” அமைதியாக இருந்தேன். ”முஸ்லீமா?” என்னடா கொடுமை இது, இவர் ஏன் இதெல்லாம் கேட்கிறார் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். முடிவாக, “உங்க பேர் என்ன” என்றார் மிரட்டலாக.
”ஏன் இதெல்லாம் கேக்கறீங்க”, என்றேன். ”தமிழ் தெரியுமா, இந்தி மாலும்? சொல்லுங்க, உங்க பேர் என்ன?” என்று அடுக்கினார். என்னடா இது ஆம்பூருக்கு வந்த சோதனை என்று நினைத்துக்கொண்டே ”முல்லை” என்றேன்.

”இந்துதான, ஏன் பொட்டு வைக்கல, பொட்டு வைக்கணும், ஜட்ஜு அதெல்லாம்

பார்ப்பாரு, இந்துன்னா பொட்டு வைச்சிருக்காங்களா இல்லையான்ன்னு பார்ப்பார். கிறிஸ்டியன் மாதிரி பொட்டு வைக்காம இருக்காங்களா,முஸ்லீம்னா முஸ்லீம் மாதிரி இருக்காங்களான்னு பார்ப்பாரு” என்றார்.

“அவர் கம்ப்ளெயிண்டைத்தானேங்க பாக்கணும், ஏன் இதெல்லாம் பாக்கணும், கேஸை பார்த்துதானே ஜட்ஜ்மெண்ட் தரப்போறாரு,ஆளைப்பாத்தா ஜட்ஜ்மெண்ட் தரப்போறாரு” என்றேன்.


இல்லையில்லை என்று கண்டிப்புடன் தலையசைத்த அவர், ” நாம இந்து, இந்து மாதிரிதாங்க இருக்கணும், காலத்துக்கேத்த மாதிரி நாம மாறிக்க முடியுமா சொல்லுங்க, கோயிலுக்கு எப்படி போறோம், கோர்ட்டும் அது மாதிரிதான், கோயிலுக்கு ஜீன்ஸ் போட்டுட்டு போவீங்களா, சொல்லுங்க, அதுமாதிரிதான்” என்றவர் தனது துப்பட்டாவை சரி செய்துக்கொண்டார். என்ன நினைத்தாரோ, சற்று நேரத்தில் எனக்கு முன்னால் இருந்த வரிசையில் நகர்ந்து நின்றுக் கொண்டார். ( ”ஹலோ, நான் x கிலோ, நீங்க என்ன எடை போட்டீங்கன்னு சொல்லுங்க, தப்பா,சரியான்னு பாக்கலாம்” என்று அவர் நகர்ந்துக்கொண்டபோது கேட்க வேண்டும் போலிருந்தது!)
விட்டால், மண்டல விரதமெல்லாம் இருந்துவிட்டு வரச்சொல்லிவிடுவார் என்று எண்ணி அமைதியாக இருந்தேன். அப்போதுதான் யதேச்சையாகப் பார்த்தேன், அவரது உள்ளங்கையில் சாயிபாபாவின் படங்கள் மூன்றை இறுக்கமாக பிடித்திருந்ததை.


எங்களுக்கு முன்வரிசையில் இருந்த, முதல் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணும் கையில் 1008 நாமாவளி போன்ற ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

அந்தப் பெண் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. வருத்தமும் இல்லை. கோயிலுக்கும் கோர்ட்டுக்கும் என்ன சம்பந்தம் என்றும் புரியவில்லை. அவரது மூளையில் காலங்காலமாக ஏற்றி வைத்திருந்ததைதானே என்னிடமும் சொல்லியிருக்கிறார், ஆனால், அதில் உண்மை இல்லாமலும் இல்லைதானே!
உடையை, தோற்றத்தை வைத்துதானே பெண்களை எடை போடுகிறார்கள்? இதே சிந்தனைதானே, சாமானியன் முதல் சப் கோர்ட் நீதிபதியிலிருந்து உயர்நீதி மன்ற நீதிபதியின் மூளை வரை நிறைந்திருக்கிறது! ஒருவேளை அப்படி எடை போடமாட்டார்கள் என்று நிச்சயமாகத் தெரிந்தால் அந்த பெண்ணும் ஜீன்ஸ் அணிந்து வந்திருக்கலாம், யார் கண்டது!

ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது, நீதிபதிகள் பெண்களின் பக்கமிருக்கும் நீதியை கணக்கிலெடுக்காமல் நீதியளிக்கிறார்கள். அந்த பயமே அவர்களை 1008 நாமம் கொண்ட புத்தகத்துக்கும், சாயிபாபாவின் போட்டோவை இறுகப் பற்றிக்கொள்ளவும் துரத்துகிறது!

Sunday, March 06, 2011

சண்டேன்னா ரெண்டு...

வேற என்ன...பல்புதான்!

பப்பு சொன்ன விடுகதை - ”ஒளிஞ்சுக்கும்...ஒளிச்சும் வைக்கும்...அது என்ன? ”


பதில்: பப்புதானாம்!

Saturday, March 05, 2011

பாடல் அறிமுகம் - “பாரடா உனது மானிட பரப்பை”

பாடல்களை/இசையை இதுவரை எனது உள்ளார்ந்த உணர்வுகளுக்காகவும், பொழுதுபோக்காகவும், சிலசமயத்து அற்ப உணர்வுகளுக்காகவும கேட்டு வந்திருக்கிறேன். ஒரு பதிவில் தோழர் போதெம்கின் (தோழர் கோவன் பற்றிய இடுகை என்று நினைக்கிறேன்) அவர்கள் சில பாடல்களை அறிமுகப்படுத்தினார். கேட்கும்போது மிகுந்த மனவெழுச்சியை தந்த, உணர்வுகளை தட்டியெழுப்பிய பாடல்.

Paarada Unathu Maanida Parappai - 1 by sandanamullai

தேர்தல் போய் தேர்தல் வந்தாலும் தொழிலாளர்களின் வாழ்க்கைநிலை மாறிவிடுமா? நாடோடிகளாக பிழைப்பு நடத்தும் மக்களின் அவலம்தான் தீர்ந்துவிடுமா? இந்த தொழிலாளிகளின் உடலுழைப்பில் வந்த கட்டிடங்களில் அமர்ந்துக்கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு அவர்களைப் பற்றி நினைத்துப்பார்க்க முடிகிறதா? ”அதெல்லாம் அவங்கவங்க விதி” என்று ஒற்றை வார்த்தையில் அடக்கும் சாமர்த்தியமும், ”அதுக்குத்தான் அவங்களுக்குன்னே நிறைய ஸ்கீம் இருக்கே, ஒரு ரூபா அரிசி ….இப்போ வீடுன்னு நிறைய சலுகை கொடுக்கறாங்களே” என்றும் ’கருணை’யும்தானே நம்மில் பெரும்பான்மையினருக்கு இருக்கிறது? ”நம்ம பொழப்பையே பாக்க முடியல, இதுக்கு மேல நாம் என்ன செய்துவிட முடியும்” என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வதோடு முடிந்துவிடுகிறது – நமது சமூக பொறுப்பு!

தன்னலம் பாராமல், மக்களோடு இணைந்து போராடுவதே உண்மையான நேசமாக இருக்க முடியும். மதம், இனம், நிலம், வர்க்கம் பாராமல் கொடுமை களுக்கெதிராகவும் வன்முறைகளுக்கெதிராகவும் நிற்பதே விடுதலைக்கான செயல்பாடாக இருக்கும். தமது சொந்த அற்ப சுகங்களை முன்னிறுத்தி அடிமைகளாக வாழாமல், தாம் சுரண்டப்படுவதை அறியாமல் வாழும் மக்களை அரசியல் உணர்வு பெறச்செய்வதே நமது கடமை.

இப்பாடலின் மற்றொரு வெர்சனும் இருக்கிறது. அப்பாடலைப் பற்றி அடுத்த இடுகையில் பகிர்ந்துக்கொள்கிறேன். பாரதிதாசன் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது - அவர் பாரதியாரால் கவர்ந்திழுக்கப்பட்டு தனது பெயரை மாற்றிவைத்துக்கொண்டார், மரபுக்கவிதைகள் எழுதுவார் என்பதைத் தவிர! பாரதியார் அளவுக்கு பாரதிதாசனை நமது பாடநூல்களும், மற்றநூல்களும் கண்டுக்கொள்வதில்லையோ?!

Wednesday, March 02, 2011

பப்பு டைம்ஸ்

”கொன்னே புடுவேன்”

”என்ன பப்பு சொல்றே?”

”நவ்ஜோத் இல்ல ஆச்சி, ’என் தம்பிக்கு யாராவது பை சொன்னீங்களோ கொன்னே புடுவேன்’னு சொன்னான்.”

ம்ம்....

”ஆச்சி, நான் இப்டி குடுமி போட்டிருக்கேன் இல்ல, அது ஃப்வுண்டெய்ன் குடுமியாம். வேதா ரெண்டு குடுமி போட்டிருக்கா இல்ல, அது இண்டிகேட்டர் குடுமியாம். தனுஷ் சொல்றான்….திருட்டு பையன்…”

”பப்பு அப்டில்லாம் சொல்லக்கூடாது பப்பு. என்ன பேச்சு இதெல்லாம்”(அவ்வ்வ் நான் ஏன் அப்பப்போ தேஞ்சுபோன ரெக்கார்டு மாதிரி ஆகிடறேன்!)

”இல்லப்பா, புவனேஷ்வரி ஏறினாதான் அடுத்து நவ்ஜோத் ஏறமுடியும். (?) புவனேஷ்வரி ஏறிட்டு தூங்கும்போது என்னா பண்ணுவான், மெதுவா பின்னாடி போய் ஸ்னாக்ஸ் பாக்ஸ் தெறந்து சாப்பிட்டுடுவான்.”

பேருக்கு பேரு சரியா போயிந்தி.....?

”இங்க பாருப்பா, வேதாக்கு மட்டும் முடி வளந்தா போதுமா, எனக்கு முடி வளர வேணாமா, சொல்லு ஆச்சி”

”ஏன் பப்பு, உனக்கும்தான் முடி வளரணும்..”

”வேதா பேரிச்சம்பழம்ல்லாம் எடுத்துசாப்ட்டுடறா, எனக்கு குடுக்கவே மாட்டேங்கறா…அவளுக்கு மட்டும் முடி வளரணுமா? எனக்கு முடி வளர வேணாமா?”

ரொம்ப நல்ல புள்ளைன்னுதானே நினைச்சீங்க பேரிச்சம்பழத்துலேருந்து எஸ்கேப் ஆகறதுக்கான வழி…இது!

”இந்த லஷ்மி பாருப்பா,”

....

”ஒரு நாள் குடுமி போட்டுட்டு வந்தா அடுத்த நாளும் குடுமி போட்டுட்டு வரக்கூடாதாம். அதுக்கு, அடுத்தநாள்தான் குடுமி போட்டு வரணுமாம்…நான் என் இஷ்டத்துக்கு நான் என்ன வேணா பண்ணுவேன்…அவளுக்கென்ன?அப்டி சொல்லலாமாப்பா…அவங்கவங்க இஷ்டம்தானே…அவ ஏன் சொல்றா…”

ஒரு விசாரணைக் கமிஷன் பார்சல்ல்ல்ல்....