Friday, August 29, 2008

பதிவர் அனுராதாவிற்கு அஞ்சலிகள்!!
நோயுடனும், வலிகளுடனும் போராடினாலும் தாம் வாழ்ந்த சமூகத்திற்கு நோயைப்பற்றி
விழிப்புணர்வை கொடுத்த அன்னாருக்கு அஞ்சலிகள்!!

அனுராதா...

வலிகளுக்கு அடிபணியாத
உமது தைரியத்துக்கு தலைவணங்குகிறேன்!!

Thursday, August 28, 2008

வேலைக்கு நடுவே....

ட்ரெயினிங்கில் ஒரு பகுதி கவனித்தல், அதாவது மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்பது பற்றி!! பாதி பேர் வெளியிலும், மீதிபேர் உள்ளேயும் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். வெளியில் இருந்து வரும் ஒருவர், உள்ளே இருப்பவரின் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து அவரிடம் 3 பேச வேண்டும். உள்ளே இருப்பவர்களுக்கு சொல்லப்பட்டது, நீங்கள் அவர்கள் பேசுவதை கவனிக்க வேண்டும், ஆனால் உங்கள் நடவடிக்கைகள் அப்படி இருக்கக்கூடாது, அதாவது பேனாவை ஆட்டிக்கொண்டோ, வேறு எங்காவது பார்த்துகொண்டோ அல்லது
சம்பந்தமில்லாத வேறு கேள்விகள் கேட்டுக்கொண்டோ இருக்கலாம்.

ஒரு ஜோடி A & B!!

நிகழ்ச்சி நடத்துபவர், A(பேசுபவர்) & B( கேட்பவர் ) யிடம் என்ன நடந்தது என்ன கேட்டபொழுது, B சொன்னார் "A stopped talking after sometime!"

நடத்துனர் Bயிடம். "what made you to stop?"


A வெகு சீரியசாக, “when I was talking he was doing something on his mobile.
So, I thought he is recording my talk"!!!

!!!!!!!!!!

(And they were all asked to talk what they are passionate about!)

வேலைக்கு நடுவே....

இரண்டு நாட்களாக ஒரு ட்ரெயினிங்!!
சரியான நேரத்தில் வராதவர்கள் ஏதாவது பாட்டு பாட வேண்டும் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாயிருந்தது!A வந்தது லேட். சிறிது யோசித்த A, ”நான் பாட்டு பாடறேன், சூரியன் படத்துல பிரபுதேவா பாடும் பாட்டு!
நீங்க எல்லாரும் ஐலசான்னு கோரஸ் குடுக்கணூம்” என்று சொல்லிவிட்டு,
ஆரம்ப வரிகளை பாடத்துவங்கினார்

அப்தலா ..!!

ஐலசா!


.....

ஐலசா!

ஏ மரமும் பொளக்கும்!!

ஐலசா!தமிழ் தெரியாத H, மெதுவாக பக்கத்திலிருப்பவரிடம்

மச்சா, சான்ஸ்கிரிட் words??

சிரிப்பில் அதிர்ந்தது ரூம்!!

Wednesday, August 27, 2008

நீயா? நானா?

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு பார்த்துக் கொண்டிருந்தோம்!

அதில் நெல்லைக் கண்ணன் தூய தமிழில் உரையாடியது, பப்புவுக்கு புரியவில்லை போல!
என்ன சொல்றாங்க...நீ சொல்லு என்று கேட்டுக்கொண்டிருந்தாள். அது சினிமாவை பற்றிய ரவுண்ட்! அதனைத் தொடர்ந்த எங்களது உரையாடல்

சினிமா, டீவி பார்க்கறது நல்லதா கெட்டது??

.....

சின்ன பசங்க டீவி பார்க்கலாமா, பார்க்கக்கூடாதா?

டீவி பார்க்கக் கூடாது!!

நீ டீவி பார்க்கலாமா, பார்க்கக்கூடாதா?

......

நீ சின்னப் பொண்ணுதானே! நீ அக்கம் பக்கம், நாக்க முக்கல்லாம் ஏன் பார்க்கற?
நீ டீவி பார்க்கலாமா பார்க்கக் கூடாதா?

என்னைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள், டீவி பக்கம் திரும்பிக் கொண்டு,

பாப்பேன்”!!

!@#$$

Tuesday, August 26, 2008

தேவதைக்கதைகளைத் தேடி


பப்புவுக்கு ஃபெய்ரி டேல்ஸ் சொல்லலாமென்று புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்!!
திகைப்புதான் மேலிட்டது!! ஏனெனில், நான் பார்த்த எல்லா கதைகளிலும் ஏதாவதொரு நெகடிவ்
அம்சம் இருக்கிறது!!

புத்தகத்தில் முதலில் இருந்தது ஸ்நோவொய்ட் கதை.
அதை சொல்லவதற்கு எனக்கு சற்றும் விருப்பமில்லை!
"who is the fairest of them all"
வெண்ணிறம்/சிவப்பு தான் உயர்ந்தது என்று சொல்ல தோன்றவில்லை!
மேலும், stepmother/சித்தி கேரக்டரும்..அதுமில்லாமல் பப்புவுக்கு ஒரு
உறவு முறையில் (முகிலின் தம்பி மனைவி!) சித்தி இருக்கிறார். அந்த சித்தியையும்,
witch சித்தியயும் ரிலேட் செய்துக் கொண்டால்...குழந்தைகளின் சிந்திக்கும் திறனை
நாம் குறைத்து மதிப்பிட முடியாது!!

அடுத்ததாக, சின்ரெல்லா!!
இதுவும் நெகடிவ் கதைதான்..அம்மா இல்லாமல் குழந்தை தனித்து விடப்படுதல்..
அப்பாவின் அரவணைப்பு இல்லாமை, சித்திக் கொடுமை!!
ஓ..மை காட்!! இந்த கதையும் சொல்லவதற்கு ஏற்றதல்ல தற்சமயத்திற்கு என்னை பொறுத்தவரை!!இவை மட்டுமல்ல..எந்த தேவதைக்கதைகளை எடுத்தாலும் ஏதாவதொரு நெகடிவ் இருக்கத்தான் செய்கிறது!! சில கதைகளில் அது குறைவாயிருக்கும்....ஸ்லீப்பிங் ப்யூட்டி போல்! அதில் நாம் சொல்லும் விததில் அந்த நெகடிவிட்டியை போகஸ் செய்யாமலிருக்கலாம்!!

தற்சமயத்திற்கு எனக்கு கை கொடுப்பது கோல்டிலாக்ஸ் மற்றும் தவளை மாமா (The frog prince!!), jungle book கதைகள்! ஆனால் பப்புவிற்கு தவளையை கிஸ் செய்வது கற்பனைக்கு அப்பாற்பட்டதாயிருக்க வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடாததாயிருக்க வேண்டும்!

ஆனால் எவ்வளவு நாள் கோல்டிலாக்ஸ் கதை ஓடும்!!
சிங்கம்/நரி கதைகள் என்றாலும் அதிலும் வன்முறைதான் தலைவிரித்தாடுகிறது!!
Jataka tales CD வாங்கினால் வேடன் அம்பு எறிவதும் சிங்கம் விலங்குகளை அடித்துக் கொல்வதுமாயிருக்கிறது!!

பப்புவிற்கு ஒரு அழகான கற்பனை உலகத்தை கண்முன் விரிக்கக்கூடிய அன்பான கேரக்டர்கள், விந்தை மனிதர்களுடன் கூடிய மாய உலகத்தை பற்றியக் கதைகள், ஆச்சர்யங்கள் நிறைந்த கதைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்!!

நீ கொழந்தையா இருக்கச்சே....ஆவிதான் கொடுத்தேன்!!படம் : http://vikatangroup.blogspot.com


ஆனந்தவிகடனை பெரிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தபோது பப்பு அதை பிடுங்கினாள்.
அவளிடம் கொடுத்து விட்டு, சின்ன புத்தகத்தை படிக்கத்துவங்கினேன். பப்பு பெரிய புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தபோது ஒரு பக்கம் கிழிந்து விட்டது!!

பப்பு ஏன் புக்கை கிழிச்சே??

நான் கிழிக்கலே..அது கிழிச்சிகிச்சி!!


பாத்து திருப்பனும். இப்படியா கிழிப்பாங்க??

அதுதான் கிழிச்சிகிச்சி..ஏன் கிழிச்சிகிச்சி??

ம்ம்ஹூம்!!

இப்போதெல்லாம், நான் சின்ன எடிஷனைப் படிக்கிறேன். பப்பு, பெரிய எடிஷனை படிக்கி(!)றாள்!!

I love the way she pronounces "ஆனந்த விகடன்”!!

ஃப்ளாஷ்பேக்:

எனது பெரிம்மா சொல்வார்கள், நான் எனது 5ஆவது வயதில் ஆனந்த விகடனை படிக்க ஆரம்பித்தேன் என்று!!மெரினா எழுதின ஒரு நகைச்சுவை தொடர் விரும்பிப் படித்த நினைவு!!எங்கள் குடும்பமே ஒரு ஆனந்த விகடன் குடும்பம். பழைய ஆனந்த விகடன்களை சேர்த்து வைத்திருந்து, அடிக்கடி அவற்றிலிருந்து சிறுகதைகள், தொடர்கதைகள் என பிரித்து தொகுப்புகளாக தைத்து வைக்கும் பழக்கம் சமீப காலம் வரை தொடர்ந்தது.
ஸ்டெல்லா புருஸின் “அது ஒரு நிலாக்காலம்” தொடர்கதை அப்படித்தான் பொழுதுபோகாத ஒரு மதியவேளையில் புத்தக அலமாரியை நோண்டிக் கொண்டிருந்த போது கிடைத்த தொகுப்பிலிருந்து அறிமுகமாயிற்று! அந்தத் தொடர் வந்தபோது
நான் பிறந்திருக்கவில்லை.இப்போது வரும் சின்ன விகடனின் கதைகள் ஒருவேளை அந்தத் தொகுப்புகளில் தேடினால் கிடைக்கலாம்! ஓரிரு வருடங்கள் நான் பொதுத்தேர்வு எழுதிய வருடங்கள் மட்டும் வீட்டில் ஆனந்த விகடன் பார்த்த நியாபகம் இல்லை!!

குப்பை என திட்டினாலும், ஆவி படிக்கும் பழக்கத்தை யாராலும் விடமுடியவில்லை எங்கள் வீட்டில் பப்புவிலிருந்து எனது பாட்டிவரை!!

Monday, August 25, 2008

பப்பு டைம்ஸ்வரிசையில் செல்லும் எறும்புகள்!! படம் :- பப்பு


எப்போதும் போகும் கிண்டி சிறுவர் பூங்கா/நங்கநல்லூர் பூங்காவிலிருந்து மாறுபட்டு, நாகேஸ்வரராவ் பார்க் மைலாப்பூருக்கும் சென்றோம், சனிக்கிழமை காலை 10 மணிக்கு!!
மருத்துவரை பார்க்க சென்று பின், வீட்டிற்கு போய் என்ன செய்வது என்று பூங்காவிற்கு சென்றோம். பப்புவுக்கு 101 டெம்பரேச்சர். ஆனால் பூங்காவினுள் ஓடியும், பிறர் நடப்பதை பார்த்து வேகமாயும் நடந்து, பூங்காவை இரண்டு முறை சுற்றியும், இன்னமும் பூங்காவினுள்
நடக்க விரும்பினாள் அவள்!!

நமக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லையென்றால் எவ்வளவு பாடுபடுத்தி விடுகிறோம் வீட்டில் இருப்பவர்களை!! ஆனால் குழந்தைகள், அந்த நேரம் மட்டுமே..படுத்திருப்பது கூட இல்லை...உட்கார்ந்துக் கொண்டு விளையாடும் விளையாட்டையாவது ஆடிவிடுகிறார்கள்!! குரோசின் உள்ளே சென்ற அரைமணிக்கெல்லாம், பப்பு ஓடவும், குதிக்கவும் ஆரம்பித்து விடுகிறாள்!! ரெஸ்ட் எடுப்பதற்காக மேடம் இன்று லீவ்!! (ஆனாலும் ரெஸ்ட் எடுக்கிற வழியைக் காணோம்!! சிரப் குடித்திருப்பதால், விரைவில் தூங்கி விடுவாள்..)


ரங்காச்சாரியில் பப்புவுக்கு சில ரெடிமேட் பாவாடைகள் எடுத்தோம்.
ரூ 200லிருந்து பாவாடை-சட்டைகள் குழந்தைகளுக்கு கிடைக்கின்றது, பட்டிலிருந்து பட்டு போன்ற
அபூர்வா வரை!! படங்கள் later!!

பப்புவை பார்த்துக்கொள்ளும் சரளாம்மா, பப்பு சாப்பிடவில்லையென்றால், "நான் ஊருக்கு போறேம்மா, பாப்பா சாப்பிட மாட்டேங்குது" என்பார்கள். அதிலிருந்து அவளுக்கு பிடிக்காததை அல்லது எரிச்சலூட்டும்படி யாராவது ஏதாவது செய்தால்,"நீ ஊருக்குப் போ" என்பாள்!! நேற்று என் பெரிம்மா வந்திருந்தப்போது, அவளுக்கு சாப்பாடு ஊட்ட முயற்சி
செய்துக்கொண்டிருந்தார்கள்!அதுதான் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத விசயமாயிற்றே!

முதலில் "நீ ஊருக்குப் போ" என்ற பப்பு, சட்டென்று உணர்ந்து "என்னைத் தூக்கிக்கிட்டு ஊருக்குப் போ" என்றாள்!!

Saturday, August 23, 2008

ஏன்/எப்படி ??

பிறர் புரிந்துக்கொள்ள இயலாத பப்புவின் சில பேச்சுக்கள் எனக்கு மட்டும் புரிவது எப்படி?!

பப்புவை கண்ணாடிக்கு அருகில் கொண்டு சென்றால், நான் பப்புவை மட்டுமே பார்க்கிறேனே, என்னை பார்க்க மறப்பதெப்படி?!

என் ஆயாவின் மாத்திரைகள் கீழே விழுந்த இடம் பப்புவின் கண்களுக்கு மட்டும் தெரிவது எப்படி??

உறவினர்கள் போனில் பேசும்போது கூப்பிட்டால் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச மறுக்கும் பப்பு, என் மொபைலில் யாரும் பேசாத பொழுது, அவர்கள் பேசுவதுபோல் தானாக கற்பனை செய்து மணிக்கணக்கில் பேசுவது ஏன்?

Monday, August 18, 2008

பப்புவின் பாட்டிகளும் ஒரு வாரயிறுதியும்

எனது பாட்டி ஒரு மாறுதலுக்காக ஆம்பூர் சென்றுவிட, முகிலின் பாட்டி
பப்புவை பார்த்துக் கொள்ள வந்திருந்தார்கள். டிபிகல் கிராமத்துப் பாட்டி..
புடவை பின் கொசுவம் வைத்துக் கட்டி, மூக்குத்தி அணிந்து வெற்றிலை போட்டிருப்பார்கள்.
பப்புவுக்கு அவர்கள் இரு பக்கத்திலும் மூக்குத்தி அணிந்திருந்தது மிகவும் வித்தியாசமாயிருந்தது போல!எப்போதும் அதையே கேட்டுக்கொண்டிருந்தாள்.
மேலும், அவர்கள் வந்து தங்குவது இதுவே முதல் தடவை. வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருப்பதால், பப்பு சுண்ணாம்பை எடுத்து விடுவாளோவென்று பயத்தில் தங்குவது இல்லை! இப்போது கொஞ்சம் புரிந்துக்கொள்வதால் தயக்கம் இல்லை!
ஆனால், பப்பு அவர்களிடம் நன்றாக மழகினாள்..புத்தகத்தை எடுத்து சொல்லித் தருவது,
அவர்களிடம் கதை கேட்பது, சாமான் வைத்து விளையாடுவது என்று நன்றாக ஒட்டிக் கொண்டாள். இந்த மூன்று நாட்கள் விடுமுறைக்கு எனது அம்மா, பெரிம்மா வந்தபின் அவர்கள் ஊருக்குக் கிளம்பினார்கள்! அவர்கள் வந்த பின் அவர்களிடம் அவளது புது விளையாட்டுச் சாமான்கள், கதை என்று தொடர்ந்தது!!இப்போது அவர்களும் சென்றபின், எனது ஆயாவிடம் அவளது விளையாட்டுகள், கதைகள் தொடர்கின்றன...
”பெரிய ஆயா எங்க எங்கன்னு கேட்டேன்” என்று !!

ம்ம்..எனது செல்ல தேவதை, இரு வீட்டாரிடமும் நேசமுடன் பழகுவது மனதுக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது!!

***********************************************************************
ஆண்பாவம் என்ற படத்தினை பார்த்தேன். அதில் வரும் அந்த பாட்டி காமெடி, முட்டுதா காமெடியை முன்னரே பார்த்திருந்தாலும் இப்போதுதான் முதன்முறையாக முழு படத்தினையும் பார்த்தேன். என்ன காமெடி..கிராமத்துச் சூழல், அன்றாடம் பார்க்கும் மனிதர்கள் போல எல்லாரும்..சீதா அடக்கமான அழகோடு...அனைவரது இயல்பான் நடிப்பு என கலக்கல் படம்!!அதுவும் அந்த பாட்டி பாட்டு..சான்சே இல்லை! இப்போ வர்றதெல்லாம் என்ன படம் என்று எண்ன வைத்தது!!இன்றைக்கு பார்த்தால், கானா பிரபா அந்தப் படத்தின் இசையை தொகுத்திருக்கிறார். அதில், பின்னூட்டங்கள் பார்த்தால்,
ஆயில்யன் மனப்பாடமாய் சொல்கிறார்!! :-)

***********************************************************************


ஏன் அம்மாக்கள் மட்டும் எப்போதுமே நாம மூணு தோசை போதும்னு சொன்னா, நாலாவதா ஒரு தோசை சுட்டு வச்சிட்டு "சாப்பிட்டுடுமா, செஞ்சிட்டேன்" என்கிறார்கள்??

Saturday, August 16, 2008

SRK

முன்பதின்மங்களில் எனை மிகவும் ஈர்த்த பாடல்!!
what a die-hard fan of SRK I was!!


நானும் என் தம்பியும் உபயோகித்த பிரம்பு நாற்காலியை பப்புவிற்காக கொண்டு வந்திருக்கிறார்கள் என் பெரிம்மா, அதோடு நினைவுகளையும்!!
அதான், கொஞ்சம் நாஸ்டால்ஜிக்!!

ரைம் டைம்

”ஆயாம்மா டைனி ஸ்லீப்பீங்.. ஸ்லீப்பீங் “

என்று இரண்டு நாட்களாக ஒரு வித சிங்-சாங் ட்யூனோடு சொல்லிக்விட்டு படுத்து கைகளை தலைக்கு அடியில் வைத்து தூங்குவது போல் பாவனைக் காட்டினாள்!!

என்ன வித்தியாசமாக இருக்கிறதே,அதுவும் ஆயாம்மா என்று வேறு சொல்கிறாளே என்று, நானும் தலையை பிய்த்துக் கொண்டிருந்தேன்!!

பின்னர், அவளது புத்தகத்தை எடுத்துப் பார்த்தால்,

i am a tiny seed sleeping, sleeping" என்று ஒரு பாடல், புதிதாகக்
கற்றுக் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது!!

பப்பு என்றொரு பூ


இரவு நீண்ட நேரமாகியும் தூங்காததால், பப்புவோடு விளையாட மறுத்து
“எனக்கு முதுகு வலிக்குது, நான் தூங்க போறேன் பப்பு” என்று படுத்துவிட்டேன்.
கதவை திறந்து வெளியே சென்ற பப்பு என்ன செய்கிறாள் எனத் தொடர்ந்தபோது,
அவள் அத்தையிடம் “அம்மாவுக்கு முதுகு வலிக்குது, தைலம் எடுத்துக்குடு”
எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்!

இந்தப் பெண் என்னை பூரிப்பூட்டுகிறாள் !!

பப்பு, abcd சொல்லு!!

z வரைக்கும் சொல்கிறாளே, ரெக்கார்ட் செய்யலாம் என்று ரெக்கார்டை ஆன் செய்துவிட்டு கேட்டால்,

"abcd" !!

இந்தப் பெண் என்னை புன்னகைக்க வைக்கிறாள்!!

நான் வெளியில் கிளம்பும் போது பப்பு சொல்லத் தவறுவதேயில்லை..
“பார்த்து பத்திரமா போய்ட்டு வா”!!

தொலைபேசிவிட்டு வைக்கும்போது,
“சரி, ஓக்கே, பை!! ‘

பக்கத்துவீட்டு ஒன்றரை வயது சிறுவன் ஆதியை அவனது பாட்டி உணவு ஊட்டுவதற்கு
தூக்கிக் கொண்டு எங்கள் சன்னல் பக்கம் வருவது வழக்கம். பப்பு
கிரில் கதவின் மீதேறி, (ஒரு கதவை மட்டுமே திறக்கமுடியும்) அதை திறந்து
அந்த பக்கம் சென்று இறங்கி ”உள்ள தூக்கிக் கிட்டு வாங்க, உள்ள வாங்க!!” என்கிறாள்.

இந்தப் பெண் என்னை வியக்க வைக்கிறாள்!!

”என் செல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லம்!

என் பட்டுக்குட்டி!

என் வைரம்!!

நான் உனக்கு முத்தம் குடுக்கறேன் "என்றென்னை கொஞ்சும்போது நெகிழவைக்கிறாள்!!

எல்லாவற்றுக்கும் மேல், உன்னோடு “வாரான் வாரான் பூச்சாண்டிக்கு” டான்ஸ் ஆட மிகவும் பிடிக்கிறதெனக்கு :-)!!


நன்றி பப்பு..என்னுள் மறைந்திருக்கும் சிறுமியை அடையாளம் காட்டத் தெரிகிறது..
என்னுள் இருக்கும் அம்மாவையும் வெளியே கொண்டு வரத் தெரிகிறது உனக்கு...!!!

Friday, August 15, 2008

பப்பு அகராதி

கிங்ங..
கிக்கதா!!!
ஆலுபுலா...

பப்புவின் அர்த்தமற்ற வார்த்தைகளா யிருக்கலாம், ஆனால் உணர்ச்சியுள்ள வார்த்தைகள் !

x கிங்ங - இப்போதைக்கு வேண்டாம் என்று பொருள். x - விளையாட்டு பொருள்/ஆயா etc

கிக்கத்தா - she is excited!!

ஆலுபுலா - நாம் செய்யும் ஏதோவொன்று அவளுக்கு எரிச்சலூட்டுகிறது!!

இன்னும் பல இருக்கின்றன்..ஆனால், இதுதான் பேசிக்!!

Thursday, August 14, 2008

1891-ல் பிறந்த இப்பெண்மணியை பற்றி இணையமும் கூறுகிறது இன்று!!

பலமுறை வீட்டில் நிழல்படத்திலும், பத்திரிக்கைகளிலும் பார்த்திருந்தாலும், இணையத்திலும் காண்கின்ற போது உவகை கொள்கிறது மனம்!

அஞ்சலை அம்மாள்


தலைவணங்குகிறோம் உமது தியாகத்திற்கு!!

Thanks to www.kamat.com

ஏதாவது உருவ ஒற்றுமைகள் இருக்கின்றதா பப்புவுக்கும், எனது great-grand mother-க்கும்??! :-)

Tuesday, August 12, 2008

யாராவது சொல்வீர்களா இதன் விடையை?!!

half-a-circle, full circle half-a circle A
half-a-circle full circle right angle Ap.s : ஸ்கூல் சீனியர்களிடமிருந்து கற்றுக் கொண்டது....கற்றுக்கொடுத்த சீனியர்கள் வாழ்க!

ராகேஷ்வரி aka ராக்ஸ்

என் பதின்மங்களில் கோலோச்சிக் கொண்டிருந்த இந்தி பாப் உலகில்,
தடாலடியாக வந்து கலக்கியவர், ராகேஷ்வரி, இசையும் இளமையுமாக!!
எனர்ஜ்ட்டிக்கான இசை, இளமை துள்ளும் குரல், மாலத்தீவுகளில் எடுக்கப்பட்ட
வீடியோ என எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தது துனியா!!
அதுவும், "மேனே தேக்கா ஹா சபி ரங்க் துனியா கே ", என் ஆல் டைம் ஃபேவரிட்!!அவருடைய ஆல்பங்கள் கொஞ்சம் சமூக அக்கறை, குழந்தைகள் நலன், தேசப்பற்று
என எல்லா மசாலாக்களுடனும் இருக்கும். அதில் ஒருவர் வயதான தாத்தா (த்ரிலோக்?)
வருவார்..அப்பா என நினைக்கிறேன்!!

தொடர்ந்து இரு ஆல்பங்கள் கொடுத்த ராகேஷ்வரி, 2000-க்குப்பின்
உடல்நலக் குறைவு காரணமாக இசையை தொடரவில்லை.
இப்போது எப்படி இருக்கிறார், என்ன ஆல்பம் என ராக்ஸின் விசிறிகள் யாராவது
சொன்னால் மகிழ்ச்சியடைவேன்!!

RagZ..come back ..We all want you on the stage!! Come back Ragz!!

Monday, August 11, 2008

பப்பு டாக்கீஸ்

"எனக்கு புழுதிவாக்கம் வேணும்" என்று பப்பு சொன்னபோது
ஐய்யயோ..அட்ரஸ் சொல்லிகொடுத்தது தப்பா போச்சே என்றுதான் தோன்றியது!!
அதுவும் டீவிக்கு பின்னால் கைக்காட்டியபோது எதை சொல்கிறாள் எனபதை உணர சில நிமிடங்கள் ஆயிற்று எனக்கு!!

பப்புவுக்குத் தெரியாமல் வைக்க வேண்டிய பொருட்களை அங்கு ஒளித்து வைப்பது வழக்கம்.
பார்த்தால், ஏதோ நீட்டிக் கொண்டிருந்தது....ஓ..அதுதான் புழுதிவாக்கமா..
சோழிகள் தொலைந்து போகின்றனவென்று மறைத்து வைத்திருந்த பல்லாங்குழிதான் புழுதிவாக்கமாகியிருக்கிறது மறைந்திருந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக!!


வாழ்த்துக்கள்...பல ப்ளாக்குகளையும், வரலாற்றையும் இனி ஆக்கிரமிக்கபோகிற இவருக்கு!!!

அஞ்சு எலி இல்லை.....ஒரே எலி..சிவப்பு எலி!!பப்பு இதை வரைந்துவிட்டு, ஒரு நிமிடம் உற்றுப்பார்த்துவிட்டு சொன்னாள்...

இதோ எலி...ஓகே.accepted!!

Wednesday, August 06, 2008

எனக்குப் பிடித்தமான பாடல்களில்....

இதுவும் ஒன்று!!

Words - Bee Gees

Words - Bee Gees

Smile an everlasting smile
A smile could bring you near to me
Don't ever let me find you gone
'Cause that would bring a tear to me
This world has lost it's glory
Let's start a brand new story
Now my love right now there'll be
No other time and I can show you
How my love
Talk in everlasting words
And dedicate them all to me
And I will give you all my life
I'm here if you should call to me
You think that I don't even mean
A single word I say
It's only words, and words are all
I have to take your heart away
You think that I don't even mean
A single word I say
It's only words, and words are all
I have to take your heart away
It's only words, and words are all
I have to take your heart away

பப்பு டைம்ஸ்

பாட்டு மாதிரி - பப்புவுக்காக


அப்பாக் கரடி ஒன்று
வேகமாய் வந்து
பப்புக்குட்டியை தூக்கிக்கொண்டது!!

அம்மாக் கரடி ஒன்று
மெதுவா மெதுவா வந்து
பப்புவுக்கு முத்தம் குடுத்தது!

குட்டி கரடி ஒன்று
ஓடு ஓடி வந்து
பப்புவுக்கு
கிச்கிச் பண்ணுது!!

பாடல் வரிகள், இசை - நானேதான்!!
(இந்த பாட்டுக்கு ஓடி வந்து, பின் மெதுவாக வந்து, கிச்கிச் பண்ண வேண்டும், she will start giggling)!!

கதையில்(தற்போது கோல்டிலாக்ஸ்) , பாப்பா வந்தால் அது அவள்தான் என நினைத்துக் கொள்கிறாள் :-)!

பள்ளி மற்றும் நண்பர்கள் :


(ஸ்கூலுக்கு ரெடி!!)


பள்ளி, சேர்ந்த இரண்டாம் நாளிலிருந்து பிடித்துப் போனது!
பள்ளி சென்றதிலிருந்து தானாக பல் துலக்குவது, சாப்பிடுவது, செருப்பு அணிவது என
அவள் வேலையை செய்கிறாள்..எவ்வளவு நாள் என தெரியவில்லை!!
பள்ளியில், "ஒரு அண்ணா தண்ணி கேட்டான், அவன் கையை பிடிச்சி அடிச்சிட்டேன்" என்றாள்.


நண்பர்கள் பெயர்கள் : வெண்மதி தான் அவள் சொன்ன முதல் பெயர். பின்னர் அந்த லிஸ்ட் தற்போது சாந்தி, விஜய், தனுஷ், ஆகாஷ் (இன்னும் சினிமா நடிகர்கள் பெயர் தெரியவில்லை..கமல் தவிர)என்று வளர்ந்து வருகிறது!!


கிரியேட்டிவிட்டி கார்னர் :

1 :

என் அம்மா சமையல் செய்யும்போது கிடுக்கி உபயோகிப்பதை பார்த்த பப்பு,
அவள் சமையலுக்கு உபயோகித்த கிடுக்கி இது!! முதலில் எனக்கு புரியவில்லை..
என்னா பப்பு இது என்றால், சுடுது இல்ல, அதுக்குதான் என்றாள்...2 :

பாயை சுவரில் சார்த்தி வைத்து பேபி பொம்மையை சறுக்க வைக்கிறாள்.
அப்படியே இருந்தால் பரவாயில்லை..பொம்மை வேகமாக சறுக்குவதை பார்த்து,
அவளுக்கும் சறுக்க ஆசை வர, எங்கள் பாடு பெரும்பாடாகியது!! பாயை இருவர்
பிடித்துக் கொள்ள, அவளை ஒருவர் பிடித்துக் கொள்ள...


3 :இப்படித்தான் நாங்கள் (நானும் பப்புவும்) டீவி பார்ப்போம்..புத்தகம் படிப்போம்!!