Monday, September 29, 2008

இந்த அக்டோபரை மகிழ்ச்சியோடு...

நான் எதிர்நோக்குவதற்கான மூன்று காரணங்கள்!!

வாரயிறுதியை ஒட்டி வரும் விடுமுறை தினங்கள்
ஊருக்கு செல்ல பயண ஏற்பாடுகள்/திட்டங்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக
மாதக்கடைசியில் வரும் பப்புவின் பிறந்தநாள்


அனைவருக்கும் அட்வான்ஸ்ட் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!

பாலும் தெளிதேனும் - இன் பப்புஸ் வாய்ஸ்!!

Get this widget | Track details | eSnips Social DNA

ரெக்கார்ட் செய்ததை தவிர என் பங்கு இதில் ஒன்றுமில்லை.
அம்மாவுக்கு நன்றிகள்!!

Sunday, September 28, 2008

பப்பு அப்டேட்

பப்புவுக்கு இன்றோடு 35 மாதங்கள் நிறைவடைகின்றன. இனி மாதாந்திர பிறந்தநாளை கவுண்ட் செய்வதை நிறுத்திக்கொள்ள எண்ணியிருக்கிறேன். :-)...

பப்புவின் முதல் (அஃபிஷியலி )ஹேர்கட்

நேற்று!! இதுவரைமுடி வெட்ட அவசியமேற்படவில்லை. ஏனெனில், மூன்று மொட்டைகளையும் 2 வயது 4 மாதங்களுக்குள்ளாகவே முடித்துவிட்டோம். இப்போதைய ஸ்டைல், டோரா கட் போல இருக்கிறது கொஞ்சம்!!

கதைப்புத்தகங்கள் - சில டிப்ஸ்

புத்தகங்கள் படிப்பது பப்புவுக்கு ரொம்ப இஷ்டம்...அதாவது, நான் அவளுக்காக, கதைப்புத்தகங்கள் படித்துக் காட்டுவது!! ஒரு நாளில் ஒரு தடவையாவது அவளுடைய எல்லாக் கதைப்புத்தகங்களை (அட்லீஸ்ட் ஒரு புத்தகத்திலிருந்து ஒரு கதையாவது அவளுக்குப் படித்துக் காட்டுவது..) வழக்கமாக வைத்திருந்தேன் முதலில். இப்போது, அவளாகவே, எல்லா புத்தகங்களையும் எடுத்து வந்து படிக்கச் சொல்கிறாள்.
இதை எதற்கு சொல்கிறேனென்றால், தானாகவே ஏதோ விளையாடிக்கொண்டிருந்த போது, நான் படித்த அந்த கதை வாக்கியங்களை அதே மாடுலேஷனோடு சொல்லிக்கொண்டிருந்தாள். :-)..எனக்கு ஆச்சரியம்!!

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால்,

புத்தகங்களை படித்துக்காட்டுங்கள், தினமும் ஒரு பதினைந்து நிமிடங்களாவது.

சத்தமாக(பக்கத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி இல்லை!!), உணர்ச்சிகளோடு, பாவனைகளோடு, மற்றும் குரல் ஏற்ற இறக்கங்களோடு!

கதைக் கேட்கும் குழந்தைகளையும் இன்வால்வ் செய்யுங்கள்!
ஒருமுறை நீங்கள் சொன்னால், திரும்ப சொல்ல சொல்லும்போது, சில இடங்களில் அவர்களை சொல்ல சொல்லலாம், அதில் இருக்கும் ஒரு கேரக்டராக கற்பனை மாற்றி சொல்ல சொல்வது!!

இதன்பின், அவள் வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது//நீண்ட வாக்கியங்களை சொல்வது மிக வேகமாக இருப்பதுப்போல் எனக்கு ஃபீலிங்!!

Friday, September 26, 2008

பப்பு பேச்சு கேட்க வா(ங்க)!!

1. Fan மாய்ஞ்சு மாய்ஞ்சு சுத்துது, பாருங்க!!

2. சிறிது நேரம் தூக்கியபின், "போது பப்பு கீழே இறங்கு" என்றபோது மாட்டேன் என்றாள்.
" கை வலிக்குது பப்பு, போதும் இறங்கு" என்றபோது, "உனக்கு கை வலிக்குதுன்னா எனக்கு கால் வலிக்குது, தூக்கு!"!

3.பிறிதொரு நேரத்தில் தூக்கச்சொன்னபோது, "நீதான் பெரிய பொண்ணு ஆகிட்டல்ல, பப்பு! குட்டி பாப்பா இருக்கறவங்களைத்தான் தூக்குவாங்க!" என்றபோது,
"நான் ஹைட்டாயிட்டதும் நீ பப்புவாயிடு. அப்போ நான் உன்னை தூக்கிக்கறேன்! இப்போ நீ என்னை தூக்கு!"


4. பப்பு. ஸ்கூல்ல என்ன சொல்லிகொடுத்தாங்க இன்னைக்கு?

"அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்" என்று இரண்டு வரிகளை பாடுகிறாள்!

5. ஸ்கூல்ல என்ன பண்ணே இன்னைக்கு?

நீட்டுப் பொட்டு பையன் என்கிட்ட தண்ணி கேட்டான். நான் அடிச்சிட்டேன்..அவன் கையைக் கிள்ளீஈஈஈஈ சாப்பிட்டுட்டேன்!!

(நீட்டுப் பொட்டு பையன் : விபூதி இட்டுக் கொண்டு வரும் பையன் என்று பின்னர் தெரிந்துக் கொண்டேன்!!)

பிறிதொரு நேரத்தில் அதே கேள்விக்கு

ஆன்ட்டியை அடிச்சேன்..அவங்க அழுதாங்க..கஷ்டப்பட்டு அழுதாங்க..ஹூ ஹூன்னு!!

எங்கள் வீட்டில் நாந்தான் இந்தமாதிரி கதை சொல்வதெற்க்கெல்லாம் பெயர்ப்போனவள். பப்பு என்னை விஞ்சிவிடுவாள் போலிருக்கிறது!!

நியூஸ் :


வனிலா பிளேஸில் 3-6 வயதினருக்கான ஒர்க் ஷாப் இந்த தசரா விடுமுறையை ஒட்டி நடத்தப்படுகின்றது!!

3ஆம் வகுப்பு - 12ஆம் வகுப்பினருக்கான கடிதம் எழுதும் போட்டி Tamilnadu Postal circle நடத்துகிறது!!

Thursday, September 25, 2008

நினைவுகளின் பிரதிபலிப்புகள்

மளிகை வாங்கிக்கொண்டு பில் போடுவதற்காக கார்டோடு நின்றுக்கொண்டிருந்தேன்.
ஏதோ இடித்த மாதிரி இருந்தது..இன்னொரு கார்ட்!! அதில், லாக்டோஜன் II ,
செரிலாக் மற்றும் பாம்பர்ஸ் என்று நிரம்பியிருந்தது!! புரிகிறது பெண்ணே...
இரண்டு மணி நேரங்களுக்குள் போக வேண்டும் என்ற உன் அவசரம்!!
இரண்டு வருடங்களுக்குமுன் நானும் இருந்திருக்கிறேன் அந்நிலையில்!!
இரவு நேர விழிப்புகள், நான்கு மணிக்கொருமுறை பால் கலந்து, அதிகாலை ஹக்கீஸ் மாற்றி,
weight management..எல்லாம் கண்முன் வந்துப்போயின ஒருமுறை!!

Wednesday, September 24, 2008

தமிழ் அகராதிக்கு ஒரு புது வரவு

தரையில பெயிண்டை சிந்தினா உனக்கு இனிமே பெயிண்ட் பாக்ஸ் கெடையாது, பப்பு!!

கெடையும்..எனக்குக் கெடையும்!!

Tuesday, September 23, 2008

பப்பு டைம் பாஸ்

Activity புத்தகங்கள்

3D புத்தகங்களை பப்புவுக்கு அறிமுகப்படுத்தினோம்.
(சிங்கப்பூரிலிருந்து வரும் சித்தப்பாக்களும், குடும்ப நண்பர்களும் மறக்காம்ல் வாங்கி வரும் ஸ்கேல்..அதை நேராகவும், சாய்வாகவும் மாற்றினால் படங்கள் அசைவதுபோல் தெரியுமே!!)
வழக்கமான புத்தகங்களைவிட இது சுவாரசியமாய் இருந்தது.

ஸ்டிக்கர் புத்தகங்கள்

இதுவும் கதைப் புத்தகந்தான். ஆனால், கதையின் வாக்கியங்களில் வீடு/பூக்கள் என்று வரும் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றின் உருவப்படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதறகான ஸ்டிக்கர் புத்தகத்தின் கடைசி/முதல் பக்கங்களில் இருக்கும். குழந்தைகள் சரியான ஸ்டிக்கரை எடுத்து ஒட்ட வைக்க வேண்டும். கதை கேட்பதோடு இல்லாமல்,கற்பனையையும்
தூண்டுவதாக இருந்தது. குழந்தைகளின் ஈடுபாடும் இருப்பதால், மிகுந்த உற்சாகத்தோடும் பொழுதும் போகும். இந்த ஸ்டிக்கர் புத்தககங்கள், பப்புவை நன்றாக என்கேஜ் செய்கின்றன்!
நன்றி, இப்படி ஒன்றை கண்டுப்பிடித்தவருக்கு!!

வண்ணம் தீட்டுதல்

மாதிரிப் படங்கள் வண்ணங்கள் தீட்டப்பட்டு இருக்கும். அடுத்த பக்கத்தில் இருக்கும் அதே போன்ற படத்தில் வண்ணங்கள் தீட்டவேண்டும். But this was an utter flop for us.
Not so happy as with free hand!!

Sunday, September 21, 2008

திண்ணை நினைவுகள்

திண்ணை நினைவுகள் பற்றி எழுத டேக் செய்த பிரேம்குமாருக்கு நன்றி.

இரண்டாம் வகுப்பு படிக்கும் வரை, ஆம்பூரில், ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம்.
அந்த வீடு திண்ணை, ஐந்து குடித்தனக்காரர்கள் வசிக்குமளவிற்கு பெரிய வீடு.
இருபுறமும் திண்ணை இருக்கும். வலது புறம் திண்ணை மாதிரி..அதாவது சிங்கிள் சீட்டர்.
இடதுப்புறம் வீட்டின் நீளத்திற்கு ஒருபுறம் திண்டு வைத்து திண்ணை இருக்கும்.
வீட்டினுள் கடந்துச் செல்ல மூன்று வாசல்கள் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு கதவும்,
பெரிதாய் ஏதோ அரண்மனை கதவு போல் இருக்கும்.

திண்ணை காலை வேளைகளில் ரொம்ப பிசியாக இருக்கும்.
கீரைக்காரம்மா, பால்காரர் முதல், துணி தேய்ப்பவர் வரை காலை வேளைகளில் வியாபாரம் அங்கேதான். ஐஸ்கட்டி மழை பெய்தபோது, திண்னையில் கைநீட்டிய படி நின்றது நினைவுக்கு வருகிறது. அந்த தெருவில் இருந்த வீடுகளில் அநேகமாக எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது. ஆனால் இரண்டு வீடுகளில்தான் சிறுவர்கள் விளையாடுமவிற்கு திண்ணை இருந்தடு. மற்ற வீடுகளில் காம்பவுண்டுக்குள் திண்ணை இருந்தது. அந்த இரண்டு
வீடுகளில் ஒரு வீடு நாங்கள் குடியிருந்த வீடு. மற்றொன்று, மூக்குப்பொடி தாத்தாவினுடையது. அந்தத் தாத்தா, எப்போதும் வெளியே திண்ணையில் உட்கர்ந்திருப்பாரானதால், அங்கு விளையாட வாய்ப்பு கிடப்பதரிது.
ஆனால், தாத்தா, தூங்கும் மதிய வேளைகளில் அங்கு விளையாடுவோம். சிலவேளைகளில் திட்டுக் கூட கிடைக்கும், அந்தப் பாட்டியிடமிருந்து. அதனால், ஏதாவது நாங்கள் கத்திவிட்டு, அல்லது வீட்டுக் கதவை தட்டிவிட்டு ஓடி வந்து விடுவோம். :-)).
ஆனால், அவர்கள் வீட்டில் குழந்தை கிடையாது. பாவம் என்று எல்லாரும் பேச கேட்டிருக்கிறேன்.

அப்போது க்ரிஸ்டல் கொலுசு பேமஸாக இருந்தது. அது வேலூரில் மட்டுமே கிடைப்பதாகவும் செய்தி. பள்ளி ஆண்டு விழாவில் க்ரிஸ்டல் கொலுசு போட்டு நடனம் ஆட நாங்கள் வேலூர் சென்று வாங்கிவர திட்டம் தயாரானது அந்த திண்ணையில்தான். நால்வர் இருந்த அந்த அணியின் சராசரி வயது 8 அல்லது 9. நல்லவேளை அப்படியெல்லாம்
வாங்கப் போகவில்லை, எல்லாம் தொலைந்துப் போய்விடுவோம் என்ற பயம்தான்!

நான் எட்டாவது படிக்கும் போது, அந்த மூக்குப் பொடித் தாத்தா இறந்துப் போய்விட்டார், கொலை செய்யப்பட்டு!! அவரை கொலை செய்தது, நாங்கள் குடியிருந்த வீட்டில், குணா அக்காவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்த சசி அக்காவின் அண்ணன், பாட்டியின் நகைகளுக்கு ஆசைப்பட்டு!!

யோசித்துப்பார்த்தால், ரொம்பவெல்லாம் திண்ணை பற்றி எனக்கு ஞாபகமோ செண்டிமெண்டல் அட்டாச்மெண்டோ இருந்ததில்லை.மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, நாங்கள் ஹவுஸிங் போர்ட் குடியிருப்புக்கு வந்து விட்டோம்.
அங்கு திண்ணை இல்லை...ஆனால் பலகணி இருந்தது. பலகணி நினைவுகள் என்று வேண்டுமானால் எழுதலாம். ;-) ஆனால், ஒன்று மட்டும் நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்..அது, தெருவில் விளையாடுவது. அந்த வயதில், அதிகமாக நேரம் கழித்தது, திண்ணையில் எல்லா வீட்டு சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து
விளையாடித்தான். சாயங்கால வேளைகளில், சனி, ஞாயிறுகளில் அங்கே அமர்ந்துதான் வேடிக்கை பார்த்தது, சொப்பு வைத்து விளையாடியது, மற்றும் ராஜா, ராணி, திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம். (இப்பொழுதும் அந்த விளையாட்ட யாராவது விளையாடுகிறார்களா தெரியவில்லை..ஒவ்வொருவருக்கும் ஒரு பாயிண்ட்
பேப்பரில் இருக்கும்.மறந்துப் போய்விட்டது!!)

இப்போதெல்லாம் தெருவில் விளையாடுவதென்பதே மறக்கப் பட்டுவிட்டது போல் தோன்றுகிறது. பப்புவை நான் விளையாட அனுப்ப தயாரென்றாலும், தெருவில் இருக்கும் வேறு பிள்ளைகளோ, பெற்றோரோ தயாரில்லை!! :(


பிரேம், உங்க அளவிற்கு இல்லையென்றாலும், ஏதோ எனக்கு இருக்கும் நினைவுகளை(!) எழுதி இருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள், இந்த டேகை தொடரலாம். நான் ஓப்பனா விட்டுவிடுகிறேன்.

Wednesday, September 17, 2008

பப்பு டைம்ஸ்

அரசியல்

"ராஸ்கல்" சொல்லு - பப்பு என்னிடம்.

"ராஸ்கல்"

ஆயா, இங்க பாருங்க அம்மா ராஸ்கல் சொல்றாங்க!!

ம்ம்ம்...!
(aaya is tour moral police @ home. Pappu is aaya's lil helper now!!)

Lateral thinking

பப்புவின் புத்தகங்களைப் பார்த்து கதைசொல்லும்போது, புத்தகத்தை
வைத்துக் கொள்வது அவளது பொறுப்பு. ஒவ்வொரு பக்கமும் முடிந்த பின்
அவள்தான் திருப்புவாள்.

அந்த பக்கத்திற்கான கதை முடிந்தபின்,

பப்பு, திருப்பு..

புத்தகத்தை திருப்பினாள், தலைகீழாக!

கேள்வி கார்னர்:

இது என்னா? - பப்பு

இது புருவம். சொல்லு..புருவம்.

ப(பு)ருவம்....இது ஏன் இங்க இல்ல? (என் மூக்குக்குக் கீழ் காட்டி)
ஏன் இங்க இல்ல..(என் முழங்கையைக் காட்டியபடி)


புருவம் அங்கல்லாம் இருக்காது. கண்ணுக்கு மேலதான் இருக்கும்.
blah...blah..


முடி ஏன் கருப்பா இருக்கு?

முடி கருப்பாதான் இருக்கும், பப்பு.
இந்தியால இருக்கறவங்களுக்கு கருப்பாதான் இருக்கும்.

ஏன் தலைல கருப்பா இருக்கு?

கூகுளிட்டு, முடி கருப்பாயிருக்கக் காரணம் எமெலானின் என்ற பொருள்தான் காரணம் என்றறிந்து சொன்னபோது எழுந்ததுதான் மேலிருக்கும் கேள்வி!!

குழந்தைகளுக்கானத் தமிழ் புத்தகங்கள்

3 வயதுக் குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்கள் மிகவும் குறைவு. அல்லது நான் தேடுமிடம் தவறாக இருக்கலாம். given a choice, நான் தமிழ் புத்தகங்களையே விரும்புவேன்.
தாய்மொழியில் கதை புத்தகங்கள் படிப்பது ஒரு அலாதியான சுகம். பப்புவுக்கும் அப்படியான ஒரு reading pleasure-ஐ அறிமுகப்படுத்தவே விருப்பம். ஆனால் ஏனோ ஆங்கில புத்தகங்கள் அளவுக்கு வெரைட்டி எனக்குக் கிட்டவில்லை.ஆனால் 5 வயதுக்கு மேற்பட்டவருக்கு ஏராளமான புத்தகங்கள் தமிழில் உண்டு.

நியூ ஹாரிஜன் மீடியாவின் ப்ராடிஜி புத்தகங்கள் என்னுடைய ஆதங்கத்தை தணித்தது. பப்புவுக்கு வாங்கியது இந்தப் புத்தகம்.புத்தகங்கள் 5 வயதினருக்குரியது போலிருந்தாலும் பப்பு வயதினரையும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது.தெளிவான பெரிய படங்களுடன் ஒன்றிரண்டு வாக்கியங்களில் கேரக்டர்கள் பேசுவதுபோல் அமைந்திருப்பது சிறப்பு. புத்தகத்திலிருப்பதைப் படித்துக் காட்டினாலே சிறு குழந்தைகள் புரிந்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது.

விலையும் குறைவுதான். மற்ற சில டாபிக்குக்ளையும் டிரை செய்யலாமென்றிருக்கிறோம்.

Tuesday, September 16, 2008

Ouch!

நான் அடித்தாலும், அழுதுக் கொண்டு என்னிடமே திரும்ப ஓடி வரும் உன் தூய அன்பிற்குமுன்
சிறுமைப்பட்டுப் போகிறேன்!!

:(((

Monday, September 15, 2008

(பப்பு(க்))குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல!!

Thursday, September 11, 2008

கேள்வி கேட்கறது ஈசி...

பதில் சொல்லுங்க..ப்ளீஸ்


1. பப்பு தானாக சுழன்றுவிட்டு நின்றுப் பார்த்துக் கேட்கிறாள், "ஏன் வீடு சுத்துது, தரை சுத்துது?!"

2. உன் மூக்கு ஏன் இப்படி இருக்கு? யார் இப்படி பண்ணது?
(நானும் என் மூக்கு நல்லாதானே பப்பு இருக்கு என்றெல்லாம் சொல்லி பார்த்தேன்..ம்ம்ஹூம்..மூக்கை அந்த ஷேப்பில் செய்தது யார் என்று தொந்திரவு!!)

வாழ்த்துக்கள் : புதுகைத் தென்றல்

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புதுகைத் தென்றலுக்கு!!
புதிய அனுபவங்களை பதிவுகளாக்கிட
சமையல் குறிப்புகளை பகிர்ந்திட
இதோ இன்னுமொரு வருடம்....
இனிதாய் பிறக்கட்டும்!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

(ஏதோ கவிதை மாதிரி டிரை பண்ணியிருக்கேன்.....!!)

Wednesday, September 10, 2008

என்ன சொல்ல வருகிறாய்??
பப்புவுக்கு மேஜிக் பால்சை (காலைவேளைகளில்/ வெளிச்சம் உள்ளே வரும் நேரத்தில்) பார்த்து ரசிப்பது மிகவும் விருப்பம். இது ஒரு வாரத்திற்கு ஓடியது!! (பப்புவுக்கு பரிசளித்தத் தோழிக்கு நன்றிகள்!!)

அந்த bowl-ஐ அவள் முன் வைத்து விட்டு, வாயில் எடுத்துப் போட்டுக்கொள்வாளோ என்ற பயத்தில் பொதுவாக எல்லோரிடமும் சொல்வதுபோல், " யாராவது பால்ஸை கையில எடுத்தா, எடுத்து மேல வைச்சிடுவேன்" என்றேன்.

(ஆனால், உண்மையில் அவள் என் வார்த்தைக்ளை மீற வேண்டுமென்றே நினைத்தேன்!! நான் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பதை விட, அவளது க்யூராசிட்டி ஜெயிக்க வேண்டுமென விரும்பினேன்! எல்லாவற்றுக்கும் இது பொருந்துமென்று சொல்லிவிட முடியாது. உதாரணத்துக்கு, ஸ்விட்சை டாகிள் செய்யும்போது/கண்ணாடியை எடுக்கும்போதோ அதை செய்யக்கூடாதென்று அவர்கள் உணருமளவிற்கு கண்டிப்பாய் இருத்தல் அவசியம்!!)


சிறிது நேரத்திற்குப் பிறகு,
'தொடாம கையில எடுத்து பார்க்கிறேன்!" என்றாள்.

என்ன நினைத்தாளோ, திடீரென்று என்னைத் பால்ஸைத் தொட சொன்னாள்.
தொட்டதும், "ஏன் தொட்டே? தொட்டா மேலே வச்சிடுவேன்!" என்று என்னிடமிருந்து வாங்கி மேலே வைத்துவிட்டாள்!!

ரூல்ஸோடு வாழ்வது எவ்வளவு கடினமென்று உண்ர்த்த விரும்பினாளோ?
அல்லது Does she want to rule??

Tuesday, September 09, 2008

வாய்ஸ் ஆஃப் பப்பு

இந்த விளையாட்டினைப் பற்றி எழுதிய பதிவு!!

இதோ பப்புவின் வர்ஷன்!!(credits to her aththai)

Get this widget | Track details | eSnips Social DNA


O pillar *clap*
caterrpillar *clap*
lazy boys *clap*
active girls *clap*
Sing a song *clap*
Ping a Pong *clap*

O pillar
caterrpillar
lazy boys
active girls
Sing a song
Ping a Pong
shoot
attack
release

பப்பு 1 2 3....

ஒரு புதிய விளையாட்டு

சோப்பு தண்ணீரில் காற்றுக் குமிழ்கள் விடுவது!! குமிழ்களை விடுவதை விட, அவற்றை கையில் பிடித்து உடைப்பதுதான் மிகவும் விருப்பம்!

இரண்டு சேட்டைகள்

1. கண்கள் இரண்டால் பாடலில் சுவாதி அழகு காட்டுவது போல், வாயை ஒருப்பக்கம் முறுக்கிக் காட்டுகிறாள். கீழ் தாடையை மட்டும் வேகமாக அசைத்து அழகு காட்டுவது!!

2. நாக்கைத் துருத்திக் கொண்டு, “டாய், ராஸ்கல்” என்கிறாள்.

(சமீபத்தில் கற்றுக் கொண்டது இது!! )


மூன்று காரணங்கள் -பள்ளி போகாததற்கு

1. வயிறு வலிக்குது, நான் ஸ்கூலுக்குப் போகல!!

2. ஸ்கூல்ல பாம்பு இருக்கு! (நம்பாத மாதிரி ஒரு லுக் கொடுத்தவுடன்,) பாம்பு.... ரூம்ல இருக்கு, ஆகாஷை கடிக்குது!

3. ஸ்கூல் போகல, சிங்கம் வந்து கடிக்குது என்னை! (with all the actions!)

நான்கு ரைம்ஸ்

1. Rolly polly - பள்ளியில் கற்றுக் கொண்ட முதல் பாடல்!
2. chappathi chappathi - முதல் மற்றும் கடைசி வரிகள் மட்டும்
3. Incy-Wincy Spider
4. சின்ன சின்ன சிலந்தி

ஐந்து ஆச்சர்யங்கள்

1. Play-Doh-வில் கொஞ்சம் எடுத்து மருதாணி போல் விரலில் குப்பியிட்டு கழட்டி, அதனுள் கொஞ்சம் வேறு கலர் Doh இட்டு, அவளது பாட்டியை மடியில் படுக்கச் சொல்லி, “மருந்து குடி, இல்லனா ஊசிதான்!” என்கிறாள்!!

2. தூங்குவதற்கு முன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ ம்மா” என்கிறாள் !!

3. நிலாவை நாந்தான் பிச்சிட்டேன்! - தேய்பிறையைப் பார்த்து!! (இதைச் சொன்னபோது, அவளது வயது 2 வயது, 3 மாதங்கள். ஒரு ரெக்கார்டுக்காக!!)

4. நான் எக்ச-ச்சைஸ் பண்றேன், என்னைப் பாரு - (இடது காலை தோள் உயரத்துக்குத் தூக்கி, கையால் கட்டைவிரலை பிடித்தபடி!!..ஐந்தில் வளையும்..ம்ம்ம்!!

5. “என் கையை புடுச்சிக்கோ..இல்லன்னா விழுந்துடுவே!! - மாடிப்படி ஏறும் போது அவளது பாட்டியிடம் !!(இதைச் சொன்னபோது, அவளது வயது 2 வயது, 5 மாதங்கள். ஒரு ரெக்கார்டுக்காக!!)

Friday, September 05, 2008

வாழ்க்கை எனும் பள்ளி!!

பத்தாவது முடித்து மார்க் ஷீட் வாங்கியதும் எல்லோரும் எதிர்கொள்ளும் கேள்வி "என்ன க்ரூப் எடுக்க போறே?!" எல்லாருக்கும் (பொதுவாக எல்லா பெண்களுக்கும்) இருக்கும் அதே ஆசைதன்..வேறென்ன..கோட்டெல்லாம் போட்டுகிட்டு, பாக்கெட்டுல கை விட்டுக்கிட்டு, கழுத்துல ஸ்டெத் போட்டுட்டு, காசை வாங்கி டேபிள் ட்ராவில் போடணும் என்றுதான்!!

யாரோ என்கிட்ட சொல்லிட்டாங்க..B (pure Science!!) க்ரூப் எடுத்தாதான் டாக்டருக்குன்னு!!
வீட்டுல சொன்னப்போல்லாம் கேட்காம, அப்ளிகேஷனில் அந்த க்ருப்புக்கே நிரப்பி ஃக்யூவில் நின்றுக் கொண்டிருக்கும் போது வந்தார் நந்தகுமார் சார், +1/+2 வின் பிசிக்ஸ் மாஸ்டர்!அதுவரை அவரிடம் பேசியது கூட இல்லை!!

என்னிடம் வந்தவர், "என்ன? A க்ரூப் தானே?" என்றார்!
கொஞ்சம் நன்றாக படிக்கும் பெண் என்பதாலாயோ, எனது பெரிம்மாவும் அதே பள்ளியில் வேலை செய்வதாலேயோ நான் அறியாமலேயே நிறைய பேருக்கு என்னைத் தெரிந்திருந்தது! (அந்த ஒரு காரணத்தினால் நன்றாக படிப்பது போல நடிக்க வேண்டியிருந்தது..ம்ம்ம்!! சமயங்களில் அதுவே வினையாகவே இருக்கும், நான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேன்
எனது நான் வீட்டிற்கு வருமுன்னரே செய்தி வந்துவிடும்!! )

"இல்லை, B" என்றேன்!

"என்ன செஞ்சிக்கிட்டிருக்க?" என்று சொன்னவர், என் அப்ளிகேஷனை வாங்கி, அவரது பாப்கெட்டிலிருந்த பேனாவால், க்ரூப் நிரப்பியிருந்த காலத்தை அடித்து விட்டு, A க்ருப்பிற்கானவற்றை நிரப்பினார்!

அந்த ஒரு நொடி எனது முழு வாழ்க்கையையே மாற்றியது!!

+2 வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால்,
கணினித் துறைக்குள் நுழைந்தேன்..இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்!!
ஒருவேளை, கணக்கு இல்லாத முழு அறிவியல் குரூப்பினை படித்து, இந்த மார்க் எடுத்திருந்தால் நான் இப்போது என்ன செய்துக் கொண்டிருப்பேன் என்று என்னால் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை!!

நன்றி சார்!!

என் தாத்தா-பாட்டியிலிருந்து, அம்மா, பெரிம்மா, மாமா வரை அனைவருமே ஆசிரியர்கள் தான்!! ஏதாவது ஒருவிதத்தில் என்னை வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள் தான்..இப்போது பப்புவையும்!!

இவர்கள் மட்டுமல்ல, ஆரம்ப பள்ளியிலிருந்து எனது கல்லூரி வாழ்க்கை வரை வாழ்க்கை எனும் பாடத்தை கற்றுக் கொடுத்த உங்களனைவருக்கும் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்!!

Thursday, September 04, 2008

அட்டைப் பட அம்மாக்கள் - Anybody with me?இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தினைக் என் பாட்டியிடம் காட்டி "இது யாரு" என்று வினவினாள் பப்பு!!

அம்மா!அம்மா பாப்பாவை தூக்கி வச்சிருக்காங்க!!

இல்ல..இது ஆயா!!

பப்புவால் அம்மா என்பவர் இப்படி இருப்பார் என்று கோரிலேட் செய்யவே முடியவில்லை!!
இந்த அம்மா அவதாரத்தை இனியாவது மாற்றுவார்களா?
அம்மாக்கள் சல்வாருக்கும் ஜீன்ஸுக்கும் மாறி வெகுகாலமாகிவிட்டது!!
(எனக்குத் தெரிந்து, அம்மாக்கள் பாதி பேரின் தலைமுடி தோள் வரைதான்!! )
பதிப்பகத்தார் இந்த கன்வென்ஷனல் அம்மா அவதாரத்தை மாற்றினால் தேவலை!!

பி.கு:
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல. ஸ்டெப் கட்டோடு, மாடர்ன் உடையில்
இருக்கும் என்னை மாதிரி அம்மாக்கள் என்ன ஆவது, படத்திலிருப்பது தான் ஸ்டாண்டர்டு அம்மா என்று குழந்தைகள் புரிந்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் விளைந்ததே இந்தப் பதிவு!!

Princess Messy's

Bright and Messy pictures!!
***************************************************************************
நேற்று அதிகாலை எனது அம்மா வந்திருந்தார்கள். பப்பு வழக்கம் போல ஏழு மணிக்கு எழுந்து விட்டாள்.
இன்னும் கொஞ்சம் தூங்கலாமேயென்று நான் புரண்டுக்கொண்டிருதேன்...பப்பு விடவில்லை!

பப்பு, வடலூர் ஆயா வந்திருக்காங்க, போய் பாரேன்!!

நீயும் வா...

நீயே போய் பாரு பப்பு!!

கதவைத் திறந்து வெளியே சென்று, ஆயாவை பார்த்த பப்பு,

"ஆயா வந்திருக்காங்கன்னு அம்மா சொன்னாங்க! நெஜமாத்தான் இருக்கு!! "

(நெஜம், பொய் என்ற வார்த்தைகளை நான் கற்றுக்கொடுக்கவில்லை!!!)


***************************************************************************

ரோல் மாடல்!!

பப்புவிடம் ஒரு சிறிய துடைப்பம் உண்டு! . அவளது வீடு பெருக்கும் ஆசைக்காக !!
(துடைப்பத்திலிருந்து ஒடித்த துண்டு!!)

பெருக்கிக் கொண்டே

"ஆயா, நாந்தான் வசந்தா!! நாந்தான் வசந்தா, ஆயா!!"

(வசந்தாம்மா, எங்கள் காம்பவுண்டை பெருக்கி தூய்மை செய்பவர்!!)

Tuesday, September 02, 2008

"பூங்கா"வியம்!!
பப்புவோடு கிண்டி சிறுவர் பூங்காவிற்கு சென்றிருந்தோம். இதற்கு முன் பலதடவைகள் சென்றதை விட,(3/4 மாதங்களுக்கு முன்) தற்போது பல மாற்றங்கள் பப்புவிடம்! மான்களையும் நாரைகளையும் தொட்டு பார்க்கவும், "என்கிட்ட வா" என்று கூண்டுக்குள் கத்தவும் தலைப்பட்டாள்! தூக்கச் சொல்லாமல் அவளாகவே நடந்தும், ஓடியும் சென்றாள்!


கிண்டி சிறார் பூங்கா ஒரு நல்ல டைம் பாஸ். மரங்களுடனும், திறந்த வெளியில் குழந்தைகள் விளையாட ஏற்றது! ஆனால், சில மிருகங்கள் இருந்த கூண்டு அருகில செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசியது! குழந்தைகளுக்கான விளையாட்டு ஊஞ்சல்களில் 35-40 வயது மதிக்கத் தக்க குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்!