Friday, November 28, 2008

தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்துஇந்தப் புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்து என் மகளின் கண்களால் வாசிக்கத் தொடங்கினேன். 16 பக்கங்கள். முடிக்கும்போது, நான் ஒருவித தாள-லயத்துடன் படித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

வெகு எளிமையான புத்தகம். கோட்டுச்சித்திரங்கள் போன்ற எளிமையான படங்களுடன் இயல்பான வார்த்தைகளுடன் கூடியப் புத்தகம். அபுவின் பந்து உதைக்கப் படும்போது அது பயணிக்கும் திசைகளில் சுழன்று விழும் இடங்களையும் சுவைப்பட சொல்லிச்
செல்கிறது ஒருவித தாள கதியில்.

மீதியை படிக்க இங்கே செல்லவும்.

Thursday, November 27, 2008

'பாம்'பாய்!!

என்னதான் வேண்டும் அவர்களுக்கு? அப்பாவிகளின் உயிரை பறிப்பதன்மூலம் சாதித்துவிட போவதென்ன?

இதுவரை 100-க்கு மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாய் சொல்கிறார்கள்.

மரணிப்பதற்கு முன் அவர்கள் மனதில் என்ன ஓடியிருக்கும்? எவ்வளவு எதிர்காலத் திட்டங்கள் இருந்திருக்கும் அவர்களின் மனத்தில்? தீவிரவாதிகளின் பிடியில் இருப்பவர்களின்
மன உளைச்சல்?

தீவிரவாதிகளை எதிர்த்து சென்ற காவலர்களின் மனதிற்குள் எனன் ஓடியிருக்கும்?

இப்படி ஆதங்கப்படுவதைத் தவிர இதைத் தடுகக் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் டீவியை பார்த்துக்கொண்டிருப்பதுதான் எவ்வளவு கொடுமையானது!!

Tuesday, November 25, 2008

Friends 4 லைப்!!

எனக்கு ஒரு தோழி இருந்தாள் கல்லூரியில், ஒரு சில பழக்கவழக்கங்கள் இருவருக்கும் ஒன்றாக! ஜீன்ஸூம், முக்கால் பேண்டும், செமஸ்டருக்கு ஒரு ஹேர்ஸ்டைலும் எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையின் மேல் தீராக்காதலுடனும்(crazy over life?!)!
பட்டங்கள் பெற்று அவள் மனித வள நிர்வாகத்தின் பக்கமும், நான் கணினி பயன்பாட்டுவியலுமாகப் பாதைகள் பிரிந்தன! நடுவில் ஒருமுறை ஃப்ரெண்ட்ஷிப் டே கெட் டூ கெதரில் சந்தித்தப் பிறகு ஒரு பெரிய இடைவெளி. நீண்ட பிரிவிற்கு சமீபத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறோம் - கிண்டலும், கேலியும்,அவரவர்களின் எடையைப் பற்றியும், குழந்தைகளப் பற்றிய விசாரிப்புகளுமாய்! whoa! ஒன்று மட்டும் மாறவேயில்லை..attitude towards life! அவளும் நானும் அப்படியேதான் இருக்கிறோம்..வாழ்க்கையின் மீதான ரசனைகளில்..சின்னச்சின்ன ஆசைகளில்...பற்பல மாற்றங்களுக்குப்பின்னும்!

ஒருசில விஷயங்கள் மாறுவதில்லை!!

Monday, November 24, 2008

சில அம்மாக் கணங்கள்!!

”நீயும் நானும் ப்ரெண்ட்ஸ்”

- பப்பு என்னிடம் சொன்னபோது சிரிப்பு வந்தது. அதை விட அவளின் செய்கை..ப்ரெண்ட்ஸ்-ன்னா தோளில் கைப் போட்டு கொள்ள வேண்டுமாம். இருவரும் தோளில் கைப்போட்டுக் கொண்டு Jataka tales பார்த்தோம்!

ம்ம்..ஆமாம் பப்பு, எப்போதும் உன் ப்ரெண்டாகவே இருக்க விரும்புகிறேன்!“பப்புவுக்கு ஆச்சி பிடிக்கும், ஆச்சிக்கு பப்பு பிடிக்கும்!”

-இதுவும் பப்புவால் அடிக்கடி சொல்லப்படும் வார்ததைகள். முதன்முறை சொன்னபோது,
ஆச்சிக்கு பப்பு பிடிக்கும், பப்புக்கு பப்பு பிடிக்கும்!” என்று. :-)) பின்னர் அவளாகவே சரி செய்துக் கொண்டாள்! அப்படி சொல்லும்போது ரெக்கார்ட் செய்துக்கொள்ளலாமென்று தோன்றும், அவளது டோனுக்காவாவது! :-)

உன் அன்பு கொடுக்கும் இதமான உணர்வு அலாதியானது!பப்பு போனில் தொடர்ச்சியாக பேசுவது இல்லை என்று நாங்கள் கவலைப் பட்டதுபோய், இப்போது ஒரு மணி அடித்தால் எடுப்பது அவள்தான். வைப்பதே இல்லை. :-)
அப்படி ஒரு நாள் மதியம் பள்ளியிலிருந்து வந்துவிட்டாளா என்றறிய நான் போன் செய்தபோது எடுத்த பப்புவிடம்,

“என்ன பண்றே?” என்று கேட்டேன்.

நான் ட்ரெஸ் போடாம இருக்கேன்! (I dont want to embarass pappu here, but i am reserving a future laugh. :-))

Phase D

...has hit us now!!

பப்புவின் வளர்ச்சிகளை மகிழ்ச்சியோடு பதிவதுபோலவே இதையும் பதிகிறேன்! பப்பு ஒரு புதிய சொல்லாடலை கற்றுக் கொண்டிருக்கிறாள்!

அது ஒரு தவறான பிரயோகம் என்பது தெரிந்திருக்கிறது!!

எந்த நேரத்தில் (அவளுக்கு பிடிக்காததை நாம் செய்யும்போது, கோபப்படும் போது) உபயோகிப்பது என்பதையும் அறிந்திருக்கிறாள்!!

நாம் திருப்பி “என்ன சொன்னே?! “ என்றுக் கேட்டால், திரும்பச் சொல்கிறாள். (மறைக்கத் தெரியவில்லை..:-)!)

பப்பு “டி” போட்டு பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாள், வீட்டில் அப்படி ஒரு சொல்லாடல் வழக்கத்தில் இல்லாத போதும்! And she thinks its fun! பப்புவின் சைக்காலஜி, எதை செய்யாதே என்று சொல்கிறோமோ அதை செய்வதுதான்! அதனால், “இதுவும் கடந்து போகும்” என்று பொறுமையுடன் காத்திருக்கிறோம்...பதில் பேசும்போது நாங்களும் வாங்க, போங்க என்று அவளிடம் பேசுகிறோம் அல்லது கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்(அப்படிதான் ராஸ்கல் என்று சொல்வது மறைந்துப் போயிற்று)!

இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் ஒரு பெற்றோர் எனில் இதே போன்ற சூழலை கையாண்டிருக்கிறீர்கள் எனில் பகிர்ந்துக் கொள்ளவும். இதைவிட நல்ல வழிமுறைகளை எதிர்நோக்கி!!

Friday, November 21, 2008

ஜிங்கிள்ஸ் ஆஃப் கோழிக்குஞ்சு!!

ஏற்கெனவே இந்தப் பதிவில் சொல்லியிருந்தபடி பாடல்கள் மட்டும்!

jingle bells :

jingle bells-1.WAVShorter version of கோழிகுஞ்சு பாடல்!
கொஞ்சம் அதிகமாவே மசாலா தடவியிருக்காங்க பப்பு, கண்டுக்காதீங்க! :-)

kozhi.WAV

Thursday, November 20, 2008

லோஷன்: அந்த குழந்தை தேடுமே - தூயாவின் பதிவோடு!

லோஷனின் பதிவுகளை படித்திருக்கிறேன். அவரது கைது குறித்த செய்தியை டிசே மற்றும் பெயரிலி பதிவுகளின் வாயிலாக அறிந்தப் போது மனம் கனத்துப் போயிற்று. எனக்கு மனதில் சட்டென்று தோன்றியது...அவரது வலைப்பூவில் அவரது குட்டிக் குழந்தையின் படம் போட்டிருப்பாரே...அந்த குழந்தை கஷ்டப்படுமே என்றுதான்! அவரது, ஏங்க வைக்கிறாய் மகனே.. பதிவை ரசித்துப் படித்திருக்கிறேன்!

தூயாவின் லோஷன்: அந்த குழந்தை தேடுமே பார்த்ததும், எழுதத் தோன்றியது!

யாவும் நலம்பெற பிரார்த்தனைகளைத் தவிர என்னால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை...ஆனால் பிரார்த்தனைகளால் செய்யக் கூடாதது ஒன்றுமில்லை!! (இதுவே எனது நம்பிக்கை!!)

Wednesday, November 19, 2008

யார் சொன்னது pappu can't dance!!(9 மாதங்களுக்கு முன் எடுத்தது. ஏனோ தெரியவில்லை..இப்போதெல்லாம் நாங்கள் டீவி பார்க்கும் வழக்கம் குறைந்து விட்டது..ஞாயிறு மட்டுமே கொஞ்சம் அதிகம் பார்க்கிறோம். பாடல் பார்க்கும் வழக்கமும் குறைந்துவிட்டது டீவியில்!!பள்ளி செல்ல ஆரம்பித்ததில் இருந்து இந்த மாற்றமென்று நினைக்கிறேன். I am juz remembering the days we used to spend infront of TV, just to watch/record pappu dancing!!)

நன்றி கானாஸ்! பப்பு கான்ட் டான்ஸ் என்ற பாடலில் வரியை அப்படியே வெட்டி ஒட்டி விட்டேன்!

ம்ம்..என்ன சொல்வேன் நான்?

எல்லாக் கதவுகளையும் தாளிட்டுவிட்டாலும் படுப்பதற்கு முன் ஒருமுறை சரிப்பார்ப்பதற்கு அன்று விடுபட்டுபோயிற்று! பப்புவிற்கு பொறுப்பு வர வைக்கலாமென்று

"பப்பு, கதவு பூட்டியிருக்கா பார்த்துட்டு வா, பப்பு" - என்றேன்!

நாளைக்கு பார்க்கறேன், ஆச்சி!

நாளைக்கு பார்க்கச் சொல்வேனோவென்று சந்தேகம் வந்துவிட்டது போல,

பெரிய பொண்ணாயிட்டு பார்க்கறேன், ஆச்சி!

நான் இப்போதெல்லாம் அடிக்கடி "பப்பு, நீதான் பெரிய பொண்ணாயிட்டேயில்ல பப்பு" என்று சொன்னது நினைவுக்கு வந்திருக்கும் போல..

நான் இப்போ குட்டி பெரிய பொண்ணா இருக்கேன் இல்ல..பெரிய்ய (கைகளை உயரே உயர்த்திய படி) பொண்ணாயிட்டு பார்க்கறேன், சரியா?!அடுத்த நாளுக்கான காய்கறிகளை கழுவி வைக்கும்போது கண்ணில் பட்ட மாங்காயை ஒரு துண்டு வெட்டி சாப்பிட்டுக் கொண்டே சமையலறையிலிருந்து வந்தேன். அதைப்பார்த்த பப்பு,

"நீ சாப்பிட்டுட்டு எனக்கு தருவியா, ஆச்சி?"

என்றபோதுதான் உறைத்தது..கடவுளே, எப்படி விட்டேன் இவளை என்று!

அதைவிட அவள் கேட்ட விதம் எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. உனக்கு இல்லையென்று சொல்லிவிட முடியாத ஒரு கேள்வி!

ஆச்சி, எனக்கு தா என்று சொல்லியிருந்தால் என் குற்றவுணர்ச்சி அதிகமாயிருந்திருக்கும். ஆனால், மிகவும் பாசிடிவாக, அடுத்து அவளுக்குத்தான் தருவேன் என்ற நம்பிக்கையோடு கேட்ட அவளதுத் தொனி காதுகளில் இன்னும் ஒலிக்கிறது!!

Tuesday, November 18, 2008

பப்பு சீன்ஸ்!!

சீன் - 1

சோபாவில் அமர்ந்து எதிரில் நாற்காலில் காலை நீட்டியபடி அமர்ந்திருந்தேன். பெரிம்மா வந்து உட்கார்வத்ற்காக நாற்காலியின் ஓரத்தில் கை வைத்தபோது காலை எடுத்துக் கொண்டேன். அதுவரை அங்கே நின்றபடி டீவி பார்த்துக் கொண்டிருந்த பப்பு, பெரிம்மாவிடமிருந்த நாற்காலியை இழுத்து என் காலருகே வைத்ததுமல்லாமல், என் காலைத் தூக்கி அந்த நாற்காலியில் வைத்தாள். :-)

சீன் - 2

ஏதோ பேசிக்கொண்டிருந்த போது, “எனக்குத் தெரியாது பெரிம்மா” என்றுக் குரலில் சலிப்போடு சொன்னேன். விளையாடிக்கொண்டிருந்த பப்பு, வேகமாய் பெரிம்மாவிடம் வந்து,

“ஏன் ஆச்சியை திட்டீனீங்க?” என்று கோபமாய்/வேகமாய் கேட்டாள்.

பெரிம்மா, ”நான் திட்டல பப்பு, சும்மா கேட்டேன்” என்றபோது, சமாதானமாகாமல்,

”சாரி சொல்லுங்க...சாரி சொல்லுங்க” என்று பெரிம்மா சாரி சொன்னப்பின் அமைதியானாள்.இதைத் தான் சொல்வார்களோ, சொர்க்கம் என்று, to get pampered by my mom and pappu?!

***************

சீன் - 3

பெரிம்மா ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். கதவருகில் வைத்திருந்ததை அவர்கள் பை காணவில்லை. பப்புவின் வேலை!! அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு அறையில் வைத்துவிட்டிருந்தாள். பையை எடுக்க முற்படுகையில், ஊருக்கு போக வேண்டாமென்று அரற்றத் தொடங்கினாள். அப்போது நான் சொன்னேன், ”பாரு நீ சாப்பிடலையில்ல அதான் ஊருக்குப் போறாங்க” என்றபோது ”நான் சாப்பிடறேன்” என்று ரசம் சாதம் போட்டுத் தர சாப்பிட்டாள்! சாப்பிட்டுவிட்டாலும், அவர்கள் ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என்றறியாமல் சாப்பிடும் பப்புவை பார்க்க கஷ்டமாயிருந்தது. ஆனால், என்ன செய்வது? அடுத்த வாரம் வருவாங்க என்று சமாதானப் படுத்தி “பை” சொல்ல வைக்கவேண்டியதாயிருந்தது!

முன்பெல்லாம், போகாதீங்க என்று மட்டும் சொன்ன பப்பு, பையை இழுத்துக் கொண்டு ரூமில் வைத்த பப்பு, இப்போது பையை தூக்கி ஒளித்து வைக்குமளவிற்கு வளர்ந்ததை பார்த்து புன்னகைக்கிறேன்!!

ஒருநாள் இந்தப் பெண் கல்லூரிக்கோ,வேலைக்கோ, உலகத்தை explore செய்ய பையைத் தூக்கி செல்லப் போகிறாள்..அப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?! ஏன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப் படுகிறேன்?! (ம்ம்..அடுத்த போஸ்ட்டுக்கு மேட்டர் ரெடி!!)

Saturday, November 15, 2008

இந்த சிம்டம்ஸ் உங்களிடம் இருந்தால்..

உங்கள் வீட்டில் ஒரு வாண்டாவது இருக்கிறதென்று அர்த்தம்..அர்த்தம்!!

1. அவர்கள் பாடும் குழந்தைப்பாடல்களை(ரைம்ஸ்) உங்களையறிமலேயே முணுமுணுக்கத் தொடங்கியிருப்பீர்கள், அவர்கள் அருகிலில்லாத போதும்!!

2. டூத் பிரஷோ, அல்லது வீட்டுக்கு தேவையான தொங்கும் அலங்காரப் பொருட்களோ, சிறு சாமான்களோ தேர்ந்தெடுக்க நேர்ந்தால் நீங்கள் வாங்கியது ஆரஞ்ச்/மஞ்சள் ப்ளோரசண்ட் கலர்களில் இருக்கும்!!

3. மளிகை சாமான்கள் வாங்கும்போது, எதனுடன் இலவசமாக பெரிய பாட்டில்கள், கண்டெய்னர்கள் வருகிறதென்று பார்த்து வாங்குவீர்கள், குட்டீஸின் விளையாட்டு சாமான்கள் போட உபயோகமாகுமென்று!

4. புத்தகக் கடைக்குச் செல்வீர்கள், வாங்கவேண்டியவற்றை மனதில் நினைத்துக் கொண்டு! ஆனால், நேராக குழந்தைகள் பகுதிக்குச் சென்று நிற்பீர்கள். கடைசியில், இன்னொரு நாள் பார்க்கலாம் என்று பில் போடும்போது நினைத்துக் கொள்வீர்கள்!!

5. புதிதாக முளைக்கும் குழந்தைகளுக்கான கடைகளை உள்ளே சென்று பார்த்துவிட ஆசையிருக்கும், வாங்குவத்ற்கு ஒன்றுமில்லாவிட்டாலும்!!

Friday, November 14, 2008

பப்பு டைம்ஸ்

சம்பந்தியம்மா..என்னா சம்பந்தியம்மா!!

பப்பு இப்படித்தான் என்னை எதிர்கொண்டாள் கடந்த வாரத்தில் ஒருநாள் மாலையில் நான் வீடு திரும்பியதும்!! திகைப்பும், ஆச்சரியமும், எங்கிருந்துக் கற்றுக் கொண்டாளிவள் என்ற ஆர்வமும் மேலிட ஆயாவை நோக்கினேன்! ம்ம்..புரிந்தது, ஆனந்தம் எனும் தொடர்நாடகம் விட்டுச் சென்ற மிச்சம்!!


பப்புவிற்கு பேனாக்கள் மேது அலாதி பிரியம். மர அலமாரிகளும், சுவர்களும், நோட்டுகளும் நிரம்புகின்றன், அவள் எழுத்துருக்களாலும், வட்டங்களாலும். எத்தனை பேனாக்கள் இருந்தாலும் எல்லாம் அவளுடையதாகி விடுகின்றன. கையில் ஒரு கொத்துப் பேனாக்களுடன் தான் இருப்பாள், சில சமயம். அப்படி ஒரு இரவு, பேனாக்களை படுக்கையில் போட்டுவிட்டு தூங்கிவிட்டாள். காலையில் எழுந்தவுடன், அவற்றை கைகளில் எடுத்துக் கொண்டபோது, ஆயா பேனாவே இல்லையென்று சொன்ன நினைவு வந்தவளாக அவளிடம் சொன்னேன்,

ஆயாகிட்டே பேனாவை கொடுத்திடலாம், பப்பு!

இது என்னோட பேனாதானே..? - பப்பு.

ஆமா

அப்புறம் ஏன் ஆயாகிட்டே கொடுக்கணும்? நானே வச்சிக்கறேன் என் பேனாவை- பப்பு.

***********

கற்பனைகளும், பள்ளி நண்பர்களும், கேள்விகளும், தூக்கத்தில் கனவுகளும் நிரம்பியதாயிருக்கிறது அவளது நாட்கள்!! ஆனால், என் சின்னஞ்சிறு மூளை நினைவு வைத்துக்கொள்ள திணறுகிறது..:-(..அந்த நேரத்து ரசிப்போடு கடந்துப் போகிறது அக்கணங்கள்!!

************

புதிதாக Fox என்ற வார்த்தையைக் கற்றுக் கொண்டிருந்தாள். இதுநாள் வரை தமிழில்தான் சொல்லிக் கொடுத்திருந்தோம். இப்போது இரண்டு மொழிகளிலும் விலங்குகளை அடையாளம் காண்கிறாள்! Fox என்று சொல்லிவிட்டு, என்னது Six-ஆ என்றாள்! ரைமிங் வார்த்தைகள்..:-))!


சிலசமயம் நான் கோபப்படும்போது அல்லது சத்தமாக வீட்டினருடன் பேசுவதைக் கேட்டால்,
ஏன் கஷ்ஷ்ட்ட்ப்படறே ஆச்சி? - என்று மிகவும் கரிசனத்துடன் கேட்பதில் கோபம் மறந்து சிரித்துவிடுகிறேன் நான்!

பப்புவுக்கும் மற்ற அனைத்து குழந்தைகளுக்கும் "குழந்தைகள் தின வாழ்த்துக்கள்"!!

Wednesday, November 12, 2008

உன்னை நான் அறிவேன்!!

பப்புவிற்கு என்ன பிடிக்கும் என்றும் அவளைப் பற்றியும் எனக்குத்தான் தெரியும் என்று சிலசமயங்களில் பெருமை/பூரிப்பு எல்லாம் வருவதுண்டு! எல்லா அம்மாக்களுக்குமே அந்த பெருமை..நினைப்பு உண்டென்று அறிந்திருக்கிறேன்.

ஏனெனில் யார் வீட்டிற்காவது செல்லும்போது “அவளுக்கு காரம் பிடிக்காது, வேண்டாங்க, அதெல்லாம் சாப்பிட மாட்டா” என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்..ஆனால், அவர்கள் முன் நாம் அந்த சாப்பாட்டு ஐட்டங்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருப்போம்!! அப்போது ஒரு பார்வை வருமே..அப்போது அம்மா/பெரிம்மாவிடமிருந்து!!:-))

ஆம்பூரிலிருந்து பெரிம்மா வரும்போதெல்லாம் பிரியாணியும், மக்கப் பேடாவும் வாங்கி வருவது வழக்கம். இனிப்புப் பெட்டியைப் பிரித்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, நானும் உண்ணத் துவங்கினேன்..பாதி சாப்பிட்ட பப்பு, மீதியை என் வாயில் திணித்தாள். நான் தான் வச்சிருக்கேனே பப்பு, நீ சாப்பிடு என்ற போது,

“நீ சாப்பிடு ஆச்சி, உனக்குத்தானே பிடிக்கும்!!” -என்றாள்!!

பப்புவிற்கு ஜிராஃப்பும், சிங்கமும், முயலும் மானும் பிடிக்குமெம்று அறிந்திருக்கிறேன்.
மொறு மொறு தின்பண்டங்கள் பிரியமென்று அறிந்திருக்கிறேன்..ஆனால், எனக்கு என்ன பிடிக்குமென்றும் அவள் அறிந்திருக்கிறாள் என்பதை இன்று அறிந்துக்கொண்டேன்!!ஒரு சின்னக் கடி: அறிவாள்மனை வெங்காயத்தை பார்த்து பாடினால் என்னப் பாடும்?

யோசிங்க..

யோசிங்க...

விடை:

தலைப்பைப் பார்க்கவும்!! :-))

Tuesday, November 11, 2008

என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு?!

jingle bells பாடல் பப்புவுக்கு மிகவும் விருப்பம். இருவரும் ஒன்றாகச் சேர்ந்துப் பாட கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு ஸ்டான்சாதான்! (விரைவில்
ஒலிபதிவேற்றப்படும்!! :-))

Oh, jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh


எங்களின் இன்னொரு விருப்பப் பாடல்,

முட்டைக்குள்ளே இருக்கும்போது
முட்டைக்குள்ளே இருக்கும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

றெக்கையை பிக்கும்போது
றெக்கையை பிக்கும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
ஹேர்கட் பண்ணிக்கறேன்
ஹேர்கட் பண்ணிக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

மசாலாத் தடவும்போது
மசாலாத் தடவும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
மேக்கப்பு போட்டுக்கறேன்
மேக்கப்பு போட்டுக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!


எண்ணெய்க்குள்ள போடும்போது
எண்ணெய்க்குள்ள போடும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
ஆயில்பாத் எடுத்துக்கறேன்
ஆயில்பாத் எடுத்துக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

வாய்க்குள்ள போடும்போது
வாய்க்குள்ள போடும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

சாதாரண sing-song ட்யூன்தான்! பாடுவதற்கு எளிதாகவும், விளையாட்டாகவும் இருக்கும்!!

Saturday, November 08, 2008

ஞானம் பிறந்த”தடி”!!

ஏதோ விளையாடிக்கொண்டிருக்கும்போது, பப்புவைக் குழந்தை என்று சொன்னேன்!

பப்பு கேட்டாள், ஏன் என்னை குழந்தைன்னு சொன்னே?

என்ன சொல்வதென்று யோசித்துக்கொண்டிருக்கும்போது

"தெரியாம சொல்லிட்டியா?"

ம்ம்..ஆமா பப்பு, ஏன் குழந்தைன்னு சொன்னா என்ன? நீ குழந்தை தானே!

நான் குழந்தை இல்லை, பப்பு! சொல்லு, நான் பப்பு!!


****************************************************************

பப்புவை அதிகம் அடிப்பதில்லை. ஆனால் சில நேரங்களில் அப்படி நேர்ந்துவிடும், அதாவது அவள் செய்வது சரியல்ல என்று உண்ர்த்த! அன்றும் அப்படித்தான் ஒரு அடி பின்னால் கொடுத்தேன்! வழக்கம்போல் அடித்தவுடன் ஓடி வருபவள்/அழுபவள், வந்து என்னை அடித்தாள்! நச்-சென்று வேகமாய் ஒரு அடி! அடித்தது மட்டுமல்ல..அடித்துவிட்டு சொன்னாள்..”வலிக்கும் இல்ல”!!


பப்புக் கற்றுக்கொண்டாள்...அடிக்கு பதிலடி கொடுக்க! அதற்கு மேலாய் உணர்ந்ததை சொல்லவும்!!


ஓக்கே!இனி இந்தபாடம் உதவாது !

சோ, இப்போது tantrums தாங்க முடியாது போனால், அவள் மன்னிப்பு கேட்பது வரை யாரும் எதுவும் கேட்பது இல்லை..சிறிது நேரம் கழித்து பொறுமையாக எடுத்துச் சொல்கிறேன் ”அது நல்ல பழக்கமல்ல பப்பு” என்று!!

Thursday, November 06, 2008

ஓபாமா!!

அமெரிக்க அரசியலைப் பற்றி எனக்கு அலசத் தெரியாவிட்டாலும், அதைப் பற்றி ஆராயத் தெரியாவிட்ட்டாலும்,இவர் charismatic leader என்று மட்டும் உணர்கிறேன்! ஜான் F கென்னடி, பில் கிளிண்டன் போன்றோரைப் பார்த்தும் எனக்கு இதே போல் தோன்றியிருக்கிறது!

நன்றி வெயிலான் சுட்டி பகிர்ந்தமைக்கு!!

இதுபோல் young and energetic-ஆக கம்பீரத்தோடு ஒரு பிரதமர் நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும்! உடனே தேசீயம் அப்படி இப்படின்னு கமெண்ட் போடாதீங்க! என் மனசுல பட்டதைச் சொன்னேன்!!

கிளாஸ் ரூம் விளையாட்டுகள் : ஜாலிபாஸ், FLAMES இன்னபிற

அமித்து அம்மா போட்டிருக்கும் இந்த போஸ்ட் என் நினைவுகளையும் கிளறிவிட்டது. விளையாட்டுக்காக, இந்த போஸ்ட்!இது கிளாஸ் ரூமில் விளையாடும் விளையாட்டுகளைப் பற்றி! டீச்சர் வருவதற்குள்ளாகவோ, அல்லது பாடம் டீச்சருக்குத் தெரியாமலோ விளையாடப் படுபவை! ஒன்பதாம் வகுப்பு வரை இவற்றை விளையாடியதாக நினைவு!

ஜாலிபாஸ் : இது இடது/வலது உள்ளங்கையின் ஒரத்தில் பேனாவினால் வட்டவடிவத்தில் பொட்டு போல வைத்துக் கொள்ளவேண்டும்.அருகிலிருப்பவரிடம் அதைக் காட்டவேண்டும். அவர்கள் கையிலும் அதே போல் இருந்தால் ஜாலி என்று சொல்லிவிட்டு விட்டுவிட வேண்டும்.அப்படி அவர்கள் கையில் இல்லையென்றால் நமக்கு சாக்லேட் வாங்கித் தரவேண்டும்!! இதற்காக, காலை பிரேயர் முடித்த கிளாஸ் ரூம் வந்தவுடன் மார்க் வைத்துக் கொள்வோம்! அதன் விளைவு இன்றும் status meeting-ல் போரடிக்கும் போது மார்க் செய்துக் கொள்கிறேன்! ஆனால் அருகிலிருப்பவருக்கு தெரியவேண்டுமே இவ்விளையாட்டு! ;-)

புக் கிரிக்கெட் : பாட புத்தகத்தை திருப்பிக் கொண்டே வந்து ஏதாவதொரு பக்கத்தில் நிறுத்த வேண்டும். வலது பக்கத்தின் கடைசி எண்தான் நீங்கள் எடுத்த ரன். பையன்களிடம் தான் இவ்விளையாட்டு பேமஸ்,வழக்கம்போல !

FLAMES : இதில் இருவரது பெயர்கள் தேவை.அதாவது விளையாடுபவர் மற்றும், அவரது தோழனோ/தோழியோ அவரது பெயர்!இது அவர்களுக்கிடையே உள்ள உறவை கண்டுபிடிக்கும் விளையாட்டு! இருவரின் பெயர்களை எழுதி, பொதுவாக இருக்கும் எழுத்துகளைஅடித்துக் கொண்டே வர வேண்டும். ஆனால், எப்படிக் கண்டுபிடிப்போம் என்பது மறந்து போய் விட்டது! யாருக்காவது தெரியுமா?
F - FriendL = LoveA = AdoreM = MarriageE = Enemy S = Sister.
எழுத்து விளையாட்டு : Name, Place, Animal, Thing
ஒரு எழுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் Name, Place, Animal, Thing எழுத வேண்டும்.நான்காம் வகுப்பில் இது ரொம்ப பேமஸ்! x அல்லது e வந்தால் கொடுமை!

வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்!!அநேகமாக 80களில் 90களில் பள்ளி முடித்தவர்கள்இதையெல்லாம் மிஸ் செய்திருக்கமுடியாது!! :-)

Wednesday, November 05, 2008

அனைடா(Anaida)- Nazuk Nazuk லட்கி


அனைடா (Anaida) - இன்னொரு பாப் இளவரசி!
இவரும் 90-சில் அறிமுகமாகி ஒரு ரவுண்ட் வந்தவர். ஐந்து அல்லது ஆறு ஆல்பங்களும், படங்களில் பின்னணியும் பாடியவர். என்ன சிறப்பென்றால், தனியாக ஆல்பங்கள் செய்தார். அலிஷாவுக்கு ஒரு பித்து(Biddu) கிடைத்தது போல!! அவ்வளவாக அவரது இசை என்னை இம்பெரஸ் செய்யா விட்டாலும், ஒரு சில பாட்டுகளை விட்டுவிட முடியாது! ஷூக்ரி (Shukri) எனும் அரேபிய பாடகருடன் ஒரு அராபிக் ஆல்பத்தை வெளியிட்டார்.(didi பாடிய காலித்-ஐ மறக்க முடியுமா!)
பாபா சேகலுடன், லயன் கிங் படத்துக்கு ஒரு பாடலை பாடினார். அந்த இரண்டை தவிர ஒவ்வொரு ஆல்பத்திலும் ஒரு பாடல் மட்டுமே என்னை ஈர்த்தது. மிகவும் மைல்டான லுக்..gentle and innocent பார்ப்பதற்கு! Love Today Hai Nahi Aasaa - முதல் பாடல்.
அடுத்த ஆல்பத்தில், Nazuk Nazuk main ladki.

oova oova பாடலும் நன்றாக இருக்கும்.
ஷூக்ரியுடன் o malu malu,அரபியின் அர்த்தம் புரியாவிட்டாலும், பாடுவது மிகவும் இனிமையாக இருக்கிறது! How sweet the language is!!

Funky பாபாவுடன் Hakuna Matata,

Hakuna Matata.mp3

பப்பு நினைக்கிறாள்....

நான் அழகாய் இருக்கியிருக்கிறேனென்று...
நான் கார் ஓட்ட வேண்டுமென்று...
.
.
.
.
அவளின் எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் விடை இருக்குமென்று!
எல்லாவற்றுக்கும் மேலாக,
அவளுக்குத்தான் என்னை அதிகமாக பிடிக்குமென்றும்!!பி.கு: பப்பு என் தம்பியிடம் கேட்டாள், "உனக்கு ஆச்சியை(வீட்டில் என் செல்லப் பெயர்) பிடிக்குமா?". ஆமாம் என்று அவன் சொல்ல, அவனுக்கு இரண்டு அடிகள் கொடுத்துவிட்டு சொன்னாள்,

"எனக்குதான் ஆச்சியை பிடிக்கும்!"

yes my dear, nobody loved me the way you love me :-)!!

Monday, November 03, 2008

சும்மா டைம் பாஸ்

நாம பள்ளிக்கூடத்தில் கண்டிப்பாக பிரேயர் டைமில் கீழே இருப்பதை சொல்லியிருப்போம்!

"India is my country and all Indians are my brothers and sisters."

ஆனா, தன்னுடைய வாழ்க்கையில் இதை உண்மையிலேயே கடைப்பிடித்தவர் யார்?

Sunday, November 02, 2008

ஆட்டோகிராப் aka டைரி ரீவிசிட்டட்!!

12-ஆம் வகுப்பு படிக்கும்போது நான் வைத்திருந்த டைரியை ஊருக்குச் சென்றபோது கண்டெடுத்தேன். அதுவே எனது ஆட்டோகிராப் புத்தகமாயும் இருந்தது. டைரிக் குறிப்புகள் என்றால், இன்று இந்த ப்ராக்டிகல்ஸ் செய்தேன், இந்த சால்ட் வந்திருந்தது...எனக்குப் பிடித்த சில பாடல்கள், அதன் வரிகள்!! எல்லோருடைய ஆட்டோகிராப் எண்ட்ரிகளில் இருந்தது எதைப் பற்றியென்றால், நான் சொல்லும் கடி ஜோக்குகளைப் பற்றியும், என்னுடைய புன்னகையும்தான்..மேலும், சிரித்தால் குழி விழுவதைப் பற்றியும்!! எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரும் வாழ்த்தியிருந்தது புன்னகை வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் மாறிவிடக்கூடாதென்று! yes friends, the smile still remains the same with me, come what may the situations!!

ரீடர்ஸ் டைஜஸ்ட்-டிலிருந்து பிடித்த சில quotes-ம் எழுதி வைத்திருக்கிறேன், ஆவியிலிருந்ததும் சில கவிதைகளை!! அதைவிட சுவாரசியம், நானே கூட கவிதைகள் எழுதியிருக்கிறேன்..:-)). And I managed to get some interesting stickers with funny messages. ஆண்ட்ரி அகாஸியின் ஹைட், வெயிட், அட்ரஸ், சொத்து பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன! :(..ம்ம்ம்! ஒவ்வொரு பக்கத்திலும், ஏதாவதொரு ஸ்டிக்கர்/ரெயின்போ இருக்கிறது..நான் அப்பொழுதே ப்லாக் எழுத ஆரம்பித்துவிட்டேன் போலிருக்கிறாது!! அப்புறம் கோட் வேர்ட்ஸ் நிறையக் இருக்கிறது..ஆட்டோகிராப் என்ற பெயரில் கொஞ்சம் அட்வைஸ் வேறு!எதுகை மோனைகளிலும், உவமைகளிலும் மக்கள்ஸ் பின்னியெடுத்திருக்கிறார்கள்!எழுத்துப் பிழைகள் வேறு!

கொஞ்சம் சுமாராயிருக்கிறது என்று நான் எண்ணுகிற கவிதையை..

வாழ்வை
ஊடுருவிப்
பார்த்தபோது..!

எண்ணமுட்டை வெடித்து
வண்ணக்கனவுகள்
வானுயர வளர்ந்து நிற்கும்!
கனவுகள் கரியாய் மரித்து
உண்மைகள் இயல்பாய் புரிய
மனம் இயலாமையில்
சூம்பிப் போகும்!
நடப்புகளை கிரகிக்க
சக்தியற்ற மனம்
வெதும்பி வெதும்பி ஏங்கும்..
இனிமையாய் கழித்த
இளம்பிராயத்துக்காக....!


(அநேகமா எங்க பாட்டி ஏதாவது என்னைத் திட்டியிருப்பாங்க, அதுக்கு நான் இவ்ளோ பெரிய கவிதை எழுதியிருப்பேன்ன்னு நினைக்கிறேன்..காலையில் எழுந்து படிக்காததற்காக!சத்தியமா எதுக்கு இப்படியெல்லாம் எழுதினேன்னு இப்போ ஒன்னும் புரியல!!:-)))

Saturday, November 01, 2008

வாங்க பழகலாம், குழந்தைகளிடம்!!!

ஏதாவதொரு இடத்திற்கு திருமணத்திற்கோ அல்லது கெட் டூகெதருக்கோ செல்கிறோம்...அறிமுகமில்லாத பலர் குழுமியிருக்கிறார்கள். எத்தனை பேரிடம், புதிதாய் இருப்பவரிடம் நாம் சென்று பேசுகிறோம் அல்லது பழகுகிறோம்?
(நன்றி : படம் - www)

குழந்தைகளும் அதே போல்தான்! பழகிய முகங்கள், இடங்களைத் தவிர அவர்கள் எல்லாரிடமும் பாய்ந்து சென்று விட மாட்டார்கள் அல்லது அவர்களிடம் பேசி விடமாட்டார்கள். சில குழந்தைகள் அப்படியும் இருக்கலாம், ஆனால் இது அவர்களைப் பற்றியது அல்ல! ;-). ஆனால், ஏதாவது பொது இடத்திற்குச் சென்றால், நமது குழந்தைகள் எல்லாரிடமும் பயமின்றி, தயக்கமின்றி பழக வேண்டுமென்று ஒரு எழுதப் படாத விதி/எதிர்பார்ப்பு இருக்கிறது.

பப்பு பொதுவாக புதியவர்களிடம்(குழந்தைகள்பெரியவர்கள்) பழக தயக்கம் காட்டுவாள்! சிறிது நேரம் ஆக ஆக, கொஞ்சம் புன்னகை வரும், அவ்வளவுதான். யாராவது அவளிடம் வலிய வந்து பேசினால் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் பேசுவாள்.அதுவும், one at a time! ஆனால் அமைதியாக அப்சார்ப் செய்துக் கொண்டிருப்பாள். வீட்டிற்கு வந்த பிறகு அவர்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருப்பாள். அவர்களை அடுத்தமுறை பார்த்தால் கொஞ்சம் பரிச்சயம் ஏற்படும்!!

”பேச மாட்டாளா?” அல்லது ”என்ன மிங்கிள் ஆக மாட்டாளா?” என்று சிலர் என்னிடம் கேட்பதுண்டு. அதுக்கு பதில் சொல்வது அவசியமா என்று என் மனதிற்குத் தோன்றினாலும், “இல்ல, கொஞ்சம் நேரம் ஆகும், பழகணும்” என்று கூறியிருக்கிறேன். இப்போது நானே ஒரு பார்க்குக்கு செல்கிறேன், அதற்காக, பார்க்கும் மனிதர்களிடமெல்லாம்
பேசிக் கொண்டா இருக்கிறேன்? எனக்குத் தெரிந்தவர்களிடம் மட்டும் தானே!! நமக்கே இப்படி என்றால், குழந்தைகள்..they come with the enviroment!

பப்பு, அமைதியாக இருக்க முடிவெடுத்திருந்தால், அதை மாற்ற நான் யார்! அவள் பேச/பழக் வேண்டுமா என்று முடிவெடுப்பது அவளது உரிமை. அதே சமயம், அவளுக்கு பேச/பழக வேண்டுமென தோன்றினாலும் அதை தடுப்பதும் என்னால் இயலாத காரியம்! சில சமயங்களில், நானுமே அவளை பிறருக்காக அவளை வற்புறுத்தியிருக்கிறேன், ஆனால் எனக்கு மனமில்லாமல்! ஆனால் எனக்குத் தெரியும் அவள் வீட்டில் எப்படியென்று, அதே சமயம் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளிடம் எப்படி பழகுகிறாள் என்று!! பின் ஏன் கவலைப்படவேண்டுமென்றும் தோன்றியதுண்டு! இப்போது பள்ளியில் கேள்விப்படுகிறேன், அவளுக்கென்று ஒரு க்ரூப் இருக்கிறது...வெண்மதி, ஆகாஷ், சஞ்சய், தண்ணொளி,பவன் கார்த்தி!! அது அவளுக்கான ஒரு comfortable circle. பக்கத்து வீட்டு ஆதி, மோனேஷ், நவீன்,சிந்து மற்றும் உறவினர்களின் குழந்தைகள் என்று இன்னொமொரு வட்டம்! ஒருவேளை அவளுக்கு ஒரு பெரிய நண்பர்கள் வட்டம் தேவைப்படாமலிருக்கலாம், ஒரே ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட் மட்டும் போதுமாயிருக்கலாம். அப்படி ஒரு நட்பைவட்டத்தை தேடிக்கொள்ளும் நம்பிக்கை அவளுக்குண்டு! அதுவரை நான் செய்யக்கூடயதெல்லாம் ,socialize ஆகும்படி வற்புறுத்த மாட்டேன். புதியவரிடம் தயக்கமின்றி பழகினால், ஊக்கப்படுத்துவேன்!!

கடவுளே..பப்புவை வளர்க்க பொறுமையையும் ஞானத்தையும் கொடு..அவள் இருக்கிறவண்ணமாகவே ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவதைக் எனக்குக் கொடு!!
நீண்ட நாட்களாக இதைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்திருந்தது, இன்றுதான் முடிந்தது!!

The irony is, பேசி பழகவே மாட்டேனென்கிறார்கள் என்று கவலைப்படுபவர்கள் பிற்காலத்தில் அப்படி என்னதான் பேசுவாங்களோ என்று கவலைப்படுகிறார்கள், இல்லையா!!