Friday, January 30, 2009

ஜனவரி மாதத்தின் வெதர் ரிப்போர்ட் !
பப்புவிற்கு டெர்ம் ஹாலிடேஸ் தொடங்கியபோது ஆரம்பித்தோம். அவர்கள் பள்ளியிலும் இதைச் செய்வார்களாயிருக்கும்! Juz to keep her engaged for some time! வானத்தைப் பார்த்துவிட்டு என்னத் தெரிகிறது, எப்படி இருக்கிறது என்று சொல்லி அதற்கேற்ற படத்தை தெரிந்தெடுத்து ஒட்டவேண்டும். வானத்தைப் பார்த்து "என்னத் தெரிகிறது" என்று கேட்கும்போது சொல்வாள் குறும்புசிரிப்போடு, "தவளை தெரியுது", சிங்கம் தெரியுது" என்று கலையும் மேகங்களின் உருவங்களைக் கண்டு, சில சமயங்களில் "கொய்யாக்கா தெரியுது" என்று பக்கத்து வீட்டு கொய்யாமரத்தை பார்த்து்! அவள் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது எனக்கு இரண்டாம்பட்சமே தவிர, செய்யும் செயலை அனுபவித்து ரசித்து செய்யவேண்டுமென்பதே! And looks like my baby got my point right! :-)

மாத காலண்டர் இங்கேயிருந்து!
இணையத்திலிருந்து குட்டி கிளிப் ஆர்ட்ஸ் கிடைத்தது,நன்றி டூ இணையம்!!

பள்ளி ஆரம்பித்த பின்னர், இதை செய்வது நின்றுபோயிற்று!உருளைக்கிழங்குக்காவது அவ்வப்போது தண்ணீர் கிடைக்கிறது..பார்ப்போம் பெப்ரவரியிலாவது முழுமையான ரிப்போர்ட் செய்ய முடிகிறதாவென!

Thursday, January 29, 2009

பப்புவுக்கு ஒரு குறிப்பு..

டியர் பப்பு,

நீ சிடி பார்க்கும் நேரத்தில் நான் வீட்டின் ஏதாவதொரு மூலையில்தான் இருப்பேன். என் துணிகளை மூட்டைக் கட்டிக் கொண்டு, வீட்டை விட்டு ஓடி விட மாட்டேன், சர்வநிச்சயமாக! (I wish I could do that..**siiighhh**..My wishlist is big you knw!!) வேலை முடிந்ததும் உன்னோடு வந்து அந்த சிடி நிமிடங்களைப் பகிர்ந்துக் கொள்வேன். பார்ப்பதை விட்டுவிட்டு நீ என்னை வந்து கூப்பிட்டுக்கொண்டு இருப்பது, மகிழ்ச்சியாக, பெருமிதமாகத்தான் இருக்கிறதெனக்கு எனினும்... வரையும்போதும், பொம்மைகளுடன் விளையாடும்போதும், மற்ற நேரங்களில் இண்டிபெண்டண்ட்-ஆக இருப்பது போல, சிடியும் பார்த்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்குமெனக்கு! நீ என்ன நினைக்கிறாய்??

அன்புடன்
அம்மா!!

Tuesday, January 27, 2009

1000 பேர் படுகாயம்,300 பேர் பலி : மருத்துவ உதவி தேவை!

முல்லைத்தீவில் 300 -க்கும் அதிகமானோர் பலி. 1000 பேர் படுகாயம்!
மிக விரைவில் மருத்துவஉதவி தேவை! இன்னும் 24 மணிநேரத்துக்குள்ளாக உதவி கிடைக்காவிடில் மேலும் பலர் உயிரிழக்கும் அபாயம்!!

மேலதிக விபரங்களுக்கு

http://tamilnet.com/art.html?catid=13&artid=௨௮௧௫௩

(சிநேகிதியின் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றச் செய்தி)
பட்டாம்பூச்சி - பப்புவிடமிருந்து!

குடுகுடுப்பையாரின் புதிய வண்ணத்துப் பூச்சியைத் தொடர்ந்து...!இது பப்பு செய்த பட்டர்பிளை, சாக்லேட் காகிதத்திலிருந்து. இரண்டு முறை செய்துக் காட்டியபிறகு, அதைத் தொடர்ந்து இதை செய்தாள். முதல் முறை கீழ்பாகம் மேலே வந்திருந்தது,மடிப்புகளில்லாமல். திரும்பத் திரும்பச் செய்ததில், வசப்பட்டது பட்டாம்பூச்சி கைகளில்!!

இந்த பட்டர்பிளை விருது பப்புவிடமிருந்து பறந்துச் செல்கிறது நன்றிகளுடன், பப்பு @ சித்திரக்கூடத்தை வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்! உங்கள் அனைவரது ஆசிகளும், வாழ்த்துகளும், ஊக்கமும் பப்புவை என்றும் சூழ்ந்திருக்கும்!

Special Thanks to her friends who made an effort to visit her over the weekend!!
எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அன்பு அவர்கள், ஞாயிறன்றும், "பார்வைகள்" கவிதா அவர்கள், திங்களன்றும் பப்புவைச் சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தனர். உங்களது பரிசுகளும், அன்பும், உங்களுடன் தனது உலகத்தை பகிர்ந்துக் கொண்டதிலும் பப்புவுக்கு மிக்க மகிழ்ச்சி! அவள், உங்களிருவரையும் தனது நண்பர்கள் என்றுதான் அடையாளப் படுத்துகிறாள். அவளோடு பொறுமையாய், அவளுக்குச் சமமாய், பேசி, பேச்சைக் கேட்டதற்கு நன்றிகள் பல!!

Sunday, January 25, 2009

குட்டி நாயோட அம்மா எங்கே போச்சு?
அன்று பப்புவின் பள்ளிவேனுக்காக காத்துக் கொண்டிருக்கையில், எதிரிலிருந்த மரக்கிளையிலிருந்து கரைந்ததொரு காகம். “அவங்க அம்மா எங்கே?” என்று கேள்வியும் என் எதிரில் வந்து விழுந்தது. வழக்கமான கேள்விதான். தெருவில் தனியாய் செல்லும் குட்டி நாய், குதித்தோடி வரும் கன்றுக்குட்டி அல்லது தனியாய் கூவும் குயிலின் ஒற்றைக் குரல் இதில் ஏதாவதொன்றுப் போதும், பப்புவிடமிருந்து இந்தக் கேள்வியை வெளிக்கொண்டுவர!
இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலும் இந்தக் கேள்வியைத் தான் நான் எதிர்நோக்க வேண்டியிருந்தது!

புத்தகம் - Rabbit's Happy day மேலும் படிக்க... அம்மாக்களின் வலைப்பூக்கள்

Friday, January 23, 2009

O Sanam...teri yadoon ki kasam - லக்கி அலி!!

லக்கி அலி!1996-ல் வெளிவந்த சுனோ (Sunoh) தான் இவரது முதல் ஆல்பம். இவரது ஆல்பங்களில் தெரிந்த தனித்துவமும், பாடும் விதத்தில் இருந்த ஸ்டைலும்..இவரது அடையாளம். அடுத்து முக்கியமாக சொல்லவேண்டியது அவரது பாடல்கள் காட்சியமைக்கப் படும் விதம்! ஒருவித wanderness, தனிமை..எதையோ தேடியலையும் நாடோடித்தனம்...இந்தமாதிரி தான் தீம்! சுனோ-வில் என் மனம் கவர்ந்த.. எனக்கு மட்டுமல்ல..அப்போது V-channel-ல் எப்போதும் போடும் பாடல், O sanam!
பிரமிடுகளிடையே தேடியலையும் காட்சிகள்..ஒரு பெரிய வளையத்துடனான சாவி..ஹஸ்க்கி வாய்ஸில் பாடல்..இதுதான் ஓ சனம்!எனது பெரும்பான்மையான் சாயங்கால/பின்னிரவுப் பொழுதுகளை நிரப்பியது இப்பாடலே! சொல்வதைவிட, கேட்டலே நன்று!!

Get this widget | Track details | eSnips Social DNAஓ சனம் பாடலில் வரும் புர்க்கா அணிந்தப் பெண் இவரது மனைவி! லக்கி அலியின் தந்தை ஹிந்தி படவுலகில் முக்கியமானவ்ர். விக்கிபீடியாவில் தேடினால் மேற்செய்திகள் கிடைக்கலாம்! ஹிந்திப்படங்களிலும் பின்னனி பாடியிருக்கிறார். கஹோ நா பியார் ஹே - ஹ்ரித்திக்-கின் படமென்று நினைக்கிறேன்!

எனது டாப் 10 பாப் பாடல் பட்டியலில் ஓ சனம் என்றும் இடம் பெற்றிருக்கும்!! More on Lucky Ali later!

Thursday, January 22, 2009

நான் வரைகிறேனே மம்மி!!

பப்பு சுவரில் கிறுக்கத் தொடங்கியக் காலத்தில், சிலேட்டும், நோட்டுப்புத்தகங்களும் அவள் கண்களில் படும்படி பார்த்துக் கொண்டதில் கொஞ்சம் கொஞ்சமாய் மறையத் தொடங்கியது அவ்வழக்க்ம். ஆனால், கிறுக்கியபோதோ தடுத்ததில்லை, கிறுக்காதபோதோ அதை ஊக்கப் படுத்தியதுமில்லை!ஆனால், நான் மரங்களுக்கான அவுட்லைனை வரையத் துவங்கியபோது
அவள் கையிலும் கொடுத்தேன், உனக்கு அந்த சுவர், எனக்கு இந்த சுவர் என்று! (எல்லாம் ஒரு சேஃப்டிக்குத்தான்!) அப்படி அவள் வரைந்தவற்றில் இதோ,

ட்ரையாங்கிள் பாரு, ஆச்சி:அநேகமா மரமாக இருக்கலாம்:இது பாப்பா என்று ஆரம்பித்தவள், அவளது கையை வைத்து ட்ரேஸ் செய்து விரல்கள் மட்டும்:வரைவதை மட்டும் அவள் விழித்திருக்கும்போது செய்து, பெயிண்டை அவள் தூங்கியது அடித்தேன். ஜாலியாகத்தான் இருந்தது அவளது துணை!அவளுக்கு முன்னால், ஏசியன் பெயிண்டை தொட விருப்பமில்லை. இப்போதுவரை அந்த பெயிண்ட், அவளது ஃபெவிக்ரில் பெயிண்ட் என்றுதான் நம்பிக்கொண்டிருக்கிறாள். :-)

அவளது குட்டிவிரல்கள் வரைவதைப் பார்த்ததும், என் மனம் எதிர்க்காலத்தை கற்பனை செய்யத் துவங்கியது! ஒரு பெரிய இண்டீரியர் டெக்கர் ஆபீஸ், ஆர்ட் செண்டரை பப்பு நடத்துவதையும், சன் டீவியில் ஒரு ஆண்டர்ப்ரன்னராக அவளது நேர்காணலையும், அவளது இந்த ஆர்வத்திற்குக்கான வேர்கள் அவளது அம்மாவிடமிருந்துப் பெற்றதாகவும், எப்படி அவளது அம்மா இயற்கையின் வண்ணங்களை அறிமுகப்படுத்தினாளென்றும்..ஹ்ஹா..**siiighhhhhh**

(என்னைவிட பப்பு சுவரில் எழுதுவதை/கிறுக்குவதை முகில்தான் ஊக்குப்படுத்துவார் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்!!)

Wednesday, January 21, 2009

நோ டைட்டில்.....

பூஹ்ஹூ..ஹூம்ம்..பூஹ்ஹூ...ஹூம்ம்...என்ன பண்றேனா..ஹூம்..ஹூம்..அழுதுக்கிட்டிருக்கேன்..
பூஹ்ஹூ...ஹூ...ஏன்னா கேக்கறீங்க..ஹூஹூ...பப்பு என்னை என்ன சொல்லிட்டாத் தெரியுமா?பூஹ்ஹூ..ஹூ..ஹூஹூ....நான் எங்க அம்மாவை அப்படி சொன்னப்போ எனக்கு பதினைந்து வயசு!! பூஹ்ஹூ...ஹூம்ம்..ஹூ..ஹூஹூ...என்னைப் போய்...ஹூ..ஹூஹூ..என்னைப் போய் அப்படி சொல்லிட்டாளே!!ஹூ..ஹூஹூ...என்ன சொன்னாளா?...
ஹூ..ஹூஹூ..ஹூம்ம்..பூஹ்ஹூ.. ஷீ செட்...ஷீ செட்....ஹூம்ம்..ஹூ..ஹூஹூ..சொல்லும்போதே எனக்கு அழுகை
தாங்கலியே....ஹூ..ஹூஹூ...நீ ஏன் ஆயா மாதிரி குண்டா இருக்கேன்னு..ஹூ..ஹூஹூ..சொல்லிட்டாளே!!! பூஹ்ஹூ..
ஹூம்ம்..பூஹ்ஹூ..!!!

குறிப்பு:

முளைத்து மூணு இலை கூட விடாத (!) உங்கள் சிறு வாண்டு, உங்களைப் பார்த்து இபப்டி சொன்னால் எப்படி உணர்வீர்கள்? அதுவும், நாம் ரொம்ப குண்டு எல்லாம் இல்லை, ஓக்கேவாகத்தான் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது!! எனக்கு ஓரிரு நிமிடங்கள் ஒன்றும் புரியாமல், அழுவதா சிரிப்பதாவென்றுத் தெரியாமல்..போயிற்று!
But it was really hard you know...

Tuesday, January 20, 2009

சகுனத்திற்குப் பின் ”உலகம்”

சினிமாவில் காட்சி முடியும் நேரம்.சீனிவாசனும் அவரது நண்பர் பரந்தாமனும் பார்த்துக் கொண்டிருந்தனர். கதாநாயகியை அவளது தந்தை அடித்துக்கொண்டிருந்தார், அவள் காதலித்தக் குற்றத்திற்காக. சீனிவாசன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். அழுதுழுது கண்கள் வீங்கிப் போயிருந்தன.

கதாநாயகனை, கதாநாயகியின் தந்தை ஆள் வைத்து அடிக்கும் காட்சி. அதற்கும் கண்கலங்கினார் சீனிவாசன். கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டபின் கூறினார், “பாவம் அந்த சின்னஞ்சிறுசுக, என்ன தப்பு பண்ணுச்சுங்க? இப்படிக் கொடுமைப் படுத்தறானுங்களே! இவன மாதிரி அப்பாவையெல்லாம் நிக்கவைச்சு சுடணும்” என்றார்.


சினிமா முடிந்தது. முடிவு...நாயகனும், நாயகியும் தங்கள் கதையை முடித்துக் கொள்கின்றனர். வரும் வழியில் பரந்தாமனிடம், “பாவம்டா, அதுங்க இப்படியா வக்கையை முடிச்சுக்கணும், எங்கேயாவது ஓடிப் போய் இருக்கலாமில்ல” என்று புலம்பிக்கொண்டே வந்தார். வீடு வந்து சேர்ந்தார்.

சாப்பாடு போடும் போது அவ்ரது மனைவி சொன்னார், “என்னங்க, நம்ப பொண்ணு யாரையோ லவ் பண்றாளாம், ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்ததா வேலைக்காரி சொன்னா”.

எங்கே அவ, கூப்பிடு”

வந்து நின்றவளைப் பார்த்து “என்ன அம்மா என்னவோ சொல்றாளே, உண்மையா”?

”ஆமாப்பா”

“எனண்டி, என்னையே எதிர்த்து பேசறியா(எங்கே எதிர்த்து பேசினாங்கன்னு கேட்கப்பிடாது!!!ஏதோ அப்போ எழுதிட்டேன்)நாளையிலேர்ந்து நீ எங்கயும் போக வேணாம். வீட்டிலேயே இரு. மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடறேன். காதலாம், கத்தரிக்காயாம்” (யப்பா என்னா வசனம்!!) என்றார், சினிமாவில் மட்டும் காதலை ஏற்றுக்கொள்ளும் அந்தத் தந்தை!!


குறிப்பு: என்ன தலைப்பு இது என்கிறீர்களா, என்னோட பழைய நோட்டுல, ”சகுனம்”-ன்ற தலைப்புல இருக்குக் கதைக்குப் அடுத்து ”உலகம்”-ன்ற தலைப்புல இந்தக் கதையை எழுதியிருக்கேன். அதான்!! :-)

Sunday, January 18, 2009

ப்ராஜக்ட் பப்பு - I

பப்புவிற்காக வீட்டில் ஒரு இடத்தை ஆயத்தம் செய்துக் கொண்டிருக்கிறேன். அவளது அறையென்று சொல்ல முடியாமாவென்றுத் தெரியவில்லை. ஆனால், அவளது ஆக்டிவிட்டிஸ்-க்காக ஒரு இடம் தேவை, மேலும் பழக்கங்களில் ஒரு ஒழுங்கினை ப்ராக்டிஸ் செய்யவும்!! நான் ரொம்ப ஒழுங்கெல்லாம் கிடையாது,(எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது மாதிரியான). சோ, பப்புவோடு சேர்ந்து நானும் ஒழுங்கினைப் பழக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்!!;-)

சுவாரசியமாக்குவதற்காகவும், அந்த இடத்தை பப்புவிற்கு பிடித்தமானதாக்குவதற்காகவும்(she is into wilflife nowadays!!) சில ஐடியாக்கள்!!

முதல் கட்டமாக, அறையின் ஒரு பக்க சுவரில் இரண்டு மூலைகளிலும் இரு மரங்களை வரைந்திருக்கிறேன், பொந்து உட்பட! இந்த தளத்திலிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டேன்!! (நன்றி : இணையம்! )

முதலில் பென்சிலால் இந்த மரங்களை வரைந்துக்கொண்டேன். 15-20 நிமிட வேலை!!
நன்றி டூ ஏசியன் பெயிண்ட்ஸின் சின்ன டப்பா!! இது இரண்டாவது நாள். 45-55 நிமிடங்களானது!!
இது மூன்றாம் நாள். இலைகள் வண்ணம் தீட்டும்போது கொஞ்சம் ஒழுகிவிட்டிருக்கிறது.
சரி செய்யும் வேலை பாக்கி. இதுவும் ஒரு மணி நேர வேலை!! (.- இ-திருஷ்டி பொட்டு-என் திறமையைப் பார்த்து யாராவது கண்ணு வச்சிட்டா :-)) !!)மரங்கள் ரெடி, இப்போது அவள் மரங்களின் கீழே உறங்கலாம், கதைகள் படிக்கலாம்...மரத்தடியில் அமர்ந்துக் கொண்டு அவளது நண்பர்களோடு பேசி விளையாடலாம்!!

அடுத்து, அவள் படுத்துறங்க தேவை ஒரு மெத்தை!! மீதி அடுத்தப் பாகத்தில்!!


உதவிய உபகரணங்கள்:

Friday, January 16, 2009

ரவுண்ட் அப்(II-ஆம் டெர்ம் - கடைசிநாளன்று)

கடந்த ஒரு வாரமாக இரண்டாம் டெர்ம் முடிந்து விடுமுறையில் இருக்கிறாள் பப்பு!
அவள் வீட்டிலிருக்க, நான் அலுவலகம் செல்வது கொஞ்சம் கஷ்டம், கொஞ்சம் ஜாலி!
முதல் டெர்மிற்கும், இரண்டாம் டெர்மிற்கும் இடையில் நான் கண்ட வித்தியாசங்கள், மாற்றங்கள்..

1. சிலிண்டர் பாக்ஸ், பிங்க டவர், லாங் ராட், கலர் பாக்ஸ் I, II எனபன அவள் வீட்டில் சொல்லும் சில உபகரணங்கள். மாண்டிசோரி ரிலேடேட் என அறிகிறேன்!

2. மிக முக்கியமான ஒன்று, பப்பு பள்ளி சேரும் வரை தமிழ் தவிர வேறு எந்த மொழியையோ, மொழி குறித்த பிரக்ஞையோ அவளுக்கு இல்லை(யெஸ், நோ தவிர). ஆனால், இப்போது ஆங்கில வார்த்தைகள் அர்த்தத்துடன் தெரிகிறது..சில சமயங்களில், badly in need of english! ஆங்கிலத்தில் உரையாட அவ்வளவு விருப்பப்படுகிறாள், ஆனால் வார்த்தைகள் கைவர வில்லை இன்னும்!! சரியாகச் சொல்லவேண்டுமானால், கோபத்தைக் காட்ட ஆங்கிலத்தை நாடுகிறாள், #%#$%$%^%^&கோ!! ஏதாவது சொல்லிவிட்டு அது ”கோ”-வில் முடிந்தால், கோபத்தில் திட்டுகிறாளென்று அர்த்தம்!!

3. நிறைய ரைம்ஸ்..!! நான் எந்த ரைம்ஸூம் சொல்லிக்கொடுத்ததில்லை...இதுநாள் வரை! மாண்டிசோரி ரைம்ஸ் தவிர மற்ற ஆங்கில ரைம்ஸ் எல்லாம் அவளாக சிடி பார்த்துக் கற்றுக்கொண்டதுதான்! எனக்குத் தெரிந்த ரைம்ஸ், ஜானி ஜானியும், ட்விங்கிள் ஸ்டாரும், ரோ ரோ யுவர் போட்டும், இன்னும் சில் சொற்பங்களே. ஆனால், ரைம்ஸ் கற்று அதனால் பெரிதாக என்ன ஆகிறதென்றெ என் சோம்பலே காரணம். (instead, I may try some tongue twisters, an interesting & funny stuff always!! )

4. பள்ளி செல்லும் வாரதினங்களில் ஏழு மணி தாண்டிதான் எழுகிறாள். வாரயிறுதிகள், விடுமுறை தினங்களில், மிகச்சரியாக 6.30 அல்லது 6.50 க்கு எழுந்து எங்களையும் எழுப்பி விடுகிறாள்.(grrrrrrrrr) கிழமைகளின் பெயர்கள் தெரியுமே தவிர இன்று என்ன கிழமையென்று தெரியாதபோதும் பப்பு இப்படியிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.


5. செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறாள். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போது,
அவள் நட்டுவைத்த உருளைக்கிழங்கு செடிக்கு மட்டும் அதிக கவனிப்பு!! (நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாததால், முளை விட்ட உருளைக்கிழங்கை அவளே நட்டாள். அது ஒருஅடிக்கு மேலாக வளர்ந்துள்ளது.)

Wishing you a happy III term, baby!

Thursday, January 15, 2009

கெமிஸ்ட்ரி பத்தி உங்களுக்கு என்னத் தெரியும்?

ரொம்ப நாளாச்சு ஏதாவது கிறுக்குத்தனமா கேள்வி/புதிர் போட்டு..இந்தக் கேள்வி பத்தாவதுப் படிக்கும்போது எங்க கிளாஸிலே செம ஹாட்டா இருந்துச்சு. என்னக் கேள்வியா..

ஒரு மாலிக்கிள் ஆஃப் பொட்டாசியம் அயோடைடு, ரெண்டு மாலிக்கிள்ஸ் ஆஃப் சல்பர் சேர்ந்தா என்ன கிடைக்கும்? (கேட்டலிஸ்ட் இருக்கு, அதை மறந்துட்டேனே..மூன்லைட் கேட்டலிஸ்ட்!)

என்னோட பெஞ்ச்மேட் ஹேமாதான் இந்தமாதிரி கிறுக்குத்தனங்களிலே எனக்கு வலதுகை மாதிரி!ம்ம்..அவ ஒருபடி மேலே போய், இந்த வினையோட பை-ப்ராடக்ட் கூட கண்டுபிடிச்சா, பாவம், இப்போ சிங்கப்பூர்லே குப்பைக்கொட்டிக்கிட்டிருக்கா!!!

Monday, January 12, 2009

ஒரு வெள்ளிக்கிழமை மாலை...(இந்த கைகளுக்குச் சொந்தமான வலைப்பூ எது?!)

எங்கள் டீமை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பெண்மணியைச் சந்திக்க பப்புவும், நானும் எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றோம். போய்க்கொண்டிருக்கும்போது ஒரு போன். “நான் முத்துலெட்சுமி பேசறேங்க”, என்றதும் எனக்குத் தெரிந்த 4 முத்துலெட்சுமிகளில் யார் என்று ஒரு குயிக் சர்ச் ஓடியது. பள்ளியில் கூடப் படித்த முத்துலெட்சுமியா, ஆனால் குரல் அப்படி இல்லை, ஜூனியர் முத்துவா கொஞ்சம் குரல் ஒத்துபோகுது, இல்லை இப்போ ரீசண்டா
திரும்ப மெயிலில் சந்தித்த முத்துஅக்காவா என்று கடக்டவென்று ஒரு பேட்டர்ன் & வாய்ஸ் மேட்ச். இதற்குள் 20-40 செகண்டுகள் கடந்துவிட்டிருந்தன. திரும்ப “நாந்தாங்க முத்துலெட்சுமி பேசறேன், எங்க இருக்கீங்க” என்றதும், அட இந்தம்மணியை பார்க்கத்தானே போய்க்கிட்டிருக்கோம்னு பொறி தட்டியது!!யெஸ்..அந்த பெண்மணி கயல்விழி-முத்துலெட்சுமி! அந்த டீம் - டாக்கிங் குரூப் டீம்!(சிறுமுயற்சி முத்துலெட்சுமி, இல்ல முத்துலெட்சுமி கயல்விழி-ன்னா உடனே புரிஞ்சுருக்குமோ!!)அறிமுகம், தயக்கம் எதுவுமே இல்லை..பேசுவதற்கு டாபிக்குகள் தானாக வந்துக் கொண்டேயிருந்தன! முதல்முறையாக்ப் பார்க்கிறோம், ஆனால் பேச பல டாபிக்குகள் இருந்தன.ப்ளாக் நண்பர்களை மீட் செய்வதில் உள்ள அட்வாண்டேஜ் போல!!


(The famous Kids of blogdom )

அப்படிப்பேசிக்கொண்ட்டேயிருந்த போது, this friendly lady made an entry. மேலே இருக்கும் கைகளுக்குச் சொந்தக்காரர்! அதிகம் மறுமொழிவதில்லையென்றாலும், தவறவிடாத பதிவு கவிதாவின் “பார்வைகள்”. தெரியுமா, என்ற போது, ”ஓ தெரியுமே” என நான் சொன்னதும் ஜெர்க்கானவர், ”இல்லல்ல, உங்க பதிவுகள் மூலம்தான்”, என்றதும் கொஞ்சம் ஆசுவாசமானார்.

Pappu remained quiet! ட்ரெயினை பார்த்துக் கொண்டேயிருக்க விரும்பினாள், அவள்!
பப்புவும் சபரியும் பரிசுகள் பரிமாறிக்கொண்டார்கள்! And, pappu thank muthu aunty
for the Bhindis!! கவிதா ஆன்ட்டியுடன் சொப்பு விளையாட வெயிட்டிங்

Friday, January 09, 2009

பழசும் புதுசும்!

இது புதுசு :

அதிரவைத்தக் கணங்களையும்
இசைத்துச் சென்ற நொடிகளையும்
ஒரு பேழைக்குள்
சேமிக்கத்
தொடங்கினேன் நோவாவைப் போல்!
தரைதட்டியபோது
கனத்துவிட்ட காலத்துளிகளின்
எஞ்சிய சிறகுகளை
முத்தமிட்டு
பறக்கவிட்டேன் அன்புவெளியில்..
எண்ணங்களின் திரைகள்விலக்கி
எதிர்ப்பார்ப்புகள் ஏதுமற்று
காத்துக்கொண்டிருக்கிறேன்
மண்ணுருண்டையிலிருந்து
திரும்பிவரும்
நுனையிலைக்காக!!

இது பழசு: சகுனம்

”ச்சே!ச்சே”! நான் நல்லக் காரியமா பொறப்படற போதுதான் இவன் வந்துத் தொலைப்பான். ச்சே, ஏந்தான் இப்படி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறான்களோ!

நீங்களே சொல்லுங்க சார்! ஒருநாள, ரெண்டுநாள்னா பரவாயில்லே! தெனமுமா?வெவஸ்தையில்லே, இந்த மனுஷனுக்கு!இவன் எதிர்லே வந்து தொலையறதுனாலே நான் போற காரியம் எதுவும் ஒழுங்கா உருப்படியா முடிய மாட்டேங்கறது சார்!

ஒரு நியாயம் சொல்லுங்க சார், எனக்கு! நேத்தும் இப்படிதான், பக்கத்துத் தெரு கோபலன் கிட்டே போய் ஐம்பது ரூபாய் கடன் வாங்கலாம்னா இவன் எதிர்ல வந்துட்டான்! போன காரியம் அவ்ளோதான்!

என்ன சார், நினைச்சிருக்கான் இவன் மனசுல?” என்று என்னிடம் கேட்ட பூனைக்கு என்ன பதில செல்வதெனத் தெரியாம்ல் விழித்தேன் நான்!

Thursday, January 08, 2009

வண்ணத்துப் பூச்சி விருது


"சித்திரக்கூடம் சந்தனமுல்லை: இவங்களுடைய பதிவை தவறாமல் படிப்பதுண்டு. இவங்களுடைய பதிவுகள் அருமையாக இருக்கும். பப்புவின் அசைவுகளையும், குரும்புகளையும் அவர் மட்டும் ரசித்து ஆனந்தபடுவது மட்டும் அல்லாது, பதிவில் இவை அனைத்தையும் எழுதி எங்களை ரசிக்கவும் ஆனந்தப்படுத்தியும் சந்தோஷப்படுபவர்." என்றுத் தமிழ்தோழி பட்டர்பிளை விருது கொடுத்திருக்கிறார்!

தமிழ்தோழி, இது எனக்கொரு எதிர்பாராத சர்ப்ரைஸ்! இன்னும் எழுத ஆர்வத்தை தூண்டுகிறது, உங்களின் அங்கீகாரம்! (மாட்டிக்கிட்டீங்களா?!!) நான் ரொம்ப புவர், மறுமொழியளிப்பதில்! இனி அப்படி இருக்கக்கூடாதென எண்ணிக்கொள்கிறேன்!"சந்தனமுல்லை (ஆச்சியைப் பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பப்பு பேரவையை நடத்தும் அத்தனை பேருக்கும் இவர் அத்துப்படி)"
என்று சொல்லி பட்டர்ப்ளை அவார்டுவிருதுக் கொடுத்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள். சொல்லப்போனால், அமித்து அம்மாதான் நான் முதலில் தொலைபேசிய பதிவர்!

கொடுத்த விருதினை விதிமுறைகள்படி ஏழுபேருக்கு அளிக்கிறேன்! பெற்றுக்கொண்டவர்கள் 7 பேருக்கு அளிக்கும்படி விதிமுறை சொல்கிறது!

கானாஸ் - கானாவின் றேடியோஸ்புதி பதிவுகள். ஒருமுறையும் மிஸ் செய்ததில்லை. விடை கண்டிப்பாக தெரியாது என்றாலும்!
அதிலும், சுவாரசியமாக இசையோடு இணைந்த பழைய நிகழ்ச்சிகளை எப்படிதான் திரட்டுகிறாரோ!!


சிநேகிதி
- சிநேகிதின் எல்லாப் பதிவுகளும் எனக்கு விருப்பம். அதிலும் சைக்காலஜி பதிவுகள், மிக அருமையாக எழுதுவார். அப்படியே, ஈழத்து நினைவுகளும்!!

ஆகாயநதி - பொழிலோடு இவர் செலவிடும் நேரங்களை பற்றிய பதிவுகளுக்காக!

குடுகுடுப்பை - இவரின் நாஸ்டால்ஜிக் காலேஜ் பதிவுகள் மற்றும் அவரது மகள் ஹரிணியை பற்றி அவ்வப்போது எழுதுவதற்காக!!


சின்ன அம்மிணி
- மௌயினின் சாகசக் கதைகள் சமீபத்தில்தான் படித்தேன்! அப்புறம் அவரது நகைச்சுவைப் பதிவுகளுக்கும்!

நிலாவும் அம்மாவும் - நிலா எழுது கடுதாசிக்காக!

தமிழன் -கறுப்பி - இவரின் கவிதைகளும், கவிதை நடையில் இருக்கும் பதிவுக்களுக்கும்....மிக அருமையான கவிதைகள்..!


உண்மையில் தமிழ்தோழிக்கும்,அமித்து அம்மாவிற்கும் கொடுக்க ஆசை. ஆனால், என்னை முந்திக்கொண்டார் ஜமால்!
ராமலஷ்மி-க்கும், சீனா ஐயாவுக்கும் கொடுக்க நினைத்தேன். ஆனால், அவர்களின் கடல் போன்ற எழுத்துலகிற்கு முன்,
நான் எம்மாத்திரம். பெரியவர்களுக்கு சிறியவளான் நான் விருது கொடுப்பது நல்ல பண்பன்று என்று தோன்றியது.
ஆயில்ஸ்-கு கொடுக்க சொல்லி பப்பு உத்தரவு. ஆனால், அமித்து அம்மா முந்திக்கொண்டார்! :-)

Wednesday, January 07, 2009

சோட்டா ரீசார்ஜ்

பப்புவை வேனில் அனுப்ப காத்துக்கொண்டிருந்தோம், வேன் வருமிடத்தில். எங்கள் தெருவில் மாடுகள் எப்போதும் நடைபழகிக்கொண்டிருக்கும். நாங்கள் நின்றுக் கொண்டிருந்த இடத்தை நோக்கி ஒரு மாடு வந்துக்கொண்டிருந்தது, ஒரு ஐந்தடி தூரத்தில். உடனே பப்பு, ”என்னைத் தூக்கு தூக்கு” என்று சொல்லத் துவங்கினாள். ”ஒன்னும் பண்ணாது பப்பு, அது போய்டும்”
என்று சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன். வேகமாய் பப்பு சொன்னாள்,

“நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி”!!

அவள் பெரிய பெண்ணா, குட்டி பெண்ணா என்று தீர்மானிப்பது சந்தர்ப்பங்களும், பப்புவும்தான்!!இரவில் தூக்கத்திலிருந்து திடீரென் எழுந்த பப்பு, கால் விரல்களில் கடைசியைக் காட்டி,

“இது ஏன் குட்டியா இருக்கு? இது சரியா சாப்பிடலையா?”

அடுத்த விரலையும் காட்டி,

”இதுவும் சரியா சாப்பிடலையா” என்று கேட்டுவிட்டு தூங்கிப் போனாள். அதை சொல்ல ஏன் அந்த நடுஇரவு நேரத்தை தேர்ந்தெடுத்தாள் என்பது எனக்கு புரியாத புதிர்!!
எனது நண்பர்களின் அம்மாக்கள் மொபைல் உபயோகிக்க கற்றுக்கொண்டப்போது,
நீங்கள் எனக்கு குறுஜ்செய்தி அனுப்பினீர்கள், T1 லைப்ரரியை உபயோகித்து!!

எனது நண்பர்களின் அம்மாக்கள் மெசேஜ் அனுப்பியபோது
பப்புவின் குரலை ரெக்கார்ட் செய்து ரிங்டோனாக மாற்றிக்கொண்டீர்கள் நீங்களாகவே!!

எனது நண்பர்களின் அம்மாக்கள் கணினியை இயக்கக் கற்றுக்கொண்டபோது
நீங்கள் எனக்கு மெயில் அனுப்பினீர்கள்,மூன்றாவது முறையாக உருவாக்கிய ஐடிமூலமாக!!

எனது நண்பர்களின் அம்மாக்கள் மெயில் அனுப்பியபோது
நீங்கள் ஆர்குட் ப்ரொபைலையும், ப்ளாக்கர் ப்ரொபைலையும் உருவாக்கிக்கொண்டீர்கள்!

இப்போது எனது பள்ளித்தோழிகள் பலரின்,கல்லூரித் தோழிகள் சிலரின்,
நண்பர்கள் லிஸ்டில் நீங்களும்!!


(நேற்று என் பெரிம்மாவும் நானும் ஆர்குட்டில் ஸ்கராப் செய்துக் கொண்டிருந்தோம்!!
ஒரு நீண்ட உரையாடலுக்குப் பிறகு அவர்கள் ஸ்க்ராப் புக்கிலிருந்த என் ஸ்க்ராப்-களை
அழித்தபோது, “என்ன பயமா, ஏன் டெலீட் செய்தீர்கள்” என நான் கேட்டதற்கு,அவர்களின் பதிலைப் பார்த்து நெடுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்!

namma rathahtile bayamma?what a disgrace!lesa nadukkam mattumdhan.!!!

சாரி பெரிம்மா, என்றைக்கும் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாய், பாராட்டாய் இருந்ததில்லையெனினும், கிண்டல் செய்யாமல் இருந்ததில்லை!! (இப்போது மட்டும் மாற்றிக்கொள்ள முடியுமா?!!)

you always made me proud, proud of me...proud of yourself!

Tuesday, January 06, 2009

ஒளியும் ஒலியும்

பப்புவுக்குத் தெரியாமல் எடுத்தது இந்த வீடியோ! கடைசியில் கண்டுகொண்டவள், "கோ" என்று கோபத்துடன் விரட்டியதும் ஓடிவந்துவிட்டேன்!( பின்னனியில் கேட்பது வீடு சுத்தம் செய்யும் சத்தம், கண்டுக்கொள்ளாதீர்கள்!) "i am tiny seed sleeping" என்ற ரைமுக்கு
அவளது பொம்மை நண்பர்களை ஆக்ஷன் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறாள்!


இது ஜனகன மன, பப்புவின் தற்போதைய பேவரைட்டில் முதல் மூன்று இடத்துக்குள்ளா இருக்கிறது! நல்லவேளை, இந்த வெர்ஷ்னில் அவளாகவே முடித்து விட்டாள்! இல்லையென்றால், "பாக்ய விதாத"விற்கு பிறகு, ஜனகன என்று தொடங்கிவிடும். ஜனகன மன பாடும் போது எழுந்து அசையாமல் நிற்கவேண்டுமென்று விரைவில் கற்றுக்கொண்டால் பரவாயில்லை, கொஞ்சம் தப்பிக்கலாம்!

Get this widget | Track details | eSnips Social DNAஇது என்ன பாடல் என்று சொல்லவும்! சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு "பப்பு சிடி" பரிசு!!;-)))

Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, January 04, 2009

பப்பு 2009புது வருடம் பற்றியொன்றும் பெரிதாக புரிதலில்லையென்றாலும், பப்புவிற்கு அது ஏதோ ஒரு
சிறப்பான நாள் என்று மட்டும் தெரிந்திருந்தது. “ஹேப்பி நியூ யர்” என்றும் “ஹேப்பி பர்த்டே டூ யூ” என்றும் அவளை வாழ்த்தியவர்களுக்கெல்லாம் திருப்பி வாழ்த்திக் கொண்டிருந்தாள். தீபாவளிதான் அவளுக்கு தெரிந்த, நன்கு புரிந்த பண்டிகை, ”ஹேப்பி பர்த் டே”வுக்குப் பிறகு.

முழுதாக படங்கள் பார்த்ததில்லை இதுவரை, ரைம்ஸ் சிடிகள், கதை சிடிகள் நீங்கலாக! அதனால், படங்களை, குழந்தைகளுக்கான படங்களை பப்புவிற்கு அறிமுகப்படுத்த விரும்பினோம், புதுவருட பரிசாக என்றும் கூட கொள்ளலாம்! ஜங்கிள் புக் டிவிடி-தான் வாங்குவதாகதான் பிளான், ”george of the jungle"-ஐ பார்க்கும் வரை! (அவள் கண்டிப்பாக இதை ரசிப்பாள் என்று அனுமானம் பொய்க்கவில்லை.) கெட் ஒன் ஆஃபர் இருந்ததால், "thomas and friends" -யை தேர்வு செய்தேன். அவளது ட்ரெய்ன் விளையாட்டுக்கு உதவலாமென்று!!(movies + chocolate - Not a bad idea to spoil a kid, huh!)அந்த யம்மி ப்ளம் கேக், எங்கள் பக்கத்துவீட்டு ஆன்ட்டியின் கைமணம்! Thanks, Eva aunty!

இரண்டுமே ஹிட்!! முழுவதுமாக பார்க்கவில்லையெனினும், கடைசிவரை பார்த்தாள். ஜார்ஜின் காட்டுப்பகுதி-தான் இஷ்டம்! பேசும் குரங்கு, தாவும் மனிதன், சிங்கத்துடன் சண்டை, மரவீடு, நாயாக தன்னைக் கருதிக்கொண்டிருக்கும் யானை என்று முதல் பகுதிதான் அடிக்கடி பார்க்கிறாள்! தாமஸ் தனியாக பயணம் செய்துக்கொண்டிருக்கிறார், ஜார்ஜ் போரடிக்கும் வரை தாமஸ் காத்திருக்கத்தான் வேண்டும் போல!!

சென்ற வருடம், apple tree ரைம்ஸ் சிடிகளும், பெபிள்ஸ் சிடிகளும், ஜாதகா டேல்ஸ் (நன்றி வல்லியம்மா!)-மாக ஓடியது. அனிமேஷன் கதாபாத்திரங்களிலிருந்து இப்போது நிஜ உலகிற்கு எட்டிப் பார்க்கிறாள் பப்பு!

Friday, January 02, 2009

How are you today, sir?

இந்த வீடியோ எடுத்து 2 மாதங்கள் ஆகிறது! பப்பு ரைம்ஸ் பாடுவது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டாலும், இதை புதிதாகக் கற்றுக்கொண்டு பாடியபோது கண்கள் அகல
எக்சைட்டடாக பார்த்துக் கொண்டிருந்தேன்! முதலில் பம்கின் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..பின்னர் thumpkin என்றுத் தெரிந்தது, கூகுளில் தேடியபோது..(கூகுளில் தேடியதற்கு பதில் அவளது பள்ளி புத்தகத்தில் தேடியிருந்தால் உடனே தெரிந்திருக்குமே என்று
சொல்வீர்களேயானால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:-))) பின்னர் thumpkin, பட்டர்பிளையாகவும், க்ரோக்கடைலாகவும் மாறியது!!
வரிகள்

Where is Buttterfly?
Where is Butterfly?
Here I am, here I am.
How are you today?
Very well, thank you.
fly away, fly away.ஒரிஜினல் வீடியோ!

ஒரிஜினல் - வரிகள்

Where is Thumbkin?
Where is Thumbkin?
Here I am, here I am.
How are you today?
Very well, thank you.
Go away, go away.