Friday, February 27, 2009

சாக்லேட் கதைகள்..

80/90-களில் வளர்ந்தவர்கள் இந்த இனிப்புகளை சுவைத்திருப்பீர்கள்..ஆனால் இப்போதும் இருக்கிறதாவென சந்தேகமாக இருக்கும்/ நான் மிஸ் செய்யும் இனிப்புகளை தொகுத்திருக்கிறேன்.. கவர்களின் வண்ணங்களையே சாக்லேட் பெயர்களுக்கும் கொடுத்திருக்கிறேன்....நினைவிலிருந்தவரை!!

Ravelgaon - ராவல்கன் டாஃபி. இது ராவல்பிண்டியில் தயாரானகும் டாஃபி, ராவல்பிண்டி பாகிஸ்தானி இருக்கு என்று பொது அறிவுத்தனமாக பேசிக்கொண்டே....நிறைய
கவர்களை சேர்த்து அனுப்பியிருக்கிறோம். ஆனால் ஒருபோதும் பரிசு வந்ததில்லை!
ole - ஸ்ட்ராபெர்ரி வடிவத்திலிருக்கும் கேண்டி! tangy-யான சுவை!
campco - கோகோ பார் சாக்லேட்....அதன் அட்டையை வெட்டி புக்மார்க்-ஆக பயன்படுத்தியிருக்கிறேன்..
cigarette choco - சிகரெட் வடிவ சாக்லேட்..மேலே பேப்பரால் சுற்றப்பட்டு உள்ளே வெள்ளை வடிவத்திலிருக்கும். ரொம்ப ஷோ விடுவோம்....ஆனால், பெரியவர்களுக்கு எரிச்சல்!
melody - மெலடி சாக்லேட். கவரின் ஒரு முனை மட்டுமே சுற்றப் பட்டிருக்கும். இப்போதும் கிடைக்கிறதாவெனத் தெரியவில்லை.
caramilk - டாஃபி. பல சுவைகள். பெரும்பாலும் பிறந்தநாளுக்கு பள்ளியில் கொடுப்பதற்கு இதுதான்!
naturo - இது கெட்டிப்படுத்தப் பட்ட பழச்சாறு. ஆரம்பத்தில் மாம்பழச் சுவையில் மட்டுமே கிடைத்தது. பின் கொய்யா மற்றும் மற்றொரு
சுவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போதும் மாம்பழச் சுவையில் கடைகளில் பார்க்கிறேன்!
pan pasaand - இது கொஞம் வெற்றிலை பாக்கு சுவையில் இருக்கும். தலை சுத்துவது போல் இருக்கும். வீட்டிற்கு தெரியாமல் சாப்பிடனும்(படிக்கற பசங்க வெத்தலை சாப்பிடக் கூடாது!)..ஆனால் வாசனையேக் காட்டிக் கொடுத்து விடும்.
doodh doodh doodh doodh…
peeyo glass full doodh…
garmiyon me daalo doodh mein ice…
doodh ban gaya very nice…

....
gimme more , gimme more
gimme gimme gimme gimme more wonderful doodh


ஒரு நாஸ்டால்ஜிக் விளம்பரம்...விளம்பர வரிகளை நோட் செய்து எழுதிக்கொண்டது இன்னும்கூட நினைவில் இருக்கிறது..பள்ளி விழாவிற்கு இந்த இசையை காப்பியடிக்கலாமாவென்றுக்கூட யோசனை செய்திருக்கிறோம்! இதேபோல், அண்டே (முட்டை)-க்கான ஒரு விளம்பரமும் இருந்தது..யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்!

Wednesday, February 25, 2009

milestone ?

காலையில் கதவை திறந்ததும் பால் பாக்கெட்டுகளையும் கீழே கிடக்கும் தினமணியையும்
எடுப்பது பப்புதான்....ஒரு பாக்கெட்டை சமையலறை மேடையிலும் இன்னொன்றை ஃப்ரிட்ஜிலும் வைத்து விடுவாள். தினமணியை டீப்பாய் மீது வைத்து விடுவாள்..அப்படி நான் எடுத்துவிட்டால் கோபம்.அழுகை..நான் திரும்ப அவற்றை வைத்துவிடவேண்டும்! மூன்று வாரங்களுக்கு முன்பு வரை!

அன்று காலையில் அவள் எடுக்காததினால், "பப்பு பால் எடுத்துக் குடு" என்றேன்.

....

பப்பு, டைம் ஆகுது..பாலை எடு!

பதிலில்லை..!

பப்பு...

நீயே எடுத்துக்கோ..நான் அழ மாட்டேன்!

-தீர்க்கமாகவும், அழுத்தமாகவும் ஒலித்தது பப்புவின் குரல்!
வழக்கம் போல அவளது சிற்றுண்டி டப்பாவில் உணவை வைத்து மூடும் சமயம், என்னருகே வந்த பப்பு, என்ன வைச்சிருக்கே என்றாள்.

சேமியா உப்புமா!

ஃப்ரிட்ஜ்-லிருந்து பிஸ்கட்களையும், உலர் பழங்களையும் கொண்டு வந்து அவளாகவே டப்பாவின் மேல்பகுதியில் போட்டுக்கொண்டு பையினுள் வைத்துக் கொண்டாள்! :-) எனக்கு இது வேண்டாமென்றோ, நான் இதை எடுத்துச் செல்கிறேனென்றோ ஒரு வார்த்தையும் இல்லை!!! நானும் ஒன்றும் கேட்கவில்லை!!


N.B : மதிய உணவாக என்ன எடுத்துச் செல்லலாமென்ற தீர்மானம் எடுக்கும் உரிமை பள்ளியிறுதி வரை எனக்கிருந்ததில்லை! ஹ்ம்ம்...

Tuesday, February 24, 2009

(படங்கள் (பேசும்) படங்கள்)மோத்தி ஆண்ட்டியும், அவங்க நீளமான சடையும்!!
தனியாக எடுத்து வைத்த கற்கள்!இது பப்பு என்னை எடுக்கச் சொன்னது..அவளாகவே வைத்துக் கொண்டது அந்த நகப்பூச்சு!

Monday, February 23, 2009

Height of all 'sales'!

புத்தாண்டு சேல், பொங்கல் சேல், தீபாவளி சேல், ஆடி சேல், சம்மர் சேல், வின்டர் சேல்,
end of season sale, கிறிஸ்துமஸ் சேல், கிளியரன்ஸ் சேல்...வரிசையில் இப்போது...:-)..

Sunday, February 22, 2009

வண்ணம் கொண்ட இதயங்கள்!!கடந்த வாரயிறுதியில் செய்தோம் இவற்றை! எதையாவது செய்ய வேண்டும், அதற்கு ஒரு தீம் வேண்டும்...சிக்கியது V-day! சார்ட் பேப்பரை வாழ்த்து அட்டைபோல் வெட்டியதும், பப்பு
முதல் பக்கம் மட்டும் வண்ணம் தீட்டினாள்! இரண்டாவது படத்தில் வண்ண இதயங்கள் இளைப்பாறுகின்றன...மேலே வண்ணப் பொடிகள் தூவப்பட்டபின்!!

பிளாக் பெயிண்டிங்-கிற்கு வண்ணங்கள் குழைத்த பின், கோர்க்கப் பட்ட இதயங்கள்..முதலில் ஒரு நேர் கோட்டில் நீள வண்ண இதயங்கள்..பின் மஞ்சளும் சிவப்புமாக!!

கடைசிப் படத்தில், சிகப்பு, இளஞ்சிவப்பு, நீலம், பச்சை..பச்சையும் நீலமும்...(ரிலையன்ஸ் இம்பாக்ட்??)...பாதி தீட்டப்படாத ஒரு அட்டையும்!! பெரிய சிவப்பு நிற வாழ்த்து அட்டை is waiting for her appa to be picked up!


(நெடுநாட்களாக, draft-ல் இருந்ததை publish செய்திருக்கிறேன்...)

Friday, February 20, 2009

பாட்டிகளிடம் பத்து கேள்விகள்!!

இப்போ 10 கேள்விகள் கேக்கறதுதானே ஃபேஷன்! யாருக்கிட்டே கேக்கலாம்னு யோசிச்சதுல சிக்கியது "அக்கா தம்பியிடம் கேக்கும் 10 கேள்விகள்", "பக்கத்து வீட்டுக்காரரிடம் 10 பத்துக் கேள்விகள்", "வேலைக்காரம்மா-விடம் 10 கேள்விகள்" அப்புறம் "பாட்டியிடம் 10 கேள்விகள்"! "பாட்டியிடம் 10 கேள்விகள்"!! சின்னதாவும் ஈசியாவும் இருக்கறதால பாட்டியிடமே 10 கேள்விகள்..பேத்தியிடமிருந்து!! :-))


1. ஒரு வேலை சொல்லிட்டீங்கன்னா அதை செஞ்சு முடிக்கற வரைக்கும் சொல்லிக்கிட்டே இருக்கீங்களே அது ஏன்?

2. கடைக்குப் போறோம்-னு தெரியும் தானே, அப்புறமும் எப்போ வருவீங்கன்னு என்னக் கேள்வி?!

3. நாங்க ஞாபகப்படுத்துங்கன்னு சொன்னதை மட்டும் கரெக்டா மறந்துடறீங்க..ஆனா எப்போவோ நாங்க எடுத்த மார்க்கெல்லாம் கரெக்டா ஞாபகமா சொல்லிக்காட்டுவீங்க! அது எப்படி?

4. நீங்க டீவி பார்க்கும்போது முக்கியமா அதுல சொல்ல வர்றதை கேக்கவிடாம கூடக்கூட நீங்களும் பேசறீங்களே..அதுல சொல்லி முடிச்சப்பறம், உங்க கருத்தை சொன்னா என்ன?

5. சீரியல் பாக்கறீங்க..ஓக்கே..ஆனா "இவன் இப்போதைக்கு முடிக்க மாட்டான், வளத்திக்கிட்டேதான் இருப்பான்" அப்படினு திட்டினாலும் அடுத்த நாளும் பார்க்கறீங்களே, அது ஏன்?!

6. கடையிலேர்ந்து பொட்டலம் சுத்தி வர்ர நூல் எல்லாத்தையும் எடுத்து அழகா சுத்தி வைக்கறீங்களே....எப்போவாவது உதவும்-னு, அந்த நூல் எல்லாம் நூத்தா ஒரு ஆடையே தைக்கலாம்-னு தோண்ற அளவுக்கு இருக்கே..எதுக்கு இவ்வளவு-ன்னு நினைக்க மாட்டிங்கறீங்களே ஏன்?

7. எல்லா பாலித்தின் கவரையெல்லாம் நீவி மடிச்சி அலமாரி பேப்பர் கீழே வச்சி வச்சி அது ஒரு சோபா அளவுக்கு ஆகிப்போச்சே..சிலதுல்லாம் ஒரு தடவைதான் உபயோகிக்கணும்னு சொன்னாலும், அதையும் எப்படிடா ரீ-யூஸ் செய்யலாம்னு ரூம் போட்டு யோசிக்கிறது ஏன்?

8. உங்க பொண்ணுங்கள்ளாமே பாட்டி ஆகிட்டாங்களே, இன்னமும் தினமும் போனைப் போட்டு வீட்டுக்கு வந்தாச்சா, எத்தனை மணிக்கு வந்தே-ன்னு கேட்டு டார்ச்சர் செய்றது ஏன்? கேட்டா இதெல்லாம் உனக்குப் இப்போப் புரியாது-ன்னு ஃபீலிங்க்ஸ் விடறது ஏன் ஏன்?

9. "எங்களுக்காவது பென்ஷன்னு ஏதாவது வருது, உங்களுக்கு அதுல்லாம் இல்லயே, உங்கக் காலத்தை நெனச்சா பயமா இருக்கு" என்று அவ்வப்போது எங்களுக்கு டெரர் உண்டாக்குவது ஏன்?

10. உங்க படுக்கையை நீங்களே சுத்தம் செய்றீங்க..ஆனா அதுல கீழே பாதுகாத்து வச்சிருக்கற செய்தித்தாள் கட்டிங்ஸ், எப்போவாவது உபயோகப்படும் kind of பொக்கிஷங்களை aka குப்பைகளை திரும்ப அங்கேயே வச்சிடுறீங்களே..ஏன்?

Wednesday, February 18, 2009

மாலினி கொடுத்தப் பரிசு!!

மாலினி நேற்றுதான் தனது எட்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினாள்.
அவளது நண்பர்களும், உறவினர்களும் அவளது பிறந்தநாளுக்கு வந்து வாழ்த்துத் தெரிவித்ததுடன் பரிசுகளும் அவளுக்குக் கொடுத்தனர்.பரிசுகள் என்றால் மாலினிக்கு மிகவும் பிரியம். பரிசுப் பொருள் சுற்றியுள்ள காகிதத்தைப் பிரிக்கும்போதே அவள் கண்கள்
ஆவலுடன் விரியும். இப்போதெல்லாம் அவளாகவே காகிதத்தை அழகாகப் பிரிக்கக் கற்றுக் கொண்டு விட்டாள். முன்பெல்லாம் அவளது அம்மா சிலப் பரிசுப் பொருட்களைத் தனியாக எடுத்து வைத்து, இன்னும் சிறிது நாட்கள் சென்றபின் தருவதாகக் கூறிவிட்டு ஒருசிலவற்றை மட்டும் கொடுப்பார்கள். ஆனால் இந்தப் பிறந்தநாளிலிருந்து எல்லாப் பரிசுப் பொருட்களையும் அவளிடமே கொடுத்து விட்டார்கள். அது மாலினிக்குத் தான் ஒரு பெரியச் சிறுமியாகிவிட்டதைப் போன்ற கவுரத்தைக் கொடுத்தது.

அவள் பரிசுகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தப்போது பொம்மைகள், கதைப்புத்தகங்கள், ஒன்றாகச் சேர்த்து ஒட்டவைக்கக் கூடிய புதிர்கள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள் போன்றப் பல பரிசுகள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். அவற்றில் ஒரே மாதிரியான இரண்டுப் புதிர்கள் இருக்கக் கண்டாள்.

”அம்மா, இங்கே பாருங்களேன், இந்த சிக்-சாக் புதிர்கள் ஒரே மாதிரி இரண்டு இருக்கு “ என்றாள் அம்மாவிடம்.

அம்மாவும், ”எங்கே காட்டு” என்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மாலினி, “அம்மா, குட்டிமணி மாமாவும், அருண் மாமாவும் ஒரே மாதிரி வாங்கியிருக்காங்க, அம்மா!” என்றாள்.

அம்மா, “ஆமா, மாலினி! இருக்கட்டும், ஒன்றை நீ எடுத்துக் கொள், இன்னொன்றை தனியாக வை” என்றார்கள்.

“ஏன், அம்மா? அதை மாமாகிட்டே கொடுத்து வேற மாத்திக்கிட்டு வரச் சொல்லலாமா?” என்றாள் மாலினி.

அம்மாவும் புன்னகைத்துக் கொண்டே, “மாலினி, கொடுத்தப் பரிசைத் திருப்பிக் கொடுப்பது நல்ல நாகரீகமல்ல”, என்றார்.உடனே மாலினி, “அப்புறம் இது பழசாயிடுச்சுன்னா இன்னொன்னு எடுத்துக்கலாமா, அம்மா” என்றாள்.

அம்மா, “இல்லம்மா, நம்மத் தேவைக்கு அதிகமா இருந்ததுன்னா, அது நம்முடையதுக் கிடையாது. அது மத்தவங்களுக்கு, அதாவது அந்தப் பொருள் இல்லாதவங்களுக்குச் சேர வேண்டியது”.

மாலினி பார்த்துக் கொண்டிருந்தாள், பதில் சொல்லாமல். அவள் மனதிற்குள், ”அப்படின்னா அம்மா இதை ஆகாஷிற்குக் கொடுக்கச் சொல்வார்களோ, அப்போ அவன்கிட்டே இருக்கும் சிவப்புக் காரை வாங்க்கிக்கலாமா” என்றெண்ணியவாறு, “அம்மா, இதை நான் என் ப்ரெண்ட்ஸ் யாருக்காவது கொடுத்துட்டு அவங்ககிட்டேயிருந்து அதிகமா இருக்கற விளையாட்டுச் சாமானை வாங்கிக்கவா, அம்மா” என்றாள்.

அம்மா, ”ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போது பொருட்கள் பரிமாறிக்கொள்ளனும். ஆனா, நாம பரிசாக் கொடுக்கும்போது, திரும்ப எதையும் எதிர்பார்க்கக் கூடாது. நம்ம இதைப் பிரசாந்த்-க்கு கொடுக்கலாம். சரியா மாலினி” என்றார்.

”கஸ்தூரி ஆண்ட்டி கூட வருவானே, அவனுக்கா”, என்றாள் மாலினி.

”ஆமா, மாலினி! தனியா எடுத்து வை , நாளைக்கு காலையிலே அவங்க வேலைக்கு வருவாங்க இல்லையா, அப்போக் கொடுக்கலாம்”, என்றார்.

“அம்மா, பிரசாந்த்கிட்டே இருந்துதுன்னா”, என்று கேள்வி எழுப்பினாள் மாலினி.

அம்மாவும், “சரி, அவங்கம்மாக் கிட்டே கேட்டுட்டு நீ கொடு, சரியா! எப்போது, நம்மக்கிட்டே தேவைக்கு அதிகமா இருக்கோ, அது நம்முடையது இல்லன்னு நினைச்சுக்கோ மாலினி. நம்மைச் சுத்தியிருக்கறவங்க யாருக்கோ,அது நம்ம மூலமா போய் சேரணும். அதனாலதான் கடவுள் அதை நம்மக்கிட்டே சேர்த்திருக்கார்” என்றார்.

”சரிம்மா”, என்றபடி மாலினியும் எடுத்துவைத்தாள், அரைகுறை மனதோடு.

அழைப்புமணியோசை கேட்டு அம்மா கதவைத் திறந்துவிட்டு “மாலினி, இங்கே வா” என்றழைத்தார்கள்.

“இங்கே கையெழுத்துப் போடுங்கம்மா” என்று கூரியர் பணியாளர் சொன்ன இடத்தில் கையொப்பமிட்டாள் மாலினி.

“ஹை!! அம்மா, பெரிம்மா எனக்கு கிஃப்ட் அனுப்பியிருக்காங்க, பாருங்கம்மா, இது தபால் தலைகள் சேகரிக்கும் புத்தகம்தானே!” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

அம்மாவும், “ஆமா, அவங்க உன்கிட்டே சொன்ன மாதிரி, அதைத்தான் அனுப்பியிருப்பாங்க,மாலினி! பார்த்தியா, நீ மத்தவங்களுக்குக் கொடுக்கணும்னு நினைச்சவுடன், உனக்கு ஒரு கிஃப்ட் வருது” என்றார்.

மாலினியும், ”ஆமா, அம்மா நான் பிரசாந்த்-கிட்டே இருந்துச்சுன்னா அவங்க அக்காவுக்கு அந்தப் புதிரைக் கொடுப்பேன், அம்மா. ”, என்று சொல்லிவிட்டு, பிறந்தநாளுக்கு வந்திருந்தவர்களுக்கு ”நன்றி” சொல்லி வாழ்த்தட்டை எழுதத் தொடங்கினாள்பி.கு 3 : தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருப்போர் எனது வங்கி கணக்கிற்கு அனுப்பி விடவும்! (மாரல் ஆஃப் த ஸ்டோரி!)

பி.கு 2 : கதை எனதுக் கற்பனையே. அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரலாமென்று விரும்புவோர் தயைச் செய்து சுட்டிக் காட்டவும்.

பி.கு 1: what an irony!! :-) சிறுமியாக இருந்தபோது பெரியவர்களுக்கான கதைகளும், பெரியவர்களானப் பின் சிறுவர்களுக்கானக் கதையும் எழுதுவதையெண்ணி யாரும் எள்ளி நகையாடவேண்டாம் :-))...பப்பு படிக்க நான் எழுதி வைக்கும் கதைகள்!

Tuesday, February 17, 2009

alpha"beasts"!!

சசியின் பத்மா பற்றிய பதிவில் பார்த்தபோது இங்கேயும் அப்படி நடந்தது நினைவுக்கு வந்தது!
மழையின் காரணமாக விடுமுறை வாய்த்த நாளொன்றில் பப்பு பள்ளியை நினைவுகூர்ந்து மோத்தி ஆன்ட்டியாக மாறியிருந்தாள். "I spy with my little eyes" என்று வார்த்தைகளைக் கற்கும் விளையாட்டு போல! அவளது விலங்கு பொம்மைகளை வைத்து விளையாடியபோது எடுத்தது.கவனித்தால்,"I spy..., something here begins with கொ..கொரங்கு/க..கரடி" என்று சொல்வது கேட்கும்!! :-)
(எடுத்து மூன்று மாதங்களுக்கும் மேலாயிற்று!)

கற்றுக்கொண்ட புதிதில், I spy என்று சும்மா இருக்கும்போதுக் கூட சொல்லிக் கொண்டிருப்பாள். அவள் சொல்வது எனக்கு I spy with my little eyes..வடை சாப்பிட்டியா?" என்பதுபோல் இருக்கும்! அதற்காகவே அதை அடிக்கடி சொல்லச் சொல்லிக் கேட்பதுண்டு!:-))

பப்பு டைம்ஸ்!!

பள்ளிக்கு கொண்டு செல்லும் தண்ணீர் குடுவையையே (பாட்டில்) வீட்டிலும் உபயோகிக்கஅ ஆசைப்படுவாள் பப்பு சிலநேரங்களில். அந்த குடுவையோடுதான் பார்த்தேன் அவளைக் கடந்துச் சென்றபோது! ஆனால், விரலால் எதையோ எடுத்து உள்ளே போட்டுக் கொண்டிருந்தாள்!ஆமாம், எதையோ டீப்பாயிலிருந்து எடுத்து குடுவையில் போட்டாள்..

இப்பொழுதுதானே சிப்ஸ் கொடுத்தேன், அதை பிய்த்து தண்ணீரில் போடுகிறாளோ??அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்...ஆனால், பப்பு கண்டுக்கொண்டதாகத் தெரியவில்லை! திரும்ப எதையோ, விரலால் எடுத்து உள்ளே போட்டாள்! குடுவையை எடுத்து குடிக்கப் போனாள்! என்ன புதுப் பழக்கம் இது? என்ன எடுத்து போடுகிறாள்? அவளிடமிருந்து பிடுங்கினேன்!

“என்ன பப்பு, என்ன எடுத்துப் போடறே..கீழே இருக்கறதச் எடுத்து சாப்பிடக் கூடாதுன்னு தெரியுமா இல்லையா?!”

என்று கூறியவாறு, குடுவைத் தண்ணீரை கீழே ஊற்ற எத்தனிக்கும்போது,

“தண்ணி மேலே வந்திருக்கு, நான் குடிக்கப் போறேன்..குடு..குடு” - பப்பு

புரிந்துக் கொள்ள சில நிமிடங்களானது எனக்கு! அட..

எனது பார்வை அவளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

“நான் கல்லெல்லாம் எடுத்துப் போட்டேன் இல்ல..தண்ணி மேலே வந்திருக்கு..”

ஓ...தாகமெடுத்த காகமாக மாறி, கற்பனைக் கற்களை எடுத்து போட்டு, கற்பனையிலே தண்ணீர் மேலே வரக் கண்டிருக்கிறாள்...:-)அவளின் கற்பனையை அறிந்துக் கொள்ளாமல் அதைக் கலைத்துவிட எத்தனித்திருக்கிறேனே!!

பப்புவின் இந்தச் செயலுக்குப்பின் இருப்பதன் பெயர்தான் புனைவோ!!
அதைத் தொடர்ந்து நாங்கள், காகம், நரி நாடகமும் விளையாடினோம்..சிப்ஸை வாயில் கவ்விய காகம் அவள். அவளைப் புகழும் குள்ள நரி நான்! அதுவும், “காக்கா காக்கா ஒரு பாட்டுப் பாடு” என்று மட்டும் சொல்லக் கூடாது, “ நீ ரொம்ப அழகா இருக்கே” என்றுச் சொல்லவும் வலியுறுத்தினாள்! ஆனால் காகம் சில சமயங்களில் பாதியைக் கடித்துவிட்டு மீதியை நரிக்குக் கொடுத்துவிட்டு பாடியது..சில சமயங்களில் கைகளில் வைத்துக் கொண்டும் பாடியது.. ஒருமுறை உட்கார்ந்து முழங்காலில் வைத்துவிட்டு பாடியபோது, “காக்காதான் காலில் வைத்துக் கொள்ள வேண்டும் ,கால் அழுக்குதானே” என்று சொன்னப் பிறகு, மென்று விழுங்கிவிட்டு பாடியது!! ம்ம்..நன்றாகத்தான் இருந்தது...(சிப்ஸூங்க!!), காகத்தின் குரலும், முன்னேற்பாடுகளில்லாத அந்த நாடகமும்!!

பப்புவை ஏமாத்தறது.. என்றப் பதிவில் விடுத்திருந்த எச்சரிக்கைக்கு நல்ல பலனிருந்தது! பப்பு ஏமாறுவதை விரும்பாத ஆயாஸ், தாத்தா (parents from both sides!)எல்லோரும் வாரயிறுதியில் அவளை சந்தித்தனர்! பெரிம்மா ஒரு கான்ப்ரென்ஸூக்காக வந்திருந்ததால், ஞாயிறு காலையே கிளம்பிவேண்டியிருந்தது! ஞாயிறு மாலையே MIL,FIL & BIL கிளம்பிவிட, அம்மா மட்டுமே தங்கியிருந்தார், பப்புவுக்காக திங்களன்று விடுப்பெடுத்து! அழுத பப்புவிற்கு கிடைத்தது, லாலிபாப்பும், வேஃபர்களும்!! எனது லாலிபாப்பும் வேஃபர்களும் எங்கே?!!

Saturday, February 14, 2009

Happy V-day!!

தூங்கும் முன் வழக்கமாய் பப்பு சொல்லும் வசனம்தான்..

ஆச்சி, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்!!

எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும் பப்பு!!

ஏன் என்னை பிடிக்கும்? (அவளுக்கும் இருக்கும் 'ஏன்' டீமான் இது!!)

நீதான் என் பப்பு....குட்டிப் பாப்பா!


வெண்மதி பிடிக்காது? ஆகாஷ் பிடிக்காது..list goes on...

ம்ம்..பிடிக்குமே..எல்லாரையும் பிடிக்கும்..உங்க ஸ்கூல்ல, இந்த ஊர்ல இருக்கற எல்லா பாப்பாவையும் பிடிக்கும்!!

அவள் என்ன நினைத்து அப்படி கேட்பாளெனத் தெரியாது..எதைச் சொன்னாலும் தொக்கி நிற்கும் ஏன் என்ற ஒரு கேள்வி..முடிவிலா கேள்விகள்!! அப்படிதான் இந்தக் கேள்வியும்! ஆனால், எனக்குள் யோசனையைத் தூண்டும் கேள்வி! ஏன் என் நேசம் பப்புவோடு மட்டுமே நிற்க வேண்டும்..எல்லா குட்டிப் பாப்பாக்களுக்கும் எனது அன்பு!!
முடிவாக, V-day என்பது அன்பைச் சொல்லும் நாளெனில், இதோ, எனது சின்னஞ்சிறிய ஆர்டிஸ்ட் உங்களை புன்னகையோடு வாழ்த்துகிறாள்...பப்பு @ சித்திரக்கூடத்தை தொடரும், தொடர்ந்து வாசித்து ஊக்கப்படுத்தும் அனைவரையும்!!

Friday, February 13, 2009

பப்புவை ஏமாத்தறது ரொம்ப ஈசி!!

இப்போ ஒரு வாரமா எங்க வீட்டுல ஒரு நடக்கற ஒரு சம்பவம்! என்னன்னா, பப்புவை தூக்கத்திலிருந்து எழுப்ப நான் சொல்லும் பொய்...இது எனக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தையும் நினைவூட்டியது..

பொங்கலுக்கு அப்புறமா எங்களை யாருமே விசிட் பண்ணலை..எல்லா ஆயாக்களும், தாத்தாவும் ரொம்ப பிசி..கல்யாணத்துக்கு போறது, தைப்பூசம் அது இதுன்னு..(அதுவும் பெப்ரவரி, மார்ச் கொஞ்சம் கடினமான காலம் தான்..எந்த விடுமுறையும் கிடையாது..பள்ளி பரிட்சைகள்..அரசுதேர்வு விடைத்தாள் திருத்துதல்-ன்னு ஆயாஸ் ஒரே பிசிதான்!! )

ஓக்கே..புலம்பலை நிறுத்திக்கிட்டு மேட்டருக்கு வர்றேன்....தூக்கத்திலேர்ந்து பப்புவை எழுப்பனும்னா மகா கஷ்டம்....ஆனா இப்போல்லாம் “பப்பு, வடலூர் ஆயா வந்துட்டாங்க ”அப்படின்னு சொன்ன உடனே ஸ்பிரிங் மாதிரி எழுந்து கதவை போய் பார்ப்பா..அப்புறம் என்ன, பள்ளிக்கூடத்துக்கு ரெடி செய்ய வேண்டியதுதான்!

பப்பு ஒரு ஒன்றரை வயசு, ரெண்டு வயசா இருக்கும்போது நடக்கும் இது! அம்மா/பெரிம்மா வந்திருக்கும் போதுதான் எனக்கு ப்ரீ டைம் இருக்கும்! அப்போதான் படிக்காம விட்ட ஆவியெல்லாம் படிச்சுக்கிட்டு இருப்பேன் கதவை சாத்திக்கிட்டு..பப்பு வந்து, வந்து கதவை தள்ளுவா..என்னைக் கூப்பிட்டுக்கிட்டே!! நான் உடனே “ ஆச்சி இங்கே இல்லை” ந்னு சொன்னதும் நம்பிக்கிட்டு போய்டுவா! ஆனா திரும்ப வருவா..இதே ரெண்டு /மூனு தடவை நடக்கும்! :-)) அப்புறம் அம்மா/பெரிம்மா பப்புவை வந்து விட்டுட்டுப் போவாங்க, என்னைத் திட்டிக்கிட்டே! இப்போ ஒரே வித்தியாசம்..நான் அங்கே இல்லைன்னு சொன்னதுபோய் ஆயா இருக்காங்க-ன்னு சொல்றேன்!!

கடந்த நாடகளா பப்பு அவங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றதைப் பார்த்தா பாவமா இருக்கு! கனவெல்லாம் கூட அவங்க வர்றதைப் பத்திதான்!(I bet you aayas..this is not going to last forever..there comes a phase soon!!) சரியா சாப்பிடறதுக் கூட இல்லை..:(
(வந்தாலும் ஒன்றரை நாள் தான் இருப்பாங்க..பப்பு அவங்க பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பா..அப்புறம் என்ன டே இன்னைக்கு, என்ன டே வருவீங்க என்று அடுத்த வாரயிறுதியை நோக்கி ஓட வேண்டியதுதான்! அது தனிக்கதை!!)

A note to the elders of my family:

சோ,பப்புவை நான் ஏமாத்தக் கூடாதுன்னு நீங்க நினைச்சா சீக்கிரம் வந்து சேருங்க!!(VRS வாங்கினா கூட எனக்கு ஓக்கேதான் ;-) !!)

Thursday, February 12, 2009

கலாச்சாரம் - சில புரிதல்கள்!!

1. கலாச்சாரத்தைக் காப்பாற்ற (?) வேண்டிய, போற்றிப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது!!

2. வெளியே எங்கும் போகலாம்..ஆனால், இரவு 7 மணிக்கு கண்டிப்பாக வீடு திரும்ப வேண்டும்! (ராம் சேனாவின் ஃபவுண்டிங் மெம்பர் சொல்லியிருக்கார். http://www.hindu.com/mag/2009/02/08/stories/2009020850030100.htm)

3. கலாச்சாரம் பெண்கள் குடிப்பதால், நடை/உடை பாவனைகளால் மட்டுமே சீரழிகிறது!

4. கலாச்சாரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் moral policing செய்யலாம்! அது வன்முறையான வழியாகக் கூட இருக்கலாம்! யாராவது தடுக்க வருவார்கள் என்று எண்ணாதீர்கள் முட்டாள் பெண்களே.. தடுப்பது நமது கலாச்சாரமல்ல!!

5. உங்கள் சுதந்திரத்தின் எல்லையை தீர்மானிப்பவர் நீங்களல்ல! அது நீங்களாக எடுத்துக் கொள்வதுமில்லை. பெருந்தன்மையுடன் வழங்கப்படுவது! அந்த எல்லையைக் குறித்தக் கேள்விகள் கேட்காமல் இந்தியப் பெண்ணாய் அமைதியாய் இரு!

இந்தப் பட்டியலின் எண்ணிக்கையை நீங்கள் இன்னும் கூட்டிக் கொண்டே செல்லலாம்! கலாச்சாரத்தை புரிய வைத்த ராம் சேனா-விற்கு நன்றியும் அன்பும்..அதோடு இதுவும்!
நான் பப்-க்கு செல்வதை ஆதரிக்கிறேனோ இல்லையோ, காதலர் தினத்தை கொண்டாடுகிறேனோ இல்லையோ..what the heck! Its all about making a point! Saying no to "Moral policing"!!I am joining my hands!!

Tuesday, February 10, 2009

Ghajini For Kids....

ஃபார்வர்டு மெயிலில் வந்தது!

ஒட்ட'கம்' இருக்கா?

படம் வரையும் நோட்டுப்புத்தகம் தீர்ந்துப் போனது. அருகிலிருக்கும் கடையில் கிடைத்ததென்னவோ சார்ட் அட்டைகள்தான். வெட்டிக் கொடுத்தபோது, பப்புவுவிற்கும் வெட்டுவதற்குதான் ஆசையேத் தவிர வரையவில்லை! என்ன செய்யலாம்...பப்புவிற்கு வரைதலும் மெழுகுக்-வண்ணக்குச்சிகளும்(crayons) ஆயாசத்தைத் தந்த ஒரு பொழுதினில் செய்தோம் இதை! முதலில் ஒரு படத்திற்கு நான் செய்தேன், அவளைப் பார்க்க வைத்து.என்னப் படம் வரையட்டும் என்றபோது அவள் சொன்னவை சூரியனும், நிலாவும். அப்புறம் நானாகக் ”ஸ்டார் வரையலாமா” எனக் கேட்டு வரைந்தது நட்சத்திரமும், மேகமும்! ஒருவேளை சூரியனும், நிலாவும் மட்டுமே வரைய முடியும் என்று நினைத்திருந்திருக்கிறாள் போல!!

மற்றப் படங்களில் glue போட அவளுக்கு உதவி தேவைப்பட்டது..சீராக இழுக்க!
வண்ணப் பொடிகள் போடுவதுதான் அவளுக்கு மிகவும் கவர்ந்த பகுதி!
இதோ வெளியே வந்து விட்டது பப்புவின் ஸ்டார், மினுமினுப்போடு!! செய்து முடித்து நிமிர்ந்தபோது எஙகளிருவர் மேலும் மிச்சமிருந்தன, நட்சத்திரத் துகள்கள்...சிரித்துக் கொண்டே உதறியபோதும்!


Monday, February 09, 2009

Height of self-love??

மு.கு : இக்கவிதை என்பது பழைய நோட்டுப்புத்தகத்திலிருந்து அல்ல..எனது டைரியிலிருந்து! :-) எனது அறையில் ஒரு ஆளுயரக் கண்ணாடி இருந்தது. அவ்வப்போதும், அல்லது போகும் போதும் வரும்போது நின்று ஒரு பார்வைப் பார்த்துக் கொள்வது மிகப் பிடித்தமானதொன்றெனக்கு! அதன் மிகைப் படுத்தலே இக்கவிதை!!

என் கண்ணாடிக்கு..

எனக்குள், என் பூட்டிய அறைக்குள்
என் உறவுகளனைத்தும்
உன்னுடனும், புத்தகங்களுடனும்தான்!
என்னுடய உலகினில்
செய்திகள் எதுவாயினும்
நான் பகிர்ந்துக் கொள்வது
உன்னுடன்தான்....
உன்னுடன் மட்டும்தான்!
என் வாழ்வின் அர்த்தங்களையும்
வெற்றிகளையும்
முன்னேற்றங்களையும்
நான் பகிர்ந்துக் கொள்வது
உன்னுடன்தான்!
எனக்குள் நிகவும் மாற்றங்களை
எனக்கு உணர்த்தும் நண்பன்
நீதான்..
நீ மட்டும்தான்!
எனக்குள் நான் நேசிப்பதெல்லாம்
உன்னையும்
உனக்குள் தெரியும் என்னையும்தான்!

என்றும் நேசமுடன்
உன்
நிஜபிம்பம்!!
சொல்ல மறந்தது : "I am sixteen..going on seventeen" - phase டைரி!!

Friday, February 06, 2009

பப்பு டாக் & ali haider song!!

பப்பு கத்திரிக்கோல் எங்கே?

தெரியலயே..

நேத்து கட் பண்ணிட்டு இங்கேதானே வச்சேன்? பார்த்தியா?

இல்ல நான் பாக்கல!

சிறிதுநேரத்தில் ஆயாவின் அலமாரியிலிருந்துக் கிடைக்கப் பெற்றது!!

இருக்கு பப்பு, ஆயாகிட்டே இருந்துச்சு!!

நீதான் எங்கேயாவது தொலைச்சிட்டியோன்னு நினைச்சேன்...சாரி ஆச்சி!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்!!
பப்பு சீக்கிரம் சாக்ஸ் போடு!

......


போட்டுட்டியா?!

......


ஆயா : இதோ, நான் வந்துப் போட்டுக்கறேன், என்னைக் கூப்டுக்கிட்டு போ!

பப்பு: ஆச்சி யாரோட அம்மா?

(சிலசமயங்களில், ஆச்சி உங்க அம்மாவா? என்றும் மாறும்! ஆச்சி பப்புவின் அம்மா, ஆயாவின் அம்மா இல்லை, அதனால் ஆச்சி சொல்வதெல்லாம் பப்புவிடமே..(அதை நாங்கக் கேட்கமாட்டோம் அது வேற விஷயம்!)..மேலும் ஆச்சியோடு செல்லும் உரிமை பப்புவிற்கு மட்டுமே என்பது உள்ளர்த்தம்!)90களில் உங்கள் பதின்மங்களைக் தொலைத்திருப்பீர்களேயானால், இந்தப் இந்திப் பாப்பாடலை கண்டிப்பாக ரசித்திருப்பீர்கள்! அலி ஹெய்தரின் மற்றப் பாடல்கள் பிறிதொரு பதிவில்! அதுவரை, இப்பாடலைக் கேளுங்கள்!!

Thursday, February 05, 2009

கல்லிலே கலை வண்ணம் கண்டார்..

குட்டிக் குட்டிக் கூழாங்கற்கள் கிடைத்தன!! பேப்பரில், நோட்டுப்புத்த்கங்களில் பெயிண்ட் அடித்து ஓய்ந்துப் போய், டேபிள், அலமாரிகளில் வண்ணம் அடிக்கத் துவங்கியிருந்தாள் பப்பு. ஏதாவது பிசிக்கலாக வேண்டும் போலிருக்கிறது....கூழாங்கற்களில் அடிக்கச் சொல்லலாமேயென்று ஆரம்பித்து...
இப்படியாகத் தொடர்ந்தது!! ஜெம்ஸை நினைவூட்டுகினறன..இல்லையா?!


இதிலிருந்து ஐந்துக் கற்களைப் எடுத்துப் பத்திரப்படுத்தியிருக்கிறேன்..கல் விளையாட்டு விளையாடும்போது பயன்படுத்திக் கொள்ளலாமென!!

Wednesday, February 04, 2009

பூனையாரே...பூனையாரேகொஞ்சம் இல்லை..ரொம்பவே பழசுதான். இருந்தாலும் மேட்டர் பஞ்சத்தை தீர்க்க பப்புவை விட்டா வேற யாரு!?!

Tuesday, February 03, 2009

சுட்டிப் பையன் பபிள்ஸ்!!

பபிள்ஸ் சீரிஸ் புத்தகங்கள் பப்புவிற்கு மிகவும் பிடித்தம். பபிள்ஸ் என்ன பண்ணான், அவங்க அம்மா என்ன சொன்னாங்க என்பது ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் மிகப் பிரசித்தம். பபிள்சை நாங்கள் ஒரு லைப்ரரியில் தான் சந்தித்தோம். அதே போல் பெப்பர் என்றும் சீரிஸ் வருகிறது.

மூன்று விஷயங்கள் எங்களைக் கவர்ந்தவை (அ) பபிள்சை பற்றிச் சொல்ல..

1. ஆங்கில வார்த்தைகளை எளிதாக அறிமுகப் படுத்த (வார்த்தைகள் தான், வாக்கியங்கள் அல்ல!!)
2. ஒவ்வொரு கதையும் அன்றாட நிகழ்ச்சிகளில் அடிப்படையில் அமைந்திருப்பது
3. கதைக் குறித்தான நினைவுட்டல் கேள்விகள்

பப்பு, சபரிக்கு பரிசளித்ததும் இந்த சீரிஸின் ஒரு கதையே! பெரும்பாலும், மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கத் தான் எனக்குப் பிரியம். முத்துலெட்சுமியுடன் சபரியை பார்க்கப் போகிறோம் என்றதும் எந்த சந்தேகமுமில்லாமல் என் மனதில் தோன்றியது பபிள்ஸ்தான் சீரிஸ்தான்! Hope sabari enjoys with Bubbles!!

அம்மாக்களின் வலைப்பூவிலும் இதுக் குறித்து!

Sunday, February 01, 2009

Y...Y...Y!?!

காய்கறி கடையில், அடுத்தவர் கூடையிலிருக்கும் காய்கள் மட்டும் எப்போதும் ப்ரெஷ்-ஆக இருப்பது போல் தோன்றுவது ஏன்?

”கழுவிட்டு சாப்பிடு” என்று ஒவ்வொரு முறையும் நினைவூட்ட வேண்டியிருக்க,பப்பு ஆரஞ்சுப் பழத்தை மட்டும் சொல்லத் தேவையில்லாமலே கழுவிவிட்டு சாப்பிடுவது ஏன்?

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் (தொடர்பதிவு)

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் எழுத அமித்து அம்மா சொல்லியிருக்காங்க! நன்றி அமித்து அம்மா!

அவங்களே சொல்லியிருக்கற மாதிரி, உண்மையில் நாம் பேசுவது தமிழா என்பதில் சந்தேகமே! காலையில் எழுந்து “பல் விளக்கு” என்று பப்புவிடம் சொல்லாமல், “ப்ரஷ் பண்ணியா?” என்றுதானே கேட்கிறேன்!! ஆனால், என் ஆயா அப்படி கிடையாது. அவர் உபயோகிப்பதில் பாதியளவுதான் நான் தமிழ் வார்த்தைகள் பேசுகிறேன். அவர் சொல்லும் பல வார்த்தைகள் தூயத்தமிழேயானாலும், கிண்டல் செய்திருக்கிறோம் அவரை அவ்வார்த்தைகளை வைத்து!! உறவினர்கள் தொலைபேசியில், “பப்புவை கூப்பிடுங்க” எனும்போது பப்பு உடனே வராவிட்டால், “சீக்கிரம் வா, காத்துக்கிட்டிருக்காங்க இல்ல” என்பார். ஆனால் நான், “சீக்கிரம் வா, வெயிட் பண்றாங்க இல்ல” என்கிறேன்!

இந்தப் பதிவில் என் ஆயா உபயோகிக்கும், ஆனால் அவர்களுக்கு இரண்டாவது தலைமுறையான நான் உபயோகிக்காத, சட்டென்று நினைவில் வரும் வார்த்தைகளை கணக்கில் கொண்டுவர பார்க்கிறேன். இப்படித்தான் வார்த்தைகள் வழக்கொழிகிறது போல!!

ஆயாவின் சொற்களை உச்சரிக்கும் முறையும் சரியாக இருக்கும். உதாரணத்திற்கு, பல்லி..அதை நாங்கள் “balli" என்று சொல்வோம். (நாங்கள் என்பது நானும், தம்பியும் என்று பொருள் கொள்க!)ஆனால் உண்மையில் அது "palli" யே!!

நான் ஒருகாலத்தில், ஆங்கில பாடல்கள், தம்பி ஒரு படி அதிகம் போய் ராக் என்று வீடே அதகளமாக இருக்கும், ஓடவிட்டிருக்கும் இசையில்! ஆயா சொல்வார்கள், “என்ன சத்தம் இது, கேட்கவே நாராசமா இருக்கு?!!” கண்டிப்பாக நாங்கள் இந்த வார்த்தையை எக்காலத்திலும் உபயோகித்ததில்லை, “ஆயா, எப்படி இருக்கு, நாராசமாவா..நாராசமா இருக்கா ஆயா” என்று அவர்களை எரிச்சலூட்டியதைத் தவிர! (Plz people, do not mistake me, I was so raw that time, என்ன பண்றது டீன்ஸ்!!)

ஏதாவது அனத்திக்கொண்டு, அல்லதுத் தொல்லைச் செய்தால், “ஏன் சிங்கிநாதம் பண்றே?” என்பார்கள். அதற்கும் கிண்டல்தான்! பிறிதொருநாளில் வீட்டில் உறவினர்கள்/நண்பர்கள் குழுமியிருந்தபோது எழுந்த பேச்சினில் ஆயா புரிய வைத்தார்கள், அது சிங்கிநாதம் இல்லை, உண்மையில் “சிணுங்கல் நாதமே!!”!
எனக்கு அதிலிருந்து ஒரு பெருமையே..ஏனெனில், நான் அரற்றுவதையும் ஆயா நாதமென்று சொல்லியிருக்கிறார்களேயென்று!! (ஆனா, பப்பு அப்படி செய்யும்போது நான் சொல்கிறேன். “சும்மா நை நை பண்ணாதே”!! :-))

பப்புவின் அரணாகயிறு (அரை ஜாண் (?) கயிறு/ அரைஞான் (??) கயிறு ) நெகிழ்ந்தபோது, ஆயா அம்மாவிடம் வாங்கிவர சொன்னது, “அரம்ப்ளி/லி”. அது ஒரு முக்கோண வடிவத்தில் சங்கிலிகளைக் கோர்த்ததுபோல் இருந்தது. அவர்கள் காலத்தில் மெல்லிய தகடு போல் இருக்குமாம்! அதன் ஒரு முனையில் கயிறைக் கட்டி மாட்டவேண்டியது! அவர்கள் சொல்லும் வரை எனக்குத் தெரியாது, மேலும் பிற்காலத்தில் உபயோகப்படுத்துவேனா என்பதும் சந்தேகமே..வார்த்தையையாகவோ அல்லது பொருளாகவோ!!

பப்புவிற்கு பல் முளைத்து ஈறுகள் ஊறும்போது கையில் கிடைப்பதைக் வாயில் வைப்பதுமாயிருந்தாள். நான் “டீதர்” வாங்கியதைப் பார்த்து சொன்னார்கள், ”எங்க அண்ணா உங்க மாமாவுக்கு சீப்பாங்கழி வாங்கிக் கொடுத்தாங்க” என்று. அது விரல் நீளத்தில் மேலே உருண்டையாக மரத்தாலான அந்தக் காலத்து டீதர். ஆனால், அது இப்போது கிடைப்பதில்லை. எங்காவது மியூஸியத்தில் காணக் கிடைக்கலாம்.


பதிவு நீண்டுக் கொண்டிருப்பதால், தொடர நான் அழைப்பது,

பார்வைகள் கவிதா
சிறுமுயற்சி முத்துலெட்சுமி
விரிந்த சிறகுகள் திவ்யாபிரியா

அவர்களின் சுவாரசியமான லிஸ்டை எதிர்நோக்கி!!